இதேபோல இன்னொரு தங்கையின் 4 மாத மகனையும் கடத்திச்சென்றுள்ளார். இவர் 24 மணித்தியாலங்களில் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
மும்பையில் உள்ள ராணி விடுதிக்குச் சொந்தக்காரரான சச்தேவ் ஒரு உணவு விடுதியில் பணியற்றிய நந்தினியைக் காதலித்தார். இவள் வேலை தேடி ஜெயப்பூர்ப் பகுதிக்குத் தனது 2 தங்கைகளுடன் வந்திருந்தாள்.
இவளைக் காதலிக்கும்படி சச்தேவ் கேட்டுவந்ததாகவும் ஆனால் நந்தினி தான் ஏற்கனவே இன்னொருவரைக் காதலிப்பதாகவும் ஒவ்வொரு தடவையும் கூறியிருந்தாள்.
எனினும் சச்தேவுடன் இவள் தொடர்ந்தும் நட்புடன் பழகிவந்திருந்தாள். சில மாதங்களின் முன்பு தனது வேலைத்தளத்திற்கருகே தங்கைகளுடன் சென்றுள்ளதாகவும் அங்கு தனது கணவனை விட்டுப்பிரிந்த அவளது தங்கையும் அந்த உணவு விடுதியில் வேலைக்கமர்த்தியதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.
இதனால் அங்கு வேறு வேலைக்காக வந்த சச்தேவ் இரு மூத்த சகோதரிகளும் வேலைக்குச் சென்றநிலையில் அவளது கடைசித் தங்கையையும் இரண்டாவது சகோதரியின் பிள்ளையையும் அழைத்துசென்றிருந்தான்.
அவன் அவர்களுடன் நட்புடன் பழகிவந்ததால் அதை அச்சிறுமியும் பிழையாக நினைக்காது அவனுடன் சென்றிருந்தாள்.
திரும்பி வந்த நந்தினி தனது சகோதரியும் மற்ற சகோதரியினது பிள்ளையும் இல்லாததைக் கண்டு காவற்றுறையினரிடம் முறையிட்டாள்.
முதலில் அவர்கள் சச்தேவைக் குற்றவாளியாக நினைக்கவில்லை. ஆனால் அவன்தான் கடைசியாக அங்கு வந்தவனென்பதைத் தொலைபேசிமூலம் அறிந்த காவற்றுறையினர் அவனைத் தேடிப்பிடித்தனர்.
|
No comments:
Post a Comment