Saturday, December 3, 2011

சினிமா ஆசைகாட்டி விபசாரத்திற்குட்படுத்திய இளம்பெண்கள்


சினிமா ஆசைகாட்டி விபசாரத்தில் தள்ளப்பட்ட இரண்டு இளம் பெண்கள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர். இப்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆந்திராவை சேர்ந்த நான்கு நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்ப பெண்கள் வேடத்தில் இளம் பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக ஜெ.ஜெ.நகர் பொலிசுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸ் படையினர் குறிப்பிட்ட அடுக்குமாடியில் சோதனை நடத்தினர்.

இச் சோதனையின் போது குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் விபசாரம் நடப்பது பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவ்வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இளம் பெண்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டனர்.

அந்த இளம்பெண்களை விசாரணைக்குட்படுத்தியதில் இருவரையும் சினிமா ஆசைக்காட்டி விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது.

இப்பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக குற்றம் சாட்டப்படும் நபர்களான ராகவேந்திரராவ், பெண்டம்மா, கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 4 பேரும் ஆந்திராவை சேர்ந்த விபசார புரோக்கர்கள் ஆவார்கள். விபசாரத்துக்காக இவர்கள் பயன்படுத்திய கார், கையடக்கத் தொலைபேசி, கணனி போன்றவை பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலை சேர்ந்த பாபாஜி என்பவர் தப்பிச் சென்று விட்டதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment