Friday, April 29, 2011

உங்கள் போட்டோவையே படங்களின் மீது வாட்டர் மார்க்காக போட

பிளாக்கரில் பதிவு எழுதும் நாம் அனைவரும் பிளாக்கரில் நாம் குறிப்பிடப்படும் செய்தி வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்க நம் பதிவில் அதற்க்கு சம்பந்தமான போட்டோவை இணைப்போம். ஒரு போட்டோ என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது நிபுணர்களின் கருத்தாகும். ஆகையால் நாம் போட்டோவில் போதும் போது வாசகர்கள் அதை எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அப்படி நாம் உபயோகிக்கும் போட்டோவை நம் தளத்தில் மற்றவர்கள் காப்பி செய்யாமல் தடுக்க அந்த போட்டோக்களின் மீது நம் தளத்தின் பெயரையோ அல்லது நம்முடைய பெயரையோ வாட்டர் மார்க்காக போடுவோம். அப்படி வாட்டர்மார்காக எப்படி நம்முடைய போட்டோவையே போடுவது என கீழே பார்ப்போம். இந்த வேலையை சிறப்பாக நமக்கு செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.


மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருள் பயன்படுதுவதர்க்கு மிகவும் எளிதாக உள்ளது. குழைந்தைகள் கூட இந்த மென்பொருளை உபயோக படுத்தும் அளவிற்கு எளிதாக உள்ளது.
  • இந்த மென்பொருளில் வாட்டர் மார்க்காக போட்டோக்களையும், எழுத்துக்களையும் நம் விருப்பம் போல் போட்டு கொள்ளலாம்.
  • போட்டோவின் அளவுகளையும், அடர்த்தியையும் நம் விருப்பம் போல் மாற்றி கொள்ளலாம்.
  • வாட்டர்மார்க்கை போட்டோவில் எந்த இடத்தில் தேவைஎன்றாலும் நகர்த்தி வைத்து கொள்ளலாம். 
  • இது முழுக்க முழுக்க சிறிய அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
  • டவுன்லோட் பட்டனை அழுத்தி முதில் மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் அந்த விண்டோவில் உள்ள Open பட்டனை அழுத்தி நீங்கள் வாட்டர்மார்க் போட விரும்பும் படத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • pinnar நீங்கள் வாட்டர்மார்க்காக போட்டோவை போட ninaithaal Add Image Watermark என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இது போல விண்டோ வந்ததும் மேலே அம்புக்குறியிட்டு காட்டபட்டிருக்கும் காலி இடத்தில் க்ளிக் செய்து நீங்கள் வாட்டர்மார்க்காக வைக்க வேண்டிய படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பின்பு அங்கு உள்ள வசதிகளுக்கு ஏற்ப உங்கள் போட்டோவின் அளவையும், அடர்த்தியையும்(Opacity) வைத்து கொண்டு OK  க்ளிக் செய்தால் உங்கள் படத்தின் மீது வாட்டர்மார்க்காக நீங்கள் தேர்வு செய்த போட்டோ வந்திருக்கும். 
  • அந்த படத்தில் உள்ள வாட்டர்மார்க்கின் மீது க்ளிக் செய்து அதை உங்கள் விருப்பம்போல் நகர்த்தி கொள்ளலாம்.
  • இதே போல நீங்கள் வாட்டர் மார்க்காக வெறும் எழுத்துக்களையும் போட்டு கொள்ளலாம். 
  • வாட்டர் மார்க் செய்து முடித்ததும் File க்ளிக் செய்து Save as என்பதை அழுத்தி படத்தை சேமித்து கொள்ளுங்கள்.

வேலை வாய்ப்புக்கான கூகுல்



வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.
ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்.

அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம். வேலை வாய்ப்புக்கான் கூகுல் என்றும் சொல்லலாம்.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;    http://www.jobsearch.in

இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம்,

நாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம், புகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம் எளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை எழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று தெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு உதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.uploadnsell.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம் உருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே உலக அளவில் விற்கலாம். Choose File என்ற பொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு செய்ய வேண்டும் அடுத்து Product Information என்பதில் நாம் விற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க வேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய தகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும் கொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும் விற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக் செய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது இமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்.

வாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால் வழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos, நாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை எளிதாக விற்க உதவும்.

1G, 2G, 3G,4G என்றால் என்ன?


இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.


1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
 


2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
 


2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
 


3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.  


 4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors): 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]

2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)

செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்!



+2 படித்து முடித்த மாணவர்கள் இராணுவத்தில் MBBS, BE/B.Tech (டாக்டர், எஞ்சினியர் ) இலவசமாக படிக்கலாம். நுழைவு தேர்வில் தேர்சி பெற்றால் போதும், நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் மருத்துவம் பொறியியல் படிக்கலாம். அரசே முழு செலவையும் ஏற்க்கும், ஆனால் இராணுவத்தில் மட்டுமே வேலை பார்க்க முடியும்.

இராணுவத்தில் மருத்துவர்களுக்கு (டாக்டர்) , பொறியாளருக்கு , இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வேலைகளுக்கு இந்திய அரசு இலவசமாக படிக்க வைத்து வேலையும் கொடுக்கின்றது. நல்ல சம்பளமும் கிடைக்கின்றது. அதற்க்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 மட்டுமே. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 19/04/10 ஆகும்.

தகுதி : 12-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 1992-க்கு பிறகு பிறந்திருக்க *-வேண்டும்.

+/தேர்வை பற்றிய முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விளக்கதிற்க்கு இந்த http://www.upsc. gov.in/ இணைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

தொலைந்த எஸ் எம் எஸ் - மீட்பது எப்படி


சில சமயம் நமக்கு வந்த குறுந்தகவலை(SMS) நாம் தெரியாமல் அழித்துவிடுவோம். அதை மறுபடியும் மீட்பது எப்படி என்பது பற்றிய பதிவு இது.
இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். 

முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)



இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.

நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ்.

டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.

அதனுள் 0010001_s,00100011_s என்று பல கோப்புகள் இருக்கும்.

இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).

இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்

உங்கள் கணிணியில் எளிதாக தேட



விண்டோசில் உள்ள மேசைத்தளம் தேடுபொறியை (Windows Desktop Search) எப்படி நமது தேவைக்கேற்றவாறு பயன்படுத்துவது என்பது குறித்த பதிவு.



குறிப்பிட்ட வகை கோப்புகளை தேடுவது:

ext:ppt sales (கோப்புகளை தேட)

ext:ppt filename:sales (கோப்பின் பெயரினை மட்டும் தேட)

ext:doc date:this week (இந்த வாரம் மாற்றிய கோப்புகள் )

date:13-‎09-‎2010..‎24-‎09-‎2010 (இந்த தேதிகளுக்குள் மாற்றிய கோப்புகள் )

kind:pictures date:>23-09-2010 (இந்த தேதியில் எடுத்த படங்கள்)

கோப்புகளின் அளவை வைத்து தேட:

size:gigantic kind:video (மிகப்பெரிய நிகழ்படங்கள் )

size:>500MB ( 500 MB மேல் அளவுடைய கோப்புகள் )

குறிப்பிட்ட போல்டரை தேட:

todo folder:documents (உங்கள் மை டாகுமன்ட்ஸ் போல்டரை தேட)

folder:desktop ext:pdf date:today (இன்று சேமித்த pdf கோப்புகள் )

மின்னஞ்சல்களை தேட(Outlook,Windows Mail):

from:albert date:this week (ஆல்பர்டிடம் இருந்து இந்த வாரம் வந்த மின்னஞ்சல்கள்)

isread:false importance:high (இன்னும் படிக்காத முக்கியமான மின்னஞ்சல்கள்)

hasattachment:true size:>5mb ( 5MB மேல் அளவுடைய மின்னஞ்சல் இணைப்புகள் )

subject:”credit card” from:bank.com (கடன்அட்டை தொடர்பான மின்னஞ்சல்கள் )

இவை சில தான்

ஒட்டுமொத்த அட்டவணையை பார்க்க இங்கே செல்லவும்