உலகிலுள்ள 14பேரில் ஒருவர் பேஸ்புக் அங்கத்தவர்களாக உள்ளனர். கடந்தவாரம் வரையில் 520மில்லியன் அங்கத்தவர்கள் மாதமொன்றுக்கு 70 ஆயிரம் கோடிநிமிடங்களை அங்கத்தவர்கள் இணையத்தளத்தில் செலவழிக்கின்றனர் 150 மில்லியன் பேர் தமது கைத்தொலைபேசிகளில் பேஸ்புக் இணைப்பைக் கொண்டுள்ளனர். ஒரு அங்கத்தவருக்கு சராசரியாக 130 நண்பர்கள் தற்போதைய நிலையில் உலகளவில் வயது வித்தியாசமின்றி மிகவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற அன்றேல் பரவி வியாபித்துவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் பேஸ்புக் என்பதாகத்தான் இருக்க முடியும்.
2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக் இணையத்தளத்தில் இவ்வாண்டு ஜுலை மாதத்தில் 500மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள்; அன்றேல் பயனாளர்கள் உள்ளதான தகவல் ஆச்சரியமிக்கதாகவே அமைந்திருக்கும்.
பேஸ்புக் இணையத்தளத்தில் முதல் 100 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துகொள்வதற்கு 1665நாட்கள் எடுத்தன .2008ம் ஆண்டு ஒகஸ்ற் 26ம்திகதியே 100 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது.
அதற்குப்பின்னர் அசூர வேகத்தில் பேஸ்புக்கின் அங்கத்துவம் கூடிக்கொண்டு செல்கின்றதை நோக்கமுடியும் 100மில்லியனில் இருந்து 200மில்லியன் எண்ணிக்கையைத் தொடுவதற்கு 225நாட்களும் 300மில்லியனைத் தொடுவதற்கு 160நாட்களும் 400மில்லியன் எண்ணிக்கையை எட்டுவதற்கு 143நாட்களும் 400ல் இருந்து 500மில்லியனைத் தொடுவதற்கு 166நாட்களும் எடுத்துள்ளன.
தினமும் லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதிதாக பேஸ்புக் அங்கத்தவர்களாக இணைந்துகொண்டிருப்பதன் காரணமாக ஜுலை மாத பிற்பகுதியில் 500மில்லியன்களை எட்டிய பேஸ்புக் இணையத்தளத்தின் ஒக்டோபர் ஆரம்பத்தில் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 520மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது.
அமெரிக்கா கனடா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் 40 வீதத்திற்கு அதிகமானவர்கள் பேஸ்புக்கின் தீவிர அங்கத்தவர்களாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. உலகளவில் பேஸ்புக் வளர்ச்சி வரைபு பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு சராசரியாக 130 இணைய நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் 14 பேரில் ஒருவர் தற்போது பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் என்ற செய்தி ஒருபக்கம் அதன் அசூர வளர்ச்சியைக் காண்பித்தாலும் மறுமுனையில் நமது சமூகத்தில் ஏற்பட்டுவருகின்ற சமூக கலாசார மாற்றத்தினையும் காண்பித்து நிற்கின்றதென்றே கூறவேண்டும் . ஓய்வின்றி மக்கள் உழைத்துக்கொண்டிருக்கின்ற பரபரப்பான உலகத்தில் நண்பர்களின் பிறந்தநாள்களை நினைவில் வைத்திருப்பது ஒருநண்பரின் இணையத் தோட்டத்திற்குள் சென்று பச்சியை விடுவது காய்கறிகளைப் பரிசளிப்பது என்பதையெல்லாம் பேஸ்புக் வந்ததன் பின்னரே சாத்தியமாகின. பிறந்தநாள் திருமணங்கள் பட்டமளிப்பு விழாக்கள் பதவியுயர்வுகள் வருடாந்த நிறைவு தினக்கொண்டாட்டங்கள் போன்ற பல தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கூட சுடச்சுட பேஸ்புக் ஊடாக பரிமாறப்படுகின்றன தகவல்கள் மட்டுமன்றி புகைப்படங்களும் ஏன் பிடித்த பாடல்களும் கட்டுரைகளும் கூட பேஸ்புக்கில் பரிமாறப்படுகின்றன.
வீடுகள் அலுவலகங்கள் பொது இடங்கள் ஏன் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் தாம் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பேஸ்புக் இணைய வலையமைப்பில் அதிகமதிகமாக நேரத்தை செலவிட்டு வருவதனை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .
பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்கள் ஒவ்வொருமாதமும் அண்ணளவாக 700 பில்லியன் நிமிடங்களை செலவிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன .
ஓவ்வொரு மாதமும் பேஸ்புக் அங்கத்தவர்கள் 30பில்லியனுக்கு அதிகமான புகைப்படங்கள் செய்திக் கட்டுரைகள் இணையத்தளங்களுக்கான தொடர்புக் குறிகாட்டிகள் போன்றவற்றை பேஸ்புக் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பேஸ்புக் என்பது ஒரு தனிநாடாக கருதப்படுமானால் அது சீனாவிற்கு இந்தியாவிற்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்டநாடாக இருக்கும் அத்தோடு பேஸ்புக் 70 உத்தியோகபூர்வ மொழிகளில் உள்ளமையால் அதன் பல்கலாசாரத்தன்மையை எந்தவொருநாட்டாலும் இலகுவில் எட்டிவிடமுடியாது இது பேஸ்புக்கின் பாரிய பரிணாமவளர்ச்சிக்கு சான்றுபகர்வதாகவும் அமைந்திருந்தது.
உலகில் இலங்கை உட்பட 212 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் .ஆகக்கூடுதலாக அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக பேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்கா திகழ்கின்றது அமெரிக்காவில் 133மில்லியன் பேர் பேஸ்புக் அங்கத்தவர்களாக திகழ்கின்றனர். 260 அங்கத்தவர்களுடன் ஆகக்குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக நாரு(யேரசர) உள்ளது.
முதல் பத்து நாடுகள்
அமெரிக்கா - 133 மில்லியன்
பிரித்தானியா- 28 மில்லியன்
இந்தோனேசியா- 27 மில்லியன்
துருக்கி- 24 மில்லியன்
பிரான்ஸ்- 19 மில்லியன்
இத்தாலி- 17 மில்லியன்
பிலிபைன்ஸ் 16 மில்லியன்
கனடா- 16 மில்லியன்
மெக்ஸிகோ 15 மில்லியன்
இந்தியா- 13 மில்லியன்
இலங்கையில் பேஸ்புக்கின் தாக்கம் எப்படியுள்ளது?
674,480 அங்கத்தவர்களுடன் இலங்கை இந்த வரிசையில் 74வது இடத்திலுள்ளது .இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3.14வீதமென்பதுடன் இணைய வசதியுடையவர்களில் மூன்றிலொரு பங்கு(37.97மூ) என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது
இலங்கையில் பேஸ்புக் அங்கத்தவர்களில் 435,040 பேர் ஆண்களாகவும் 228,740 பேர் பெண்களாகவும் உள்ளனர்
அறிமுகமான ஆரம்பத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே பிரபலமாகியிருந்த பேஸ்புக் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்களையும் வேகமாக கவர்ந்து அதன் வலையமைப்பில் உள்வாங்கிவருகின்றது.
காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்படி அன்றேல் தேநீர் கோப்பி அருந்துவது போன்று தற்போது காலை எழுந்ததுமே பல்துலக்காமல் பேஸ்புக் பார்க்கும் பழக்கம் ஒருசாரரிடையே ஏற்பட்டுள்ளது காலையில் மாத்திரம் என்றால் பரவாயில்லை நாள் பொழுதிலும் ஏன் பின்னிரவுவேளையிலுமே பேஸ்புக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இலங்கையிலுள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுவதனை அறியமுடிகின்றது காலையில் வேலைக்கு வந்தவுடனேயே இறைவனுக்கு வழிபாடுசெய்கின்றனரோ இல்லையோ பேஸ்புக் இணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே பணியை ஆரம்பிக்கின்றனர் பணியாளர்கள்; அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிட்டு நேரடிவீணடிப்பு செய்வதால் சில நிறுவனங்களில் பேஸ்புக் பார்ப்பதையே தடைசெய்கின்ற நிலைமையும் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது இதே நிலைதான் உலகின் ஏனைய பல இடங்களிலும் காணப்படுகின்றது.
பேஸ்புக் என்ற கட்டாற்றுவெள்ளத்தில் அதனை விரும்பாதவர்களும் இழுத்துச்செல்லப்படுவது தவிர்;க்க முடியாததாகிவிட்டுள்ளது பேஸ்புக் ஏற்படுத்திவிட்டுள்ள கலாசார மாற்றம் என்பது நம்மால் அதனை புறக்கணித்துவிட்டு இருந்துவிடமுடியாது என்பதையே யதார்த்த நிலை உணர்த்திநிற்கின்றது இதற்கு உதாரணமாக பேஸ்புக்கில் இணைய தனிப்பட்டரீதியில் ஒருவர் விரும்பாதவிடத்தும் தமது உறவினரின் புகைப்படத்தை பார்பதற்கோ அன்றேல் தமது நிறுவனத்தினை விளம்பர ஊக்குவிப்பிக்காகவோ இதில் இணைந்துகொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டமுடியும்.
பேஸ்புக்கை நாம் மூன்றாம் தரப்புவிடயம் என புறக்கணத்து இருந்துவிடமுடியாது என்பதற்கு அதன் சமூகத்தில் அது ஆழமாக ஊடுருவியிருப்பதும் மற்றுமொரு முக்கிய காரணமாகும் .பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் பிள்ளைகள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் அன்றேல் சகோதரர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் .அந்த வகையில் இதனை அறிந்துவைத்திருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியும் உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக் துணைசெய்கின்றது என்பதே பேஸ்புக் இணையத்தளத்தின் விருதுவாக்காக உள்ளது ஒருகோணத்தில் பார்த்தால் இது மிகவும் உண்மை போன்றே தெரிகின்றது.
ஆனால் பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்துக்கொண்டு அதனை தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் செய்திகளையும் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் .
பேஸ்புக்கின் சார்பாக குரல் கொடுப்பவர்கள் அதிலே ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்கின்ற வடிவமைப்புக்களைச் செய்யமுடியும் என தமது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.
இருந்தபோதிலும் பேஸ்புக்கினால் பல அபாயங்கள் உள்ளதாகவும் அதிலே முக்கியமான கவனிக்கப்படவேண்டடிய மறைவான ஐந்து அபாயங்களை இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
அபாயங்கள்
எமது விபரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன பேஸ்புக் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும் போது இரகசியத்தன்மை கட்டமைப்புக்கள் பாதுகாப்புக்குறைவான நிலைக்கு தள்ளப்படுகின்றது
பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றியே கணனிகளின் மென்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் நாசகார மென்பொருட்களை தாங்கிவரக்கூடியவை
உங்களது உண்மையான நண்பர்கள் தெரியாமலேயே உங்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டுசெல்கின்றனர் வேண்டத்தகாதவர்கள் உண்மையான பெயர்களில் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்குகின்றனர்
பேஸ்புக்கை மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற நவீன ஊடகமாக பார்க்கப்படுகின்றது. குரலற்ற மக்களின் குரலாக பேஸ்புக்கை பயன்படுத்தப்படுவதை பல்வேறு செய்திகளின் போது நாம் அவதானிக்கின்றோம் .உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்ற மக்களின் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரதான மற்றும் பாரம்பரியரிய ஊடகங்களால் மறைக்கப்படுகின்ற செய்திகளை பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்.
மறுமுனையில் இந்திய அரசிற்கு சார்பானவர்கள் காஷ்மீர் பிரச்சனை பற்றிய தமது நிலைப்பாடுகளைத் தாங்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமை காணமுடியும்.
விரும்பத்தகாத தகவல்கள் பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக அதற்குள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி தகவல்களை சேகரிப்பதான செய்திகளும் கடந்தநாட்களில் வெளியாகியிருந்தன பேஸ்புக்கிற்கு எதிரான முறைப்பாடுகள் தமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்துதல் திரிவுபடுத்துதல் தவறாக பிரசுரித்தல் ஆகியனவே பேஸ்புக்கிற்கு எதிரான உலகளாவிய முறைப்பாடுகளில் பொதுவானதாக காணப்படுகின்றது.
இலங்கையில் கூட பேஸ்புக் குறித்து பல முறைப்பாடுகள் வெளியாகியிருப்பதை செய்திகளில் பார்த்திருக்கின்றோம் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளில் அனேகமானவை நண்பர்களாக இருந்து பின்னர் கோபித்துக்கொண்டவர்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் பேஸ்புக்கில் இருந்தோ வேறு இணையத்தளங்களில் இருந்தோ தரையிறக்கம் செய்த புகைப்படங்களை திரிவுபடுத்தி ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் அன்றேல் வேறு இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளமை பற்றியதாகவே உள்ளதென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சி ஐ பாலச்சந்திர தெரிவித்தார் .
கருத்துவெளியிடுகையில் என இவ்வாறான ஆறு பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எனக் குறிப்பிட்டாh.; இதனைத்தவிர போலிவிபரங்களைத் தெரிவித்து சிறுவயது பெண்களுடன் காதல்தொடர்புகளை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றமை போன்ற முறைப்பாடுகள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றோம் .
பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்
1 . எவரும் பார்க்கக்கூடாதென நீங்கள் எண்ணுகின்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாதீர்கள் .
2 . நிஜவாழ்வி;ல் நண்பர்கள் வட்டாரத்தில் இல்லாதவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்த்துக்கொள்ளாதீர்கள்
3 . பேஸ்புக் இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை பயன்படுத்தும் வகையில உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .நமது மூன்றாம் தரப்பினரிடம் முடியுமானவரையில் வழங்கக்கூடாது
4 . பெற்றோர்கள் இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தமது பார்வைக்குப்படும் இடத்திலேயே இல்லங்களில் கணனிகளை வைத்திருக்கவேண்டும்
குறிப்பு இது ஏனைய சமூக இணையத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது
பேஸ்புக் தவிர 100ற்கு மேற்பட்ட சமூக இணையத்தளங்கள் உள்ளன .பேஸ்புக்கிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளம் ஆரம்பத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது எனினும் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதனை பேஸ்புக் முறியடித்தது அதற்கு பின்னர் பேஸ்புக்கின் வளர்ச்சி அபரிமிதமானது .பேஸ்புக் அளவி;ற்கு இல்லாவிட்டாலும்
twitter, Orkut, tagged, hi5, bebo, frienster, buzz ஆகியனவும் எம்மவர்களிடையே ஒரளவிற்கு அறியப்பட்ட சமூக இணையத்தளங்களாக உள்ளன.
இறுதியாக ஒன்றைக் கூற வேண்டுமெனில் எமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆகவே நாம் நம்மை எப்படி நிஜவாழ்விலும் இணையத்தளங்களிலும் வெளிப்படுத்துகின்றோமே அதுவே எமக்கு சாதகமான அன்றேல் பாதகமான விளைவுகளைக்கொண்டுவருகின்றது எனவே ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் பாதக விளைவுகளை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதே எனது கருத்தாகும் .
|
No comments:
Post a Comment