Wednesday, November 16, 2011

காதலனின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!


தனது காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய பெண் பொலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதார்.


தாய்வான் நாட்டைச்சேர்த 30 வயது பெண்தான் பான். சில நாட்களுக்கு முன்னர் அவர் மீது ஒருவர் காதல் கொண்டார். இவரின் பெயர் 29வயதான வென்ங். இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விவாகரத்துப்பெற்ற பின்னர் பான் உடன் நட்புடன் பழக தொடங்கியிருக்கிறார்.
இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இருவருக்கும்ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. காலம் செல்ல செல்ல வென்ங்கின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. போதைப்பொருள் பாவனை குடி சண்டை என இவரது பழக்க வழக்கங்கள் ஆபத்தான பாதைக்கு சென்றது. இதனால் இவர் அடிக்கடி வேலைக்கும் போகாமல் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.

இந்த நிலை தொடரவே பான் ஒரு முடிவு செய்தாள். ஒருநாள் படுக்கைக்கு போகும் போது தனது கணவருக்கு தூக்க மாத்திரகளை கொடுத்து தூங்கும் வரை காத்திருந்தாள். வென்ங் உறக்கத்தில் ஆழ்ந்த சந்தர்ப்பம் பார்த்து கத்திரக்கோல் ஒன்றின் மூலம் ஆணுறுப்பை துண்டித்தார். அதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆற்றில் கொண்டு வீசினார். வீட்டில் வலி தாக்காத கதறியழுத வென்ங் கின் சந்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவசர பொலீசுக்கு தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் அவர் மயக்க மடைந்து உயிருடன் இருப்பதை பார்த்தனர். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இவரது மனைவி பொலீசரிடம் சரணடைத்து மேற்படி வாக்குமூலத்தை அளித்துள்ளார். தனது கணவர் இனிமேல் எந்த பெண்ணுடனும் சண்டையிடக்கூடாது என்றே இதைச்செய்ததாக குறிப்பிட்டார். இதன் பின்னர் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment