Monday, June 20, 2011

கணினி பற்றி சந்தேகங்களும் விளக்கங்களும்

கேள்வி: கூகுள் டாக்ஸ் பைல் ஒன்றை எப்படி வேர்ட் தொகுப்பில் அமைத்து சேவ் செய்வது?

பதில்: இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, அப்படியே அந்த டாகுமெண்ட்டை கண்ட்ரோல் + ஏ கொடுத்து காப்பி செய்து, பின்னர் வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கி அதில் பேஸ்ட் செய்து, பின்னர் சேவ் செய்திடலாம். 

இரண்டாவதாக, கூகுள் டாக்ஸ் பிரிவில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிய பின், அதனை மைக்ரோசாப்ட் வேர்ட் பார்மட்டில் சேவ் செய்திடலாம். பின்னர் அந்த பைலை வேர்ட் புரோகிராமில் திறந்து பயன்படுத்தலாம். இதற்கு கூகுள் டாக்ஸ் - இல், பைல் மெனு தேர்ந்தெடுக்கவும். பின்னர் Download as என்பதில் கிளிக் செய்து, அடுத்து Word என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Opening என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், Open with: To open the Google document using Microsoft Word என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Save as என்பதில் கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும். இந்த பைல் உங்கள் ஹார்ட் ட்ரைவில் சேவ் செய்யப்படும். 

இந்த வழி ஏறத்தாழ, வேர்ட் தொகுப்பில் குச்திஞு ச்ண் கட்டளை பயன்படுத்தி, பைலை சேவ் செய்வது போல ஆகும்.

கேள்வி: எனக்கு வந்திருக்கும் இமெயில் செய்தியின் ஒரு பகுதியை மட்டும் எப்படி பிரிண்ட் செய்வது?

பதில்: இமெயில் செய்தியைத் திறந்து கொள்ளவும். எந்த டெக்ஸ்ட்டை பிரிண்ட் செய்திட வேண்டுமோ, அதனை செலக்ட் செய்திடவும். பின்னர் அதனைக் காப்பி செய்து, வேர்ட் காலி டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து, பேஸ்ட் செய்திடவும். இதனை பிரிண்ட் செய்திடலாம். தேவைப்பட்டால், இதற்கு ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அல்லது அப்படியே விட்டுவிடலாம். வேர்டில் தான் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் உங்கள் கம்ப்யூட்டரின் கிளிப் போர்டில் இருக்கும். எந்த வேர்ட் ப்ராசசரையும் திறந்து, பேஸ்ட் செய்து, பிரிண்ட் செய்திடலாம்.

கேள்வி: அச்சிட டாகுமென்ட் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரிண்ட் கட்டளை கொடுக்கையில் கிடைக்கும் பாப் அப் பாக்ஸில், பிரிண்ட் டு பைல் (Print to File) என்று கிடைக்கிறது. பைல் ஒன்றில் எப்படி பிரிண்ட் செய்வது என விளக்கவும். ஏன் இந்த வசதி தரப்பட்டுள்ளது?

பதில்: முதலில் இந்த வசதி எதற்குத் தரப்பட்டுள்ளது என்று விளக்கிவிடுகிறேன். வர்த்தக ரீதியாக, பிரிண்ட் செய்வதற்கான பணிகளுக்கு இந்த பிரிண்டு டு பைல் உதவும். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் அல்லது அடோப் இல்லஸ்ட் ரேட்டர் கொண்டு ஓர் அருமையான நூலை உருவாக்கி இருப்பீர்கள். இதனை வர்த்தக ரீதியாக அச்சிட, அச்சிடும் மையத்தில் உள்ள் கம்ப்யூட்டரில் இந்த சாப்ட்வேர் தொகுப்புகள் தேவை இல்லை. அவர்களுக்கு இந்த பைல் டு பிரிண்ட் உதவுகிறது.

முதலில் எந்த டாகுமெண்ட்டினை வர்த்தக ரீதியில் அச்சிடத் தர வேண்டுமோ, அதனை உருவாக்கவும். பின்னர் File > Print > Print எனக் கட்டளை கொடுக்கவும். நீங்கள் கூறியவாறான பாப் அப் கட்டத்தில் Print to file என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் செக் பாக்ஸ் டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்திடவும். பின்னர், இந்த பைலுக்கு ஒரு பெயரினையும், அது சேவ் செய்திடப்பட வேண்டிய இடத்தினையும் தேர்ந்தெடுக்கவும். இந்த பைலின் துணைப் பெயர் .prn என இருக்கும். இந்த பைலில், டாகுமெண்ட்டின் லே அவுட், பாண்ட், லைன் ஸ்பேஸ் ஆகிய அனைத்தும் சேவ் செய்யப்படும். இனி இந்த பைலை அச்சிடும் மையத்திற்கு அனுப்பலாம். ஒருவேளை இந்த பைலில் உள்ள பாண்ட் அவர்களிடம் இல்லை என்றால், அதற்கு இணையான பாண்ட் அமைத்து அச்சிடப்படும். அல்லது முதலிலேயே நீங்கள் பயன்படுத்திய பாண்ட் குறித்து அச்சிடுபவருக்கு அறிவித்து விடலாம். 
கேள்வி: பிரிண்ட் ஸ்கிரீன் Sys Rq கீயில் எனக் காணப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் மலர் இதழில் இது வரை இதனைப் பற்றிக் குறிப்பிட்டதே இல்லை. நூல்களிலும் தகவல் இல்லை. இதன் பயன்பாடு என்ன?

பதில்: வெகு நாட்களுக்கு முன்பு உங்களைப் போன்ற ஆர்வம் மிகுந்த வாசகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில் இதே சந்தேகத்திற்கான விளக்கம் தரப்பட்டிருந்தது. அதனாலென்ன? இதோ உங்களுக்கான தகவல்.
Sys Rq என்பது System Request என்பதன் சுருக்கமாகும். இது மெயின் பிரேம் என்னும் ஒரு வகைக் கம்ப்யூட்டரில், மையக் கம்ப்யூட்டரின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு கீயாகும். முன்பு பேஜர் கொடுத்து ஒருவரின் கவனத்தை திருப்புவோம் அல்லவா! அது போலத்தான் இதுவும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு எந்த செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.
லினக்ஸ் பயன்பாட்டாளர்கள் சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகள் குறித்து ஆய்வு செய்திட இந்த கீயை முதலில் பயன்படுத்துவார்கள். சிஸ்டம் கிராஷ் ஆனாலும் இந்த கீ அதிகம் பயன்படும். 

இன்னொன்றையும் கவனத்தில் கொள்க. அனைத்து கீ போர்டுகளிலும் பிரிண்ட் ஸ்கிரீன் கீயில் இதுவும் எழுதப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். சிலவற்றில் இது இருப்பதில்லை.

கேள்வி: பார்டர்லைன், கிரிட்லைன் - இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வேர்ட் டேபிள் குறித்து படிக்கையில் இந்த இரண்டும் பயன் படுத்தப்படுகின்றனவே? என்னுடைய டேபிளில் உள்ள கோடுகள் அச்சாக மறுக்கின்றன. என்ன பிரச்னை?

பதில்: வேர்ட் டேபிளில் மாறா நிலையில் இருப்பவை பார்டர் லைன்களாகும். கிரிட்லைன் என்பவை கற்பனைக் கோடுகள். இவற்றைத் திரையில் பார்க்கலாம் . ஆனால் பிரிண்ட் ஆகாது. உங்கள் டேபிளில் உள்ள கோடுகள் பிரிண்ட் ஆகவில்லை என்றால், டேபிள் பார்டர்களை யாராவது ‘off’ என செட் செய்திருப்பார்கள். இதனைப் பயன்படுத்து பவர்கள் பார்ப்பது கிரிட்லைன்களைத்தான், பார்டர் லைன்களை அல்ல. 
இதற்கான தீர்வு எளிது. டேபிளைத் தேர்வு செய்து, அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Table Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், டேபிள் என்ற டேப் தேர்ந்தெடுத்து அதில் Borders and Shadin என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, Grid என்பதில் கிளிக் செய்து பின்னர், ஓகே பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், ஒரு பாரா முழுவதும் உடையாமல், ஒரே பக்கத்தில் வர வேண்டும் என்றால், என்ன கட்டளை கொடுக்க வேண்டும்?

பதில்: Home டேப் செல்லவும். அதில் பாரா குரூப் டயலாக் லாஞ்ச் செய்திடவும். இதற்கென கீழ் வலது பக்கத்தில், சிறிய அம்புக் குறி ஒன்று தரப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Format மெனுவில், Paragraph தேர்ந்தெடுக்கவும். இதில் Line and Page Breaks என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Keep Lines together என்பதில் உள்ள பாக்ஸில் செக் அடையாளம் ஏற்படுத்தவும். பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் டை எடிட் செய்கையில், சில வேளைகளில், நான் டைப் செய்திடும் டெக்ஸ்ட் கூடுதலாக இணையாமல், ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டை அழித்து பதியப்படுகிறது. இது சில வேளைகளில் நடக்கிறது. பின் மீண்டும் சரியாகிறது? என்ன காரணம்?

பதில்: இதில் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. டைப் செய்கையில் கீ போர்டில் உள்ள இன்ஸெர்ட் கீயை அழுத்தி இருப்பீர்கள். இந்த இன்ஸெர்ட் கீ, மாறா நிலையில், நீங்கள் டைப் செய்திடும் டெக்ஸ்ட்டுக்கு இடம் ஏற்படுத்தி பதியும். அதனை அழுத்தினால், இன்ஸெர்ட் எனப்படும் இடைச் செருகள் செயல்பாடு நின்று, ஏற்கனவே இருக்கும் டெக்ஸ்ட்டின் மீதாக டைப் செய்யப்படும். இது இருநிலைகளுக்கும் (On/Off) பொதுவான டாகிள் கீ (Toggle Key). இதனை மீண்டும் ஒருமுறை அழுத்தித் தொடர்ந்து டைப் செய்திட்டால், உங்கள் பிரச்னை தீரும்.

கேள்வி: நேற்று முதல், நான் பைல்களை அழிக்கையில், இதனை ரீசைக்கிள் பின் குப்பைத் தொட்டிக்கு அனுப்பவா என்று கேள்வி கேட்காமல், பைல் அழிக்கப்படுகிறது. இதனால் பயம் ஏற்படுகிறது. இது வைரஸின் வேலையாக இருக்குமோ?

பதில்: நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நேர்ந்திருக்காது என்று நம்புவோம். எதற்கும் கீழே குறிப்பிட்டபடி செயல்படுங்கள். டெஸ்க் டாப்பில் ரீசைக்கிள் பின் ஐகானைத் தேர்ந்தெடுங்கள். அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இங்கு பல டேப்கள் அடங்கிய விண்டோ காட்டப்படும். ஒவ்வொரு டேப்பிலும் ஒரு ஹார்ட் ட்ரைவ் பிரிக்கப்பட்ட துண்டு பார்க்கலாம். எடூணிஞச்டூ என்னும் டேப்பில் கிடைக்கும் விண்டோவில், உங்களுக்கான தீர்வு கிடைக்கும். அதில் Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted என்று இருப்பதற்கு நேராக உள்ள பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, டிக் அடையாளத்தினை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, பைலை நீங்கள் அழிக்க முற்படுகையில், அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும்.

No comments:

Post a Comment