தென் இந்தியாவில் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டின் ஓர் அங்கமாக உள்ளது இளநீர். கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் அதிக அளவில் இளநீர் அருந்த ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் இளநீர் விற்பனை செய்யும் தள்ளு வண்டிகளைப் பார்க்கலாம். தூய்மையானது, கலப்படம் இல்லாதது என்பதால் அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கும் இளநீர் பாதுகாப்பான பானம்.
இளநீரைப் போன்றே மற்றொரு பாதுகாப்பான பானம் சாத்துக்குடி. மருத்துவமனைகளில் நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள் தவறாமல் பைகளில் சாத்துக்குடிகளுடன் வரு வதைப் பார்க்கலாம். வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்தது சாத்துக்குடி. இதை சாறாகவும் பருகலாம். பழமாகவும் உண்ணலாம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க் கும் போதும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் போதும், ஆப்பிள்களைக் கொடுப்பது வாடிக் கையான விஷயம்.
நோய் அழுத்தம் தொடர்பாக உடலில் உயிரி ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு சோடியம் சத்து நோயாளிகள் உடலில் அதிகம் சேரும். எனவே இதைச் சரி செய்ய அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது பொட்டாசியம் சத்து அதிகம் தேவைப்படும்.
மேற்கண்ட மூன்று உணவுகளிலும் கணிச மான அளவில் பொட்டாசியம் சத்து இருப்ப தால் உடலைச் சமச்சீராக வைத்துக் கொள்ள இவை உதவும். எனவே தான் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நோயாளிகளைப் பார்க் கும் போது இவற்றை எடுத்துச் செல்கிறோம்.
உயிர்வளியேற்ற எதிர்ப்பியாக விளங்கும் வைட்டமின் சி உடலில் ஏற்படும் கூடுதல் உயிர்வளியேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மனஅழுத்தம் உள்ளவர்களின் உடலில் அதிக உயிர் வளியேற்றம் காணப்படும். எனவே பாதிக்கப்பட்ட திசுக்களைக் குணப்படுத்த வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடிச் சாறு அவர்களுக்கு அவசியம். இது அவர்கள் உடலில் ஏற்படும் அதிக உயிர்வளியேற்றத்தை தடுக்கும்.சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சில சிறுநீரக நோயாளிகளுக்கு திரவக் கட்டுப்பாடும், சிலருக்கு பொட்டாசியம் கட்டுப்பாடும், சிலருக்கு சோடியம் கட்டுப்பாடும் அவசியப்படும். எனவே சிறுநீரக நோயாளிகளைக் காணச் செல்லும் போது மட்டும் மேற்கண்ட பழங்களைக் கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை.
சிறுநீரகக் கோளாறு இல்லாத பட்சத்தில் நீரீழிவு நோயாளிகள் தாராளமாக இளநீர் அருந்தலாம். ஆனால் இளநீருடன் சேர்ந்து உள்ளே இருக்கும் வழுக்கைத் தேங்காயை மறந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாத்துக்குடியைப் பழமாகவோ, சாறாகவோ கொடுக் கலாம். நாளொன்றுக்குத் தேவைப்படும் மொத்த கலோரிக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து ஆப்பிள்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
|
No comments:
Post a Comment