Monday, December 19, 2011

ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய சவுண்டான தளம் இது.

ஒரு அழகான பறவையின் படத்தை காலண்டர் ஒன்றில் பார்க்கிறோம். அந்த பறவையின் அழகில் ரசிக்கும் நாம் அதன் பெயரைக் குறித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் அது எப்படிக் கூவும் என்று அறிந்து கொள்ள முயற்சிக்கிறோமா? இல்லை; ஏனென்றால் எங்கு போய் அதனை அறிந்து கொள்வது என்ற எண் ணத்தில் விட்டுவிடுகிறோம். 

நம் தேடுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றும் கம்ப்யூட்டர் சர்ச் இஞ்சின்கள் இது போன்ற சத்தத்தைத் தேடும் சர்ச் இஞ்சின் எதனயாவது உரு வாக்கி உள்ளனவா என்று என் நண்பரைக் கேட்ட போது சான்ஸே இல்லை என்று கை விரித்தார். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ந்து இணையத்தில் தேடுகையில் அதற்கென ஓர் இணைய தளம் இருப்பது கண்டறியப்பட்டது. http://www.findsounds.com/ என்பது அந்த தளத்தின் முகவரி. 

இந்த தளம் சென்றால் ஒலிகளைத் தேடப் பல வழிகள் உள்ளன. ஒலிகளைச் சொற்களாகக் கொடுத்து அது எப்படி இருக்கும் என அறியலாம். மியாவ், கர்ர்ர்ர் என் றெல்லாம் கொடுத்து அந்த ஒலியினைக் கேட்கலாம். இந்த ஒலிக்கான பைல் எந்த பார்மட்டில் இருக்க வேண்டும் என் பதனையும் நீங்கள் உங்கள் ஆப்ஷனில் வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் எந்த பார்மட்டை உங்கள் கம்ப்யூட்டர் இயக்குமோ அந்த வழியில் பெற்றால் தானே கேட்க முடியும். 

அடுத்து விலங்கு, பறவைகளின் பெயர்களைக் கொடுத்து அவற்றின் வெவ்வேறு விதமான ஒலியைக் கேட் கலாம். உங்கள் தேடலுக்கான வேறு வேறு ஒலிகளின் பைல்கள் இருக்கும் தளங்களின் அல்லது பைல்களின் முகவரிகள் கொடுக்கப்பட்டு அருகேயே ஒரு ஸ்பீக்கரின் படமும் இருக்கும். அதில் கிளிக் செய்தால் ஒலி கிடைக்கும். ஒலி அலை எப்படி இருக்கும் என்று படமாகவும் காட்டப்படுகிறது. இதன் மூலம் ஒன்றின் ஒலியை இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து கேட்கலாம். 

இன்னும் என்னவெல்லாம் கேட்கலாம் என்று தெரிந்து கொள்ள ஆசையா? கீழாக Need Examples என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் இயற்கை, விலங்குகள், இசைக் கருவிகள், விடுமுறைநாட்கள், வீட்டில் உள்ள சாதனங்கள் (nature, animals, musical instruments, holidays, household) என இதன் பட்டியல் பெரிதாக உள்ளது. எந்த பிரிவையும் கிளிக் செய்து தேடும் ஒலியினைப் பெறலாம். 

எத்தனைதான் இருக்கிறது? ஒரு வழி காட்டக் கூடாதா? என்று எண்ணுகையில் இதன் ஹெல்ப் மெனு நமக்கு உதவுகிறது. இதில் என்ன வகை பார்மட்டில் சவுண்ட் பைல்கள் கிடைக்கின்றன, ரெசல்யூசன் எவ்வளவு, அவற்றை இயக்க என்ன புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் எனப் பல வழிகளில் நமக்கு உதவிக் குறிப்புகளைத் தருகிறது. நான் இந்த தளம் சென்று பூனையின் குரல் எப்படி எல்லாம் இருக்கும் என்று பார்த்தேன். முதலில் ஒலி குறைவாக இருந்ததால் ஸ்பீக்கரின் அளவை உயர்த்தி கிளிக் செய்தேன். 

பூனையின் சத்தம் வந்தது; என் வீட்டுப் பூனை என் அருகே வந்து கம்ப்யூட்டரைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்து. அதில் நீ என்னைப் போல் சத்தம் போட்டு பார்த்தாயா? என்ற கோபக் கேள்வி இருந்தது. அடுத்து சோஷியல் அனிமல் என அழைக்கப்படும் மனிதனின் குரல் எப்படி இருக்கிறது என்று இது காட்டுமா என்ற கேள்வியுடன் ட்ச்ண என டைப் செய்து பார்த்தேன். பல பைல்கள் பட்டியலிடப்பட்டன. 

மனிதன் ஒவ்வொரு வேளையிலும் எப்படி எல்லாம் குரலிடுவான் என பலவகையான சத்தம் வந்தது. பயந்து போய் வெளியேறினேன். 

No comments:

Post a Comment