Monday, December 19, 2011

சூர்யாவுக்கு ஒருநாளைக்கு ஒரு கோடி சம்பளம்!

பிரபல சேனல் நிறுவனம் ஒன்று பொங்கல் 2012 முதல் கேம் ஷோ ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது.


'மாற்றான்' படத்தில் நடித்து வரும் சூர்யா இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு நாள் கால்ஷீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பேசி இருக்கிறதாம் அந்த டிவி நிறுவனம். ஒரு நாளைக்கு ஒரு கோடியா என்ற ஆச்சர்யத்தில் இருக்கிறது தமிழ் திரையுலகம்.

இந்நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்க சேனல் தரப்பின் பட்டியலில் முதலில் இடம் பிடித்தவர் விஜய் தானாம். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை தற்போது சூர்யா இந்நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம செய்யப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் விஜய் - அஜீத் என்கிற போட்டி இப்போது விஜய் - சூர்யா என்று மாறிவிட்டதோ என்கிறார்கள் கோலிவுட்டில்.

No comments:

Post a Comment