அதிமுகவினர் தங்களது கனவிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு செயலை பொதுசெயலாளர் ஜெயலலிதா இன்று செய்துள்ளார். தனது ஆருயிர்த் தோழியான சசிகலாவை அதிமுகவை விட்டு அதிரடியாக தூக்கி எறிந்துள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அவரது மன்னார்குடி குடும்ப வகையறாவையே ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு தூக்கி விட்டார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை படு வேகமாக பரவியுள்ளது,
முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, எம்.நடராஜன் (சசியின் கணவர்), வி.என்.சுதாகரன் (சசியின் அக்காள் மகன்), வி.என். திவாகரன் (சசியின் அக்காள் மகன்), டிடிவி தினகரன் (சசியின் அக்காள் மகன்), பாஸ்கரன் (சசியின் அக்காள் மகன்), டாக்டர் வெங்கடேஷ் (சசியின் உறவினர்), ராவணன் (சசியின் உறவினர்), அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
|
No comments:
Post a Comment