2011ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் கவர்ச்சி மனிதர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசியாவின் கவர்ச்சி மனிதர்கள் பட்டியலில் ரன்பிர் கபூர் முதலிடத்தை பிடித்திருந்தார். இவர் இம்முறை 6ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டுக்கான ஆசியாவின் கவர்ச்சியான 50 ஆண்கள் பட்டியலை ஈஸ்டர்ன் ஐ எனும் வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதலிடம் பிடித்தார்.
இவர் கடந்த ஆண்டில் 3ம் இடத்தில் இருந்தார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ட்விட்டரில் வாக்களித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஷாகித் கபூர் 2ம் இடத்தையும், ஷாருக் கான் 3ம் இடத்தையும், சல்மான் கான் 4ம் இடத்தையும் பிடித்தனர்.
|
No comments:
Post a Comment