Monday, June 20, 2011

அட. நம்ம மார்தாண்டத்திலுமா இப்படி நடக்குது?

மார்த்தாண்டத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றுள்ளார். அண்டுகோடு ஈந்திக்காலையை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி அஸ்வினி(28). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் எஸ்.டி.டி., பூத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அஸ்வினி மட்டும் பூத்தில் இருந்துள்ளார். அப்பொழுது பைக்கில் ஹெல்மெட் அணிந்த இருவர் வந்துள்ளனர். ஒருவர் பைக்கில் இருந்துள்ளார். ஒருவர் ஹெல்மெட் அணிந்த படியே பூத்தில் வந்து செல்போன் ரீசார்ஜ் கம்பெனியில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

 அஸ்வினி, உரிமையாளர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். அப்போது அந்த நபர் பூத் போனில் இருந்து உரிமையாளர் பிரின்சுடன் பேசியுள்ளார். அவர் தற்பொழுது ரீசார்ஜ் கார்டு வேண்டாம் பிறகு தொடர்பு கொள்வதாக கூறியுள்ளார். பூத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த மர்ம நபர் அஸ்வினி கழுத்தில் கிடந்த செயினை பறித்துவிட்டு பைக்கில் ஏறி தப்பியுள்ளார். 

இது குறித்து அஸ்வினி மார்த்தாண்டம் போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதமாக பைக்கில் வந்து செயின் பறிக்கும் கும்பல் கைவரிசை காண்பித்து வருகிறது. இதற்கு போலீஸ் நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment