Friday, December 3, 2010

நமது வலைப்பதிவில் தற்போது ஆன்லைனில் இருப்பவர்களின் விவரங்களை அறிய...



வலைப்பதிவு வைத்திருக்கும் ஒவ்வொரு பிளாகருக்கும் தங்களது வாசகர்கள் முக்கியமானவர்கள். அவர்கள் நமது வலைப்பக்கத்தில் எந்தெந்த கட்டுரைகளை விரும்பி படிக்கிறார்கள், எந்த விசயத்தை அதிகமாக தேடுகிறார்கள் என்பதை வைத்து தளத்தை முன்னேற்றலாம்.வலைத்தளத்தை பற்றிய தினசரி நிகழ்வுகளை அறிந்துகொள்ள இணையத்தில் நிறைய கருவிகள் உள்ளன.Google AnaylticsStatcounterAlexaபோன்றவைகளின் உதவியோடு தினசரி வாசகர்களின் நிகழ்வுகளை அறிந்தாலும் இந்த நிமிடத்தில் தற்போது ஆன்லைனில் (Online vistors) இருக்கும் வாசகர்களின் நிகழ்வுகளை அறிவது கொஞ்சம் சிரமமான வேலை தான்.

கீழ்க்கண்ட Blogger Widget களை சேர்ப்பதன் மூலம் தற்போது ஆன்லைனில் இருக்கும் வாசகர்களைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

1.FeedJit

இதன் மூலம் நமது வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களின் கூட்டம் (Traffic sources), தேடுபொறிகளில் பயன்படுத்திய சொற்கள்(keywords), எங்கிருந்து எந்தf தளம் மூலம் வந்துள்ளார்கள், அவர்களின் நாடு போன்றவற்றை அறியலாம்.
இதில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால் கூகிள் போன்ற தேடுபொறிகளில் நமது வலைத்தளத்தின் பதிவுகள் அதிகமாக பட்டியலிடப்படும்.(Indexing) இதன் ஜாவாஸ்கிரிப்ட் நிரல் கீழே உள்ளது. இதனை உங்கள் பிளாக்கர் Layout இல் சென்று Add widget கொடுத்து சேர்த்திடலாம்.
<script type="text/javascript" src="http://feedjit.com/serve/?bc=FFFFFF&amp;tc=494949&amp;brd1=336699&amp;lnk=494949&amp;hc=336699&amp;ww=160"></script><noscript><a href="http://feedjit.com/">Feedjit Live Blog Stats</a></noscript>


2. Whos.amoung.us

இது Feedjit போல் அல்லாமல் ஒரு சிறிய கட்டத்தில் நமது வலைப்பக்கத்தை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை காட்டுகிறது. அதன் மேல் நீங்கள் கிளிக் செய்தால் தற்போது ஆன்லைனில் இருக்கும் வாசகர்கள், அவர்களின் இருப்பிடம்(Location of readers), நாட்டின் பெயர் மற்றும் தகவல்களைப்பொறுத்து மேப் புள்ளிவிவரங்களையும் (Statistics) தருகிறது. இது மேலும் தினசரி,வார மற்றும் மாத அளவிலான புள்ளிவிவரங்களையும் தருகிறது. இதற்கான கோடிங் கீழே உள்ளது.

<script type="text/javascript" src="http://widgets.amung.us/tab.js"></script><script type="text/javascript">WAU_tab('e41pszwrl4ln', 'right-middle')</script>

மேலும் இதைப்பற்றி அறிய இந்த தளத்தில் சென்று உங்களுக்கு தேவையான விருப்பத்தில் மாற்றிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment