ஒருவர் செல்போன் கமரா மூலம் எடுத்த படம் ஒன்றை அவரது நெருங்கிய நண்பருக்கு அனுப்பியுள்ளார். உன்னுடைய மனைவி இங்கே என்ன செய்கிறார் என்று தெரியுமா என்று கேட்டு தான் மேற்படி படத்தை அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, குடும்பத்தில் குழப்பம் வர முன்னதாகவே அந்த நபர் விளக்கமாக கடிதம் எழுதி இன்னொரு படத்தையும் அனுப்பினார்.
அதற்கு அவர் எழுதிய விளக்கம் இது தான்…
“நண்பா, என்னை மன்னித்துக் கொள். நான் நினைக்கிறேன் உனக்கு முதலில் அனுப்பிய படத்தை அளவுக்கு அதிகமாக பெரிதாக்கி (Zoom) விட்டேன் என்று… இது தான் முழுமையான படம். உன்னுடைய மகன் ஹரிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ”
பிறந்த நாளன்று மகன் அம்மாக்கு கேக் ஊட்டும் படம் தான் இது…
குறித்த நபர் மனைவி இப்படி ஆகிவிட்டாளே என்று உடனடியாக உணர்ச்சி வசப்பட்டு சண்டை பிடித்திருந்தால் குடும்பம் குலைந்திருக்கும்.. நடுத்தெருவுக்கு வந்திருக்கும்..
எல்லாத்துக்கும் பொறுமை தான் ரொம்ப முக்கியம்..
பார்த்தீர்களா குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிக்க எவ்வாறெல்லாம் சதிகள் நடக்குது என்று?
சதிகள் எங்கும் நடக்கும் விழிப்பாயிரு…
|
No comments:
Post a Comment