Wednesday, November 16, 2011

தாய் குழந்தையை கொலை செய்ய முற்படும் காட்சி (வீடியோ இணைப்பு)

18 வயதான தாயொருவர் தனது 4 மாதங்களே ஆன குழந்தையை மூச்சுத் திணற செய்து கொலை செய்ய முயன்ற சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை பராமரிப்பதற்கு கடினம் என்ற நிலையில் தமது சுதந்திரமான பழைய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்காக அப்பெண் தனது குழந்தையை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வீடியோ கமெராவில் குறித்த பெண் தனது குழந்தையை மூச்சுத் திணற செய்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 வயதான இப்பெண் 4 மாத வயதுடைய தனது ஆண் குழந்தையின் மீது போர்வையொன்றை போர்த்தும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. சில நிமிடங்களின் பின் அவர் குழந்தையின் முகத்தில் கைகளை வைத்து அழுத்தி அதன் மூச்சை நிறுத்த முயல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த பெண்ணின் கொடூர செயலுக்கு 25 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment