நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத்தத் தொடங்கி ஆண்டுகள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பணிக்குத் தயாராகும் நேரத்தினை நீட்டித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் நாம் தான். நாம் அதனைப் பயன்படுத்தும் விதம் தான்.
எப்படி விண்டோஸ் பூட் நேரத்தைக் குறைத்து நம் காத்திருத்தலைத் தவிர்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
1. பயாஸ் செட்டிங்ஸ் மாற்றுக: பயாஸ் அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, குயிக் பூட் மற்றும் பூட் டிவைஸ் பிரையாரிட்டி என்ற இரண்டு புரோகிராம் களை முதலில் பயன்படுத்த சிலர் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விண்டோஸ் பூட் நேரம், மிகப் பெரிய அளவில் விரைவு படுத்தப்படவில்லை என்றாலும், இவற்றை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இவை கிடைக்கும் இணைய தளங்களின் முகவரிகள்:
உங்களுக்கு பயாஸ் செட்டிங்ஸ் எப்படி மாற்றுவது என்பதில் சிக்கல் அல்லது பிரச்னை இருந்தால், அது குறித்து கூடுதல் தகவல் தேவை என உணர்ந்தால்,http://michaelstevenstech.com/bios_manufacturer.htm என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பார்க்கவும். இங்கு பலவகை கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் பயாஸ் அமைப்பு செயல்படும் விதம் குறித்துத் தகவல்கள் கிடைக்கின்றன.
2. பயனில்லாத ஹார்ட்வேர் நீக்கம்: எப்போதோ தேவைப் பட்டது, இலவசமாகக் கிடைத்தது, எதற்கும் இருக்கட்டும் என்று பல ஹார்ட்வேர் சாதனங்களை நாம், நம் கம்ப்யூட்டருடன் இணைத்து வைத்திருப் போம். இவற்றை இணைக்கும்போது, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போதே, இவையும் தயார் நிலையில் இருக்கும்படி அமைத்திருப்போம். இதனால் கம்ப்யூட்டர் பூட் ஆகும் நேரம் அதிகமாகும். டிவைஸ் மேனேஜர் (Device Manager) இயக்கி, பயன்படுத்தாத நெட்வொர்க் அடாப்டர், புளுடூத் கண்ட்ரோலர், பி.சி.எம்.சி.ஐ.ஏ. கார்ட் ஹோல்டர்கள், மோடம் சாதனங்கள் மற்றும் மல்ட்டிமீடியா துணை சாதனங்கள் என்ன என்ன இயக்க நிலையில் உள்ளன என்று கண்டறியவும். இவை பயன்பாட்டில் இல்லை என்றால், இயக்க வேண்டாத நிலைக்கு இவற்றின் செட்டிங்ஸ் அமைக்கவும். டிவைஸ் மேனேஜர் சென்றாலே இதற்கான வழி கிடைக்கும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விர்ச்சுவல் மினிபோர்ட் அடாப்டர்கள் என்ற வசதி தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் நெட்வொர்க் தயார் செய்திட இது உதவுகிறது. நம் கம்ப்யூட்டரில் உள்ள ப்ராசசர் திறனை இவை கணிசமாக எடுத்துக் கொள்கின்றன. இதனையும் பயன்படுத்தவில்லை என்றால் எடுத்து விடலாம். டிவைஸ் மேனேஜரில் இதன் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் ஈடிண்ச்ஞடூஞு என்பதைக் கிளிக் செய்திடலாம். இங்கு ஒரு எச்சரிக்கை. டிவைஸ் மேனேஜரில் Computer, Disk drives, Display adapters, IDE ATA/ATAPI Controllers, or System devices என்ற பிரிவில் இருக்கும் எதனையும் தொட வேண்டாம்.
3. தேவையற்ற எழுத்து வகை பைல்கள்: கம்ப்யூட்டர் பூட் ஆகும்போது, அனைத்து பாண்ட் பைல்களும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆயத்த நிலையில் வைக்கப்படும். இப்போதெல்லாம், நாம் பயன்படுத்தும் எழுத்து வகைகள் பத்துக்குள் இருந்தாலும், ஏறத்தாழ நூறு பாண்ட் பைல்களை இயக்கி வைக்கிறோம். ஒரு சிலர் அதற்கும் மேலாகவே எழுத்துக் களை இயக்குகின்றனர். தேவையற்ற, பயன்படுத்தாத, பாண்ட் பைல்களை, பாண்ட்ஸ் (ஊணிணtண்) என்ற போல்டரிலிருந்து எடுத்து வேறு ஒரு பெயரில் போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். தேவைப்படும் போது, அந்த போல்டரிலிருந்து எடுத்துப் பயன் படுத்தலாம்.
http://support.microsoft.com/kb/314960, http://www.onlinetechtips.com/windows7/windows7installdeletefonts/ என்ற முகவரிகளில் உள்ள தளங்களுக்குச் சென்றால், முறையே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களில் இந்த பாண்ட் பைல்களைக் கையாளும் விதம் குறித்துத் தகவல்கள் தரப்பட்டிருக்கும்.
4. விண் பெட்ரோல்: Winpatrol என்ற தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் ஒன்று இலவசமாகக் கிடைக்கிறது. இதனை http://www.winpatrol. com/download.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் செலுத்தினால் கூடுதல் வசதியுடனும் இதனைப் பெறலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்துவிட்டால், அது நம் கம்ப்யூட்டரை வந்தடையும் மால்வேர் புரோகிராம்கள் குறித்து தகவல் அளிக்கிறது. ஸ்டார்ட் அப் புரோகிராம், பூட் ஆவதில் தாமதம் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, நம்மை எச்சரிக்கை செய்கிறது. நாம் அறியாமல், ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், உடனே நமக்கு அறிவிக்கிறது. குறைவான மெமரி இடத்தை எடுத்துக் கொண்டு நம் சிஸ்டத்தை முழுமையாக மானிட்டர் செய்கிறது. இதனால், கம்ப்யூட்டர் பூட் ஆவதில் தாமதம் ஏற்படுத்தும் புரோகிராம்கள் குறித்து அறிந்து நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக, ஸ்டார்ட் அப் புரோகிராம் என்ற பிரிவில், ஸ்டார்ட் ஆகும் ஒவ்வொரு புரோகிராமும் நமக்குத் தேவைதானா என முடிவு செய்கிறது. தேவையற்றதை நிறுத்தி, தேவைப்படும் போது, நாமாக இயக்கும் வகையில் செட் செய்திட உதவுகிறது.
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயமாக கம்ப்யூட்டர் பூட் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் குறையும். இவை தவிர, கம்ப்யூட்டருடன் அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்தே நமக்குத் தரும். இவற்றை Crapware என்று அழைப்பார்கள். இவற்றில் தேவையற்ற பல புரோகிராம்களை கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்போதே இயங்கும்படி அமைத்திருப்பார்கள். அவற்றையும் நீக்குவது, நிச்சயமாய் பூட் டைம் குறைவதற்கு வழி வகுக்கும்.
|
No comments:
Post a Comment