Sunday, December 19, 2010

இப்படியும் MOBILE சார்ஜ் பண்ணலாமே

                       ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
                      வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்கு  முழிப்போம். நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.
                    முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன் இது ஒரு விஞ்ஞானக் கண்டபிடிப்பல்ல.
                    இதற்கு முக்கிய நிபந்தனை தங்கள் கைப்பேசி மின் போதாதெனச் சொல்லி தன்னைத் தற்கொலை செய்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு தாள் எடுத்துக் கொள்ளுங்கள் (இங்கு இதற்கும் ஒன்று சொல்வார்கள் 10 ரூபாய் தாளில் செய்தால் தான் மின் ஏறுமாம்) பின் படத்திலுள்ளவாறு புனல் போல் சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் தங்கள் கைப்பேசியின் உறையை கழற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மின்கலத்தையும் நீக்கிய பின் அந்த மின் கலத்துடன் தொடபில் இருக்கும் மின் கம்பிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதன் நடுக் கம்பியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
                        இப்போது படத்திலுள்ளவாறு தாங்கள் சுருட்டிய காசை நடுக்கம்பியினுள் சற்று உட் செலுத்தி வையுங்கள் (இழுக்கக் கூடியவாறு). பின்னர் வழமை போல் மின் கலத்தை செருகுங்கள். இப்பொது எல்லாம் தயார் சடுதியாக (ஒரு கணநேரத்திற்குள்) தாளை இழுங்கள். சரி விசயம் முடிந்த விட்டது. இப்பொது தற்கொலை செய்து கொண்ட கைப்பேசிக்கு உயிர் கொடுங்கள். இரண்டு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கும். இதுவே கீரி ரக கைப்பேசியாக இருந்தால் இன்னும் நல்ல விளைவை எதிர் பார்க்கலாம். என்ன குழம்பீட்டிங்களா..??? நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும்.
                                இதற்கான காரணமாக நான் கருதுவது. உராய்வால் வரும் இலத்திரன் பாய்ச்சலாகும். ஏனெனில் இலத்திரன் மறை ஏற்றம் (-) கொண்டது. நாங்கள் செருகும் பகுதி நேர் எற்றம் (+) கொண்டது. இரண்டுக்குமிடையேயான தொடர்பு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன் அனால் நண்பர்கள் வெவ்வெறு காரணம் சொல்கிறார்கள். என் வாசகர் வட்டத்தில் பல விசயம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்களில் யாராவது தமக்குத் தெரிந்ததை என்னுடன் பகிருங்கள்.

முக்கிய குறிப்பு – என் நெருங்கிய நண்பன் ஒருவன் சொன்ன தகவல்  மின் குறைந்த கைப்பேசியில் 1000 மடங்கு கதிர் வீச்சு அதிகமாம்... சில நாட்களுக்க முன் கைப்பேசியால் சோளப் பொரி செய்து காட்டியதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
                 

No comments:

Post a Comment