சும்மா ஒரு கற்பனை பண்ணிப் பாருங்கள்… குண்டு வெடிப்பது போல பெரியதொரு சத்தம் கேட்கின்றது. ஆனால் அந்த சத்தம் வெளியில் இருந்து அல்ல உங்களின் வீட்டுக்குள் இருந்து தான்… உங்களுக்கு எப்படி இருக்கும்…? உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எப்படி என்றால் வெளியே வெடிக்கவில்லை பூமிக்குள் தான் வெடிப்பு ஏற்பட்டு பாரிய சத்தம் வந்துள்ளது.
கௌதமாலாவைச் சேர்ந்த Inocenta Hernandez என்ற பெண் வசிக்கும் வீட்டின் படுக்கையறையில் இருந்து அதுவும் அவரது கட்டிலுக்கு கீழாக 3 அடி அகலத்திலும் 40 அடி ஆழத்திலும் பாரிய துளையாக காணப்படுகின்றது. இந்தச் சம்பவத்தால் குறித்த பெண் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளார். கடவுள் செயலால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். இனியும் அந்த வீட்டில் வாழ விரும்புவாரா குறித்த பெண்?
|
No comments:
Post a Comment