இன்றைய நவீன உலகில் மரணதண்டனை என்பது குறைவு.இருந்தாலும் அது மனிதாபிமான முறையில் இருக்கும்.ஆனால் புராதனகாலத்தில் ஏன் 19 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு குற்றங்களை இழைத்த குற்ற வாளிகளுக்கு மரணதண்டனை மிககொடூரமான முறைகளில் நிறைவேற்ற ப்பட்டது. அப்படியான பிரபல பத்து வகை மரண தண்டனைகள்.
1 .கொதிநீரில் போடுதல்
இது குற்றவாளியை கொதிக்கிற நீர்,தார்,எண்ணை சட்டியில் போடும் முறையாகும்.இது மனித வரலாறு முழுதும் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன. சீனாவில் 500 000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகள் சட்டிகளில் தாச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 1500 ஆம் ஆண்டு அளவில் சட்டபூர்வமான ஒரு மரண தண்டனை முறையாக இருந்ததுள்ளது.இச்சட்டிக்கு எடுத்து செல்லப்படும் நபரின் மனநிலையை சிந்தித்து பாருங்கள்.
2 .சிலுவையில் அறைதல்
இந்த புராதன கொடிய முறை கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி நான்காம் நூற்றாண்டு வரை பிரபல்யமாக இருந்தது..குற்றவாளியே 50 கிலோ மர சிலுவையை தோள்களில் சுமந்து செல்லவேண்டும்.அவர் சிலவேளைகளில் நிர்வாணமாக அறையப்படுவார்.பின் அவர் உடல் அப்படியே இருக்கும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக. உலகப்போர் 1 , 2 இன் பொது கட்டளைகளை மதிக்காத இங்கிலாந்து வீரர்களுக்கு இதையொத்த தண்டனைகள் வழங்கப்பட்டது.
3 .தோலுரித்தல்
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முதல் மத்தியகிழக்கு ஆபிரிக்க நாடுகளில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிக கொடிய தன்டனை. குற்றவாளியை மக்கள் முன் வைத்து கொல்ல முதல் அவரின் உடலில் உள்ள தசையுடன் சேர்ந்த தோலை உரித்து எடுப்பார். பின் அந்த தோலை சுவர் ஒன்றில் தொங்கவிடப்படும். இதை பார்த்து மற்றவர்கள் குற்றம் ஒன்றை புரிய பயப்படுவதட்காக.உசிருடன் ஒருவரின் முழு தோலையும் உரித்து எடுப்பது எனபது நினைத்து பார்க்கவே முடியாத ஒன்று.
4 .உடலை கிழித்தல்
இங்கிலாந்து,பெல்ஜியம்,ஜப்பான்,நெதர்லாந்த்து நாடுகளில் பின்பற்றப்பட்ட மிக கொடிய தண்டனை முறை. அதாவது குற்றவாளியின் உடலில் உள்ள முக்கிய பாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அகற்றி கொள்ளுதல். குறிப் பாக வயிறை கிழித்து விடுவார்கள். சிலவேளைகளில் வயிற்ரை கிழித்து அதனுள் ஒரு சுண்டெலியை விட்டு உள்ளே உள்ள பாகங்களை தின்ன செய்வர். ஜப்பானில் சாமுராய் என்று அழைக்கப்பட்ட ஒரு தற்கொலை முறையாகவும் இருந்தது.
5 .உடற்பாகங்களை முறித்தல்
கிரேக்கத்தில் உருவான இந்த முறை பின்னர் இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ்,ஜேர்மனி,ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் பரவியது. குற்ற வாளியை சக்கரம் ஒன்றில் கட்டி எலும்புகளை பெரிய சுத்தியல் ஒன்றால் ஒன்றன் பின் ஒன்றாக உடைப்பார். நபர் உயிருடன் இருப்பார் துண்டங்களாக . இறந்த பின் சதை துண்டங்கள் பறவைகளுக்கும் தலை காட்சிக்கும் வைக்கப்படும்.சிறிய குற்றவாளிக்கு ஓரிரண்டு அடிகளிலேயே இறக்க செயப்படும்.பாரிய குற்றவாளியை அதிகநேரம் துன்புறுத்துவர்.
6 .ரணபடுத்தல்
ஐந்தாம் நூற்றாண்டுகளில் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்த கொடிய முறை. முதலில் குற்றவாளியை அவருக்குரிய புதை குழியை தோண்ட செய்வார்கள்.பின்னர் குற்றவாளியை கூரிய ஈட்டி போன்ற ஒன்றை கொண்டு வாய்,குதம் வழிகளூடாக உடலில் செலுத்தி காயங்களை ஏற்படுத்தி குழிகளில் போட்டு விடுவர்.பின்பு நபர் இறக்கும் வரை பல மணித்தியாலங்களோ அல்லது நாட்களோ மரண வேதனையை அனுபவிக்க வேண்டியது தான்.
7 .உடலை சட்னியாக்குதல்
தெற்கு தென்கிழக்காசிய நாடுகளில் 4000 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட முறை.குற்றவாளியின் தலையை யானையை கொண்டு நசுக்குதல் அல்லது குற்றவாளியின் நெஞ்சு மீது பாரிய கல்லை போடு கொல்லுதல் என வகைகள் இருந்தன .இது அப்போதைய சட்ட நடைமுறைகளில் காலம் காலமாக இருந்தாலும் பின்னர் இது மனிதாபிமானமற்ற முறை என் நிறுத்தப்பட்டது.23 ஆம் புலிகேசியில்வடிவேலு சொல்வார் ஆயுதம் செய்யாத கொல்லனை யானையை கொண்டு நசிக்குமாறு.
8 .எரித்து கொல்லுதல்
ரோம்,இங்கிலாந்து,வடஅமெரிக்கா நாடுகளில் 1500 ஆம் ஆண்டளவில் இப்படியான முறை பேணப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக Jesse Washington’ என்பவர் வெள்ளைகார சிறுமியை கற்பழித்து கொன்றதற்காக 16000 மக்களின் ஆரவரிப்புக்கு மத்தியில் இப்படி கொல்லப்பட்டார்.இந்த முறையில் உடலின் கீழ்பகுதியில் இருந்தே எரிய ஆரம்பித்து இறுதியாக தலை எரியும்.சில வேளைகளில் விரைவாக எரிய உடல் மீது சில திரவங்களை பூசுவர்.
9 .உடலை பிளத்தல்
ஆப்ரிக்க,ஆசிய நாடுகளில் இருந்த முறை.குற்றவாளியை தலைகீழாக கட்டி தூக்கி பின்னர் வாள் ஒன்றால் கவட்டு பகுதியில் இருந்து உடலை இரண்டாக பிளக்கும் வண்ணம் அரிதல் ஆரம்பிப்பர். தலை கீழாக நிற்பதால் மூளைக்கு அதிக இரத்தம் போவதால் நபர் அதிக நேரம் உயிருடன் வலியை அனுபவிக்க வேண்டியது தான்.அதிக குருதி யிளப்பால் நபர் மயக்கமடைந்தாலும் உடலில் உயிர் இருக்கும்.உதாரணம் prophet Isaiah இன் கொலை
10 .உடலை அரிதல்
சீனாவில் இருந்த பிரபல முறை. இது ஆயிரம் வெட்டுக்களால் மரணம் என்று அழைக்கப்படுகிறது.குற்றவாளியின் உடலை மெது மெதுவாக வெட்டி வெட்டி எடுப்பதன் மூலம் அதிக நேரம் குற்றவாளிக்கு மரண வலியை கொடுக்கலாம் என்பதே நோக்கம்.20 முதல் முப்பது நிமிடங்கள் நீடிக்கக்கூடிய இந்த முறையில் ஒபியம் போன்ற மருந்து குற்றவாளி மயங்காமல் இருக்க கொடுக்கப்பட்டது. இது மக்களை அச்சுறுத்த மக்கள் முன்னிலையிலே மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இன்றும் கூட இதைவிட மோசாமான முறைகளில் மனிதர்கள் கொல்லப்பட்டாலும் அவை சட்டத்துக்கு புறம்பாக நடப்பதால் வெளி உலகுக்கு அவை தெரிவதில்லை
|
No comments:
Post a Comment