Sunday, June 26, 2011

பயர்பாக்ஸ்-சின் புதிய எக்ஸ்டென்ஷன் புரோகிராம்கள்

பயர்பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர் என்பதால், பலரும் அதன் இயக்க வடிவமைப்பு குறியீடுகளைப் பெற்று, கூடுதல் பயன்பாட்டிற்கென ஆயிரக்கணக்கில் எக்ஸ்டென்ஷன் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாகவே கிடைப் பதால், பலரும் இவற்றை டவுண்லோட் செய்கின்றனர்; இன்ஸ்டால் செய்கின்றனர்.
ஆனால் முழுமையாகப் பயன்படுத்து கிறார்களா, என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் கிடைக்கும் எக்ஸ்டென்ஷன் புரோகிராம் களில் நமக்கு அவசியமாய்த் தேவைப்படுபவை எவை என்று பலரும் அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான். இங்கு பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பற்றி விளக்கக் குறிப்புகளைப் பார்க்கலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், செயலாற்றத்தில் விரைவு, செயல் திறன் அதிகரித்து நேரத்தைக் குறைத்திடும் வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

1.எவர்நோட் (Evernote): இன்டர்நெட்டில் தளங்களில் உலா வருகையில், இதன் மீது ஒரு சிறிய குறிப்பினை எழுதி வைத்து, பின்னர் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வரும். எப்படி தளங்களில் உள்ள இணையப் பக்கங்களில் எழுதி வைப்பது? அப்படியே எழுதி வைத்தாலும், மீண்டும் அதனைப் பார்க்கையில், அப்படியே இருக்குமா? என்ற சந்தேகமும் கேள்விக் குறியும் வரலாம். அப்படி ஒரு வசதியைத் தான் Evernote என்னும் எக்ஸ்டன்ஷன் தருகிறது. எந்த ஓர் இணைய தளத்திலும் இதனைப் பயன்படுத்தி குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் அந்த இணைய தளத்தினைப் பார்க்கையில், அக்குறிப்புகள் அங்கேயே இருக்கும். தளங்களை மொபைல் போன் வழியாகப் பார்வையிட்டாலும் அவை கிடைக்கும். தள முகவரிhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/evernotewebclipper
2. கிரீஸ் மங்க்கி (Greasemonkey): இந்த எக்ஸ்டென்ஷனைப் பயன்படுத்தி, இணையத் தேடலுக்கு வசதி தரும் குறியீடுகளை எழுதிக்கொள்ளலாம். தேடல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளை உருவாக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, டூல்பாரில் மியூசிக் கட்டுப்படுத்தும் பட்டன்களை உருவாக்கலாம். ஒருமுறை இதனை டவுண்லோட் செய்தவுடன், அதிகமான எண்ணிக்கையில் ஸ்கிரிப்ட் கள் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜிமெயில் ஸ்டார்ட்டர் ஸ்கிரிப்ட் (Gmail Starter Script) என்னும் ஸ்கிரிப்ட், ஜிமெயில் தளத்தினை, ஒரு பெட்டிக்குள் வைத்துப் பார்க்காமல், திரை முழுவதும் பார்க்க வசதி செய்து தருகிறது. தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/search/?q=Greasemonkey&cat=all&x=8&y =17

3.எக்ஸ்மார்க்ஸ் (Xmarks): டெஸ்க்டாப், ஐபோன், லேப்டாப், டேப்ளட் பி.சி. என அனைத்துவகை சாதனங்களிலும் இன்டர் நெட் உலா வருகிறீர்களா! அப்படியானால், நீங்கள் குறித்து வைத்த தளங்களின் புக்மார்க்குகளை, எப்படி அனைத்து கம்ப்யூட்டர்களிலும் எளிதாகப் பெற முடியும்? இந்த வகையில் உங்களுக்கு உதவுவதுதான் இந்த எக்ஸ்மார்க்ஸ் எக்ஸ்டென்ஷன். புக்மார்க் மட்டுமின்றி உங்கள் பாஸ்வேர்ட் களையும் அனைத்திற்குமாக ஒருங்கிணைத்துத் தரும் வேலையினை இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் மேற்கொள்கிறது. வெவ்வேறு பிரவுசர்களுக்கிடையேயும் இவற்றை இணைத்து, ஒருங்கிணைத்துத் தரும். தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ addon/xmarkssync/ 

4. ஸ்பீட் டயல் (Speed Dial): நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில தளங்களைக் கட்டாயம் தினந்தோறும் பார்த்து பயன்படுத்துபவர்களா? அப்படியானால், அந்த தளங்களை, சொடுக்குப் போட்ட நேரத்தில் உங்களுக்குத் தருவது ஸ்பீட் டயல் எக்ஸ்டன்ஷன். இந்த எக்ஸ்டன்ஷன் அந்த தளங்களை எல்லாம் ஒரு டேப்பில் அமைத்துத் தருகிறது. சிறிய படங்களாக அவற்றின் முகப்பு தோற்றத்தினையும் காட்டுகிறது. இவை அவ்வப்போது ரெப்ரெஷ் செய்யப்படுவதும் இதன் சிறப்பு. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q= Speed+Dial&cat=all&x=25&y=10

5. ரீட் இட் லேட்டர் (Read It Later): விரைவாக உங்கள் விமானம் அல்லது ட்ரெயினில் ஏறிப் பயணம் செய்திடப் புறப்படுகிறீர்கள். அப்போது பார்க்கும் இணையத்தில் உள்ள கட்டுரை மற்றும் தளம் உங்களுக்கு சேவ்செய்யப்பட்டு பின்னர் படிக்கக் கிடைக்க வேண்டும் என்று எண்ணு கிறீர்களா? அங்கே உங்களுக்கு இந்த ரீட் இட் லேட்டர் என்ற எக்ஸ்டன்ஷன் உதவும். ஒரே ஒரு கிளிக்கில், பெரிய கட்டுரையாக இருந்தாலும், நீளமான தளமாக இருந்தாலும் அவற்றை, இந்த எக்ஸ்டன்ஷன் காப்பி செய்து பின்னர் படிக்கத்தருகிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/ ?q=Read+It+Later&cat=all&x=20&y=14

6. ஈஸி யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் (Easy You Tube Video Downloader): வேகமாக இயங்கும் இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், யு-ட்யூப் வீடியோ தொடர்ந்து ஸ்ட்ரீம் ஆகாது. எனவே யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்கள் நம் எதிர்பார்ப்பு களுக்கேற்ப கிடைக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு உதவிக்கு வருவது இந்த ஈஸி யுட்யூப் வீடியோ டவுண்லோடர். யுட்யூப் தளத்திலிருந்து ப்ளாஷ் படங்களை உடனடியாக டவுண்லோட் செய்து, பின்னர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பார்க்க உதவி செய்கிறது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/search/?q =Easy+You+Tube+ Video+Downloader&cat= all&x=16&y=20

7. ஆசம் ஸ்கிரீன் ஷாட் (Awesome Screenshot): ஓர் இணைய தளம் முழுவதுமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமா? ஆசம் ஸ்கிரீன் ஷாட் எக்ஸ்டன்ஷனைப் பயன்படுத்தலாம். திரையில் தெரிவது மட்டுமின்றி, அப்போது காட்டப்படாத பக்கம் முழுவதும் சேவ் செய்து இந்த எக்ஸ்டன்ஷன் தரும். இதனை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அந்த தளங்களின் மீது குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்தலாம். தள முகவரி:https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Awesome+Screenshot&cat=all&x =2 3&y=10

8. அட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus): பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் களில் இது மிகவும் பிரபலமான ஒன்று. திடீரென எழுந்தும், ஊர்ந்து வந்தும், விரிந்து வந்தும் நம் இணைய பயணத்தில் எரிச்சல் ஊட்டும் விளம்பரங்களை இந்த எக்ஸ்டன்ஷன் தடுக்கிறது. இதனை இறக்கிப் பதிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிது. தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/ search/?q=Ad+Blok +Plus&cat=al l&x=23&y=17

மேலே சொல்லப்பட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மட்டுமின்றி, மேலும் சிலவும் நமக்கு பயன்தருவதாக இருக்கலாம். இருப்பினும் பொதுவாக, பெரும்பாலோர் விரும்பும் வசதிகளின் அடிப்படையில் இவை தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் தளத்தில் (https://addons.mozilla. org/enUS/firefox) இவற்றைப் பெறலாம். இந்த தளம் சென்று, அதில் காட்டப்படும் தேடல் கட்டத்தில், தேவையானதை டைப் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுத்து, பின்னர் அந்த தளம் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை.

நான் ஒரு சீனியர் சிட்டிசன். பெற்றோருக்கு ஒரே புதல்வனாகப் பிறந்து, செல்லமாக, தனிமை வாழ்க்கையே வாழ்ந்தேன். பட்டப்படிப்பு முடிந்த வுடன் திருமணம்; அழகான, அன்பான மனைவி. அவள் வந்தபின் வாழ்வே வசந்தமானது; பொருளாதார நிலையும் பெரும் ஏற்றமடைந்தது. ஒரு ஆண், மூன்று பெண் என, குழந்தைகள் பிறந்து, தனி மரம் தோப்பானது. செல்வச் செழிப்புடனே பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, அவரவர் குழந்தைகளுடன், என் பெற்றோர் சேர்ந்து வாழ்வே மிகவும் இன்பமயமாகச் சென்றது.
யார் கண் பட்டதோ, என் மகனின் ஊதாரித்தன மான செயல்களால், குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும், எல்லாவற்றையும் என் தந்தை பொறுமையுடன் கையாண்டார். என் மணிவிழாவிற்குப் பின், பெரும் புயல் வீசி, நான் தற்போது திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவிக்கிறேன். என் மகனின் ஊதாரித்தனத்தால் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மென்மையான குணம் படைத்த என் தந்தை, மனம் வெதும்பி மரணமடைந்தார். அவரை இழந்த, 15வது நாளில், என் தாயையும் இழந்தேன். எல்லாவற்றிற் கும் சிகரம் வைத்தது போல் என் குடும்பத் தூணாக இருந்த, என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தாள். இரண்டு வருடங்களில் என் மேல் அக்கறை கொண்ட மூவரையும் இழந்து, நடை பிணமானேன்.

இதன் பின்னும், என் மகன் தன்னை மாற்றிக் கொள்ளாமல் நடந்ததால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. அதை நான் கண்டித்ததால், என்னை எதிரியாக நினைத்து, மிகவும் தரக் குறைவாகப் பேசுவதுடன், சொத்து ஒன்றையே குறிக்கோளாக நினைத்து, என்னைத் தனிமைப்படுத்தி, எல்லாத் தொல்லைகளையும் கொடுக்கிறான். பெற்ற மகன் இருந்தும், எந்தத் துணையுமின்றி, முதுமையில் தனிமைக் கொடுமையை அனுபவித்து வருகிறேன்.
பெண் பிள்ளைகள் ஆதரவு காட்டினாலும், அவர்களுடன் சேர்ந்து இருக்க மனமில்லை. ஏதாவது இல்லத்தில் சேர்ந்து விடலாமென்றால், என் சொந்த ஊரை, மற்ற உறவினர்களை, பழகியவர்களைப் பிரிந்து செல்ல மனம் வரவில்லை. உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்ள நினைத்தால், யாரும் கிடைக்கவில்லை. யாராவது, ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்துப் பெற்றவர்களையோ துணைக்கு வைத்துக் கொள்ளலாமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற தயக்கம் ஏற்படுகிறது. இந்தச் சகோதரன், மீதி நாட்களை அமைதியாக கழிக்க, வழிகாட்டும்படி அன்புடன் வேண்டுகிறேன்

அன்புள்ள சகோதரருக்கு —

உங்களது அனாதரவான நிலையை உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். எனினும், உங்களது கடிதத்தில் கீழ்கண்ட விவரங்கள் இல்லை.

1.உங்களின், உங்களின் பெற்றோர், மனைவி, மகன், மகள்கள் வயது விவரம்.

2.நீங்கள் என்ன பணி செய்தீர்கள், ஓய்வூதியம் கிடைக்கிறதா?

3.குடும்பத் தொழில் என்ன செய்தீர்கள்?

4.சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டீர்களா? பிரிந்து கொடுத்திருந்தால், உங்களுக்கென்று தனியாக பங்கு பிரித்திருக்கிறீர்களா? சொத்துகளை பாகப் பிரிவினை செய்தீர்களா, தானமாக எழுதிக் கொடுத்தீர் களா?

5.உங்கள் மகன் என்ன வகையான ஊதாரித்தனம் செய்தார்?

6.ஓய்வூதியம் தவிர, உங் களுக்கு வேறுவிதமான வருமானம் உள்ளனவா?

7.உங்களது ஊதாரி மகன் என்ன வகையான தொல்லைகள் கொடுக்கிறார்?

8.உங்களின் சொந்த ஊர் எது?

9.நீங்கள் இந்து மதத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்?

10.உங்களின் மகனின் ஊதாரித்தனமான நடத்தைக்கு, நீங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறீர்களா?

மேற்சொன்ன விவரங்களும் உங்கள் கடிதத்தில் இருந்திருந்தால், உங்களது கடிதத்திற்கு இன்னும் சிறப்பான ஆலோசனை வழங்கி இருப்பேன்.

உங்களது தந்தை காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறீர்கள். அப்போது, எல்லா பிரச்னை களையும் உங்களது தந்தையே கையாண்டிருக்கிறார். அந்த சமயத்தில், நீங்கள் குடும்ப நிர்வாக சிக்கல்களில் சிக்காமல், சுதந்திரமாக இருந்திருக்கிறீர்கள். உங் களது தந்தையின் மரணத்திற்கு பின், உங்கள் மகன் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளீர் கள். உங்களது மகனுக்கு, நாற்பது வயது இருக்கக் கூடும். இனி, பட்டு திருந்துவார் என நம்புகிறேன்.

இனி, உங்களின் பிரதான கேள்விக்கு வருவோம்...

ஆதரவற்ற விதவைகளையோ, விவாகரத்து பெற்றவர்களையோ அல்லது வேலையாள் ஒருவரையோ துணைக்கு வைத்துக் கொள்ள நினைக்கிறீர்கள். இந்த இடத்தில், துணைக்கு என்றால் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என நினைக்கிறீர்கள்.

வருடத்தை மூன்றாக பிரித்து, நான்கு மாதங்களுக்கு ஒரு மகள் வீட்டில் தங்கலாம் நீங்கள்; தங்குவதற்கு பணம் அளிக்கலாம்.

காவல் துறையின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சி மூலம், பணிப் பெண்ணை அமர்த்திக் கொள்ளலாம்.

மறுமணம் செய்வது உங்களது திட்டமென்றால், உங்களது மகள்களிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது மறுமணம், உங்களது ஊதாரி மகனை மறை முகமாக பழிவாங்க என்றால், மறுமணம் வேண்டாம். விவாகரத்து பெற்றவர்களை விட, ஐம்பது வயது விதவைப் பெண்ணை தேர்ந் தெடுப்பது நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதவைப் பெண், உடல் ஆரோக்கியம் பெற்றவராக இருப்பது நல்லது.

உங்களது வயது, 63 என்றால், இன்னும், 25 ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள் என வைத்துக் கொள்வோம். 25 து12 = 300 மாதங்கள். ஒரு மாதச் செலவு, 15,000 - 20, 000 ரூபாய் என கொள்வோம். முன்னூறு மாதங்களுக்கு, அறுபது லட்சம் ரூபாய் ஆகிறது. 

ஒன்று, நீங்கள் மறுமணம் செய்து கொள்ள உங்களிடம், அறுபது லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தோ அல்லது மாதம், இருபதாயிரம் நிலையான வருமானமோ இருக்க வேண்டும். சரியாக பெண்ணை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், வரும் பெண் உங்களது மகனை விட, பத்து மடங்கு அதிகம் தொல்லைக் கொடுப்பார்; ஜாக்கிரதை. விதவைப் பெண்ணை உங்களது சொந்த ஊரில், சொந்தத்தில் தேடுங்கள். உங்களிடம் தாம்பத்யம் மேற்கொள்ளும் திடமிருந்தால், தாம்பத்யம் தேவைப்படும் பெண்ணை தேர்ந்தெடுங்கள்; தாம்பத்யம் பண்ணும் திறனை உடலாலும், மனதாலும் இழந்திருந்தீர்கள் என்றால் தாம்பத்யம் தேவைப்படாத பெண்ணை தேர்ந்தெடுங்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களை கருவறையில் சுமந்த தாய் போல, உங்களை கருவறைக்கு வெளியே சுமந்த மனைவி போல ஒரு பெண் கிடைக்கவே மாட்டாள்.

உங்கள் ஹார்ட் டிஸ்கில் இடம் போதவில்லையா? ஆன்லைன் ஹார்ட் டிஸ்க்


என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந் தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஆன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும். 

இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பதுதான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் (Windows Live Sky Drive) வசதியாகும். 

இந்த ட்ரைவில் பைல்களை சேவ் செய்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேவ் செய்திடலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 போட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு உண்டு. அத்துடன் இந்த பைல்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட் (Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு (Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக் (Public) என வகைப்படுத்த வேண்டும். 

இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்? http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி, ஒரு மெம்பர் ஆக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்கள் பைல்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம். 

இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் வைக்காமல் ஆன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் பிஷ்ஷிங்

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன.
எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள் போன்ற எச்சரிக்கைகள் மட்டும் இப்போது சரி வராது. மேலும் பல புதிய வழிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்திய தூண்டுதல் வழி முறைகளை ஆய்வு செய்து சில வழிகளைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


1. நண்பர்களை எப்போதும் நம்பாதீர்கள்: பலமுறை நாம் இந்தப் பக்கங்களில் எழுதியபடி, பிரபலமான வங்கிகளின் பெயர்களில், நம் வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட் கேட்டு வரும் இமெயில்கள் குறித்து நாம் கவனமாகவே இருக்கிறோம். இவை எப்போதும் போலியாகவே உள்ளன. இதனால் தான், பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் இன்டர்நெட் வழி கணக்கினைத் திறக்கும் முன்னரே, தங்கள் வங்கி எப்போதும் இது போன்ற தகவல்களைக் கேட்டதில்லை; கேட்கவும் மாட்டோம் என அறிவிக்கின்றனர். ஆனால் தற்போது நம்மை மாட்ட வைக்கும் இமெயில்கள், நம் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் குடும்பத் தினரிடமிருந்து வருபவையாக உள்ளன. இதனால், நாம் உடனே அவை பற்றி இரண்டாம் சிந்தனை இல்லாமல், லிங்க்குகளில் கிளிக் செய்து விடுகிறோம். அவை நம்மை மாட்ட வைக்கும் தளங்களுக்கும், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கும் வழி அமைக்கின்றன. எனவே எத்தகைய உறவு முறை உள்ளவர்களிடமிருந்து, லிங்க்குகளோடு வரும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து அவர்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே, அந்த அஞ்சலில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டும். 
2.நம்மை செயல்படாமல் வைத்தல்: சென்ற மே மாத இறுதியில், ஹாட்மெயில் தளத்திற்கு வந்த மின்னஞ்சல் செய்திகளில் ஒரு புதிய வழிமுறையை ஹேக்கர்கள் பின்பற்றியதாக, ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வகையில் மின்னஞ்சல் செய்திகள் தனி நபர்களைக் கவரும் வகையில் வெளியிடப்படுகின்றன. அஞ்சல்கள் முன் தோற்றப் பார்வையில் காட்டப்பட்டு, அதன் வழியிலேயே, அக்கவுண்ட் வைத்திருப்போரைக் கவிழ்த்திடும் வழிகள் தரப்பட்டிருந்தன. இதில் உள்ள ஒரு ஸ்கிரிப்ட் தானாக இயங்கி, மெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் தனி நபர் தகவல்களைத் திருடும் வழிகளை மேற்கொள்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் குறித்து தகவல்கள் வந்தவுடன், மைக்ரோசாப்ட் உடனே அதனைச் சரி செய்தது. இருப்பினும் பாதிப்பு பன்னாட்டளவில் அதிகமாகவே இருந்தது.

ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தில் புகுத்தப்பட்ட கெடுதல் வழி வேறு மாதிரியாக இருந்தன. இந்த கெடுதல் வழிகள், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை ஆய்வு செய்து, வைரஸ்களைக் கண்டறியும் குறிப்புகளைச் செயல் இழக்கச் செய்து, தங்கள் வேலையை முடித்துக் கொண்டன. 

3.தொடரும் நாசம்: ஒரு கம்ப்யூட்டரைத் தாக்கியவுடன், தொடர்ந்து அதனையே தாக்குவதற்கான வழிகளையும் இந்த கெடுதல் வழிகள் கொண்டிருக்கின்றன. ஏனென்றால், ஒருமுறை தனி நபர் தகவல்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பயன்படுத்தி தொடர் அழிவு வேலைகளை மேற் கொள்வது இவற்றிற்கு எளிதாகிறது.

4. புதிய அறிவுரைகள்: வழக்கமான எச்சரிக்கைகளுடன், ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் புதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. மின் அஞ்சலில் ஏதேனும் இணைய தளத்தின் முகவரிக்கான லிங்க் தென்பட்டால், அதன் சொற்களில் உள்ள எழுத்துக்களில் மாறுதலான எழுத்துக்கள் உள்ளனவா என்று கவனிக்க வேண்டும். இந்த தளங்கள் மைக்ரோசாப்ட், யாஹூ, கூகுள் மற்றும் பிரபலமான தளங்களின் பெயர் களோடு தள முகவரியைக் கொண்டிருக்கும். ஆனால் உற்று நோக்கினால், இவற்றின் பெயர்களோடு ஒன்றிரண்டு எழுத்துக்கள் இணைக்கப் பட்டு, கெடுதல் விளைவிக்கும் தளங்களுக்கான முகவரிகளாக இருக்கும்.

ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற பிரபல மெயில் தளங்கள் தொடக்கத்தில் காட்டப்பட்டு, அடுத்தடுத்த மெயில்களைக் காட்டாமல், அது சரியில்லை, இது சரியில்லை என்று பிழைச் செய்தி வருகிறதா? இணைய இணைப்பு இருக்கும்போதே, எந்த தளமும் கிடைக்க மறுக்கிறதா? உங்கள் டி.என்.எஸ். சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்ற பிழைச் செய்தி கிடைக்கிறதா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்ட இந்த வகை கெடுதல் விளைவிக்கும் வழிகளுக்குப் பலியாகி விட்டதென்று பொருள். 

மைக்ரோசாப்ட் மற்றும் பிற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் தரும் அப்டேட் பேட்ச் பைல்களை இயக்கி வைக்கவும். அப்படியும் சரியாகவில்லை என்றால், நல்ல நிலையில் கம்ப்யூட்டர் இயங்கிய போது ஏற்படுத்திய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்லவும்.

ஆனால் இவை எல்லாம் நிரந்தரத் தீர்வாகிவிடாது. பொறுமையாக அனைத்து மின்னஞ்சல்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து, கவனமாகச் செயல் படுவதே நல்லது.

நாவில் துளையிட்டு விரல் விட்டு ஆட்டிய பெண்!!(படஇணைப்பு)


சாதிக்கத்தான் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாக தங்களை நம்பும் மனிதர்கள் எதையாவது செய்து உலகின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பி விடுகிறார்கள். அப்படி சாதித்த ஒரு பெண்மணியின் செய்திதான் இது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த எலைன் டேவிட்சன்


என்ற பெண்மணிதான் இந்த கொடுஞ்சாதனைக்குச் சொந்தக்காரி. 2003, நவம்பர் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள டேட் மாடர்ன் ஆர்ட் கேலரியில் உடல் எங்கும் 1903 இடங்களில் குத்திக் கிளறி அணிகலன்களை அணிந்து காட்டிய கொடிய சாதனையை அவர் நிகழ்த்தினார், போதாது என்று நாக்கில் ஒரு ஓட்டைப் போட்டு, தன் விரல் ஒன்றை விட்டுக்காண்பித்தார். இப்படியெல்லாம் சாதிக்கிறாங்களே என்ன கொடுமையடா சாமி!



திறந்த மார்பகத்துடன் சுற்றித் திரிய விரும்பும் பிரிட்டிஷ் பெண்கள்!


பிரிட்டிஷ் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கு திறந்த மார்பகத்துடன் சுற்றித் திரிவதையே பெரிதும் விரும்புகின்றனர். ஐந்தில் ஒரு பிரிட்டிஷ் பெண்கள் இந்த விருப்பம் உள்ளவர்கள் என்பது அண்மையில் நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


 கிழக்கு ஆங்கிலேயப் பெண்களுள் 28 வீதமானவர்கள் வெளிநாடுகளில் அரை ஆடையுடன் தான் திரிகின்றனர். மேலும் இவர்கள் சூரியக்குளியலில் தினசரி சுமார் நான்கு மணித்தியாலங்களைச் செலவிடுகின்றனர். இந்த துகில் உரியும் விருப்பத்தில் இரண்டாம் இடத்தில் ஸ்கொட்லாந்துப் பெண்களும், மூன்றாம் இடத்தில் வட அயர்லாந்துப் பெண்களும் உள்ளனர். 35 – 44 வயதுக்கு இடைப்பட்டப் பெண்களிடம் இந்தப் பழக்கம் அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Saturday, June 25, 2011

மொபைல் உலக கிசுகிசு

மொபைல் போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. ஆனால் நோக்கியா நிறுவனம் இதனை வன்மையாக மறுத்தது. தற்போது நோக்கியாவும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பதில் முனைப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

விண்டோஸ் போன் 7 சிஸ்டம் வந்த பின்னர், நோக்கியா தன் மந்த நிலையைப் போக்கப் பல முயற்சிகளை எடுக்க வேண்டும் என மொபைல் போன் உலகக் கணிப்புகளை வெளியிடும் வல்லுநர்கள் தெரிவித்தனர். ஏனென்றால், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் வரவு, நோக்கியா நிறுவனத்திற்கு விட்ட சவால்களாகவே அமைந்து வருகின்றன. இதிலிருந்து நோக்கியா நிச்சயம் மீண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்க முயற்சிப்பதாகவும், வதந்திகள் உலா வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இதற்கெனத் தரப்படும் தொகை 2,000 கோடி டாலராக இருக்கலாம். முன்பு மைக்ரோசாப்ட் ஏறத்தாழ 1,900 கோடி டாலர் தர இருப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால், நோக்கியா இவை அனைத்திலிருந்து மீண்டு வரும் எனவே பலரும் கருதுகின்றனர்.