Thursday, May 19, 2011

கேரளாவின் 21வது முதல்வர். உம்மன் சாண்டி பதவியேற்றார்

கேரளாவின், 21வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, 72 இடங்களிலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 68 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதன்மூலம், நான்கு இடங்களில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று, மிகச் சிறிய பெரும்பான்மை மூலம், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில், அமைச்சரவையை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டதால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, கூட்டணி கட்சிகளுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக முடிவை ஏற்படுத்தினார். அமைச்சரவை மற்றும் இலாகா பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுக்கு இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கேரளாவின், 21வது முதல்வராக, உம்மன் சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குஞ்சாலிக் குட்டி மற்றும் கே.எம்.மணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி.மோகனன் (எஸ்.ஜே.டி), ஜேக்கப் (கேரள காங்கிரஸ்-ஜே), கனேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி), சிபு பாபி ஜான் (ஆர்.எஸ். பி.,-பி) ஆகியோரும், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.கவர்னர் ஆர். எஸ்.கவாய், இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

வரும் 23ம் தேதி, அமைச்சரவை மேலும் விரிவு படுத்தப்படுகிறது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த ஒருவரும், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.உம்மன் சாண்டியின் எளிமை: கேரள முதல்வராக பதவியேற்றுள்ள உம்மன் சாண்டி (67), மிகவும் எளிமையானவர். கட்சித் தொண்டர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, நெருக்கமாக பழகக் கூடியவர். மாணவ பருவத்தில் இருந்தே, காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களான கருணாகரன், அந்தோணிக்கு பின், கட்சித் தொண்டர்களிடையே உம்மன் சாண்டி செல்வாக்கு பெற்றவராக இருந்ததால், 2004ல், காங்கிரஸ் மேலிடம், இவரை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது.கேரள மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் சார்பில், ரமேஷ் சென்னிதலா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, கூறப்பட்டது. இருந்தாலும், உம்மன் சாண்டி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகளை, தனது சாமர்த்தியத்தால், திறமையாக கையாண்டு, சுமுக முடிவை ஏற்படுத்தினார்.குஞ்சாலிக் குட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் குஞ்சாலிக் குட்டி, புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அந்த பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் வெற்றி பெற்று, அமைச்சராகியுள்ளார்.கடந்த தேர்தலில், இவரது கட்சி ஏழு தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில், 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 20ல் வெற்றி பெற்றுள்ளது. "என் மீது கூறப்பட்ட புகார்கள் பொய் என, இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்' என, குஞ்சாலிக் குட்டி பெருமிதத்துடன் கூறினார்.

நடிகருக்கு அமைச்சர் பதவி :கேரள காங்கிரஸ் (பி) சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கனேஷ் குமாருக்கு, அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர், கார்யஸ்தன், போர் பிரண்ட்ஸ், ஜனகன், உஸ்தாத் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும், "டிவி' சீரியல்களிலும் நடித்துள்ளார்.கடந்த, 2001ல், அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசில், இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, இரண்டாவது முறையாக, இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போதைய அமைச்சரவையில் புது முகமாக இடம் பிடித்துள்ளவர், சிபு பாபி ஜான். கடந்த, 2001 தேர்தலிலும், இவர் வெற்றி பெற்றபோதும், தற்போது தான் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பி.டெக்., படித்தவர்.

ஆட்சி போச்சு... தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர்.அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசி சென்றார்.
தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.


தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது

எனக்கு மூன்று திருமணங்கள்

என் வயது 57. எனக்கு, மூன்று திருமணங்கள். முதல் மனைவி இறந்து விட்டாள்; மறுமணம் புரிந்து கொண்டேன்; அவளும் இறந்து விட்டாள். மீண்டும், பலரின் வற்புறுத்தலால் மணம் புரிந்து கொண்டேன். மூன்றாவது மனைவி, ஏற்கனவே மணமாகி, கணவனை பிரிந்து, அதாவது, ஊர் பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெற்று, வாழ்ந்து வந்தவர். அவருக்கு, 15 வயதில் மணமாகி, மூன்று மாதத்திற்கு பின், விவாகரத்து பெற்றுக் கொண்டதாக கூறினர்.

எனக்கும், அவருக்கும் கிட்டதட்ட, இருபது வருட வயது வித்தியாசம். என்னிடம் சேர்ந்த போது, "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் நன்றாக அனுசரித்து வாழ்...' என்று கூறி, மனைவியாக ஏற்று, அதிலிருந்து வழுவாமல், என் கடமைகளில் நியாயமாக நடந்து வந்தேன். எங்களுக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் பிறந்து, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்; இது, இன்றைய நிலை.

இதனிடையில், என் மூன்றாவது மனைவிக்கு என்ன நினைப்பு வந்ததோ, ஒரு காதலனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உல்லாசமாக இருந்ததாக, 2002ல், என்னிடமே கூறினாள். ஏதோ தவறாக நடந்து கொண்டாள் என நினைத்து, "இனி, அவ்வாறு தவறான வழியில் செல்லாதே...' என எச்சரித்து, தாம்பத்யத்துக்காகத்தான் இவ்வாறு செய்தாளோ என்று நினைத்து, இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்து வந்தேன்.
பின், 2007லிருந்து, மீண்டும், பக்கத்து நிலத்துக்காரருடன் என் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக, அந்த ஆளின் மனைவியே என்னிடம் கூறினார். அந்த ஆள், எனக்கு ஊர் முறைப்படி மருமகன் ஆகிறான்; அதனால், தவறாக சொல்கின்றனர் என்று நினைத்து, அவர்கள் நடவடிக்கையை கவனிக்க ஆரம்பித்தேன்.

ஜனவரி 2010ல், ஒருநாள், அந்த ஆள் ஓட்டலிலிருந்து வாங்கி வந்த உணவு பொட்டலத்தை, வேறு ஒருவன் மூலம் என் மனைவிக்கு கொடுத்தனுப்பி, அதை, என் மனைவி வாங்கி உண்பது தெரிந்த பின், அவன் மனைவி சொன்னது உண்மை என, நம்ப வேண்டியதாகி விட்டது.

ஊருக்கே இவர்களின் நடத்தை தெரிந்துள்ளது. அதனால், பலமுறை சண்டை வந்து, சில தடவை அடித்து விட்டேன். இருமுறை, என் மனைவி அவளின் தாய் வீட்டுக்கும் சென்று விட்டாள்.

அவ்வாறு சென்ற ஒரு தடவை, என் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, என்னை அழைத்து எச்சரித்து, என்னிடம் நல்லபடி வைத்து வாழ்வதாக, எழுதி வாங்கிக் கொண்டனர். தற்போது, என் வீட்டில் இருந்து, என்னை சிறிதும் மதிக்காமல், அவள் இஷ்டத்திற்கே நடந்து கொள்கிறாள்.
நான் ஒரு தடவை, 12 நாள் வீட்டை விட்டு போய் விட்டேன்; பிறகு வந்து விட்டேன். தற்கொலை செய்து கொள்ளத்தான் போனேன்; என்னவோ திரும்பி விட்டேன். சில மாதங்களாகவே நாங்கள் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்கு பிறந்த மகள், பெரியவளான போது, என்னை அழைக்காமல், என் அபிப்பிராயத்தை கூட கேட்காமல், என் உறவினர்கள் யாருமே இல்லாமல், அவளுடைய தாய் வீட்டார், ஐந்தாறு பேரை மட்டும் வைத்து, செய்து முடித்தாள்; அன்று முதல், நான் வீட்டில் சாப்பிடுவதில்லை.

நான் ஓய்வு பெற்ற (வி.ஆர்.எஸ்.,) மின்வாரிய அலுவலர்; பென்ஷன் வாங்குகிறேன். எனக்கு, நான்கு பெண், இரண்டு ஆண் குழந்தைகள். மூன்று பெண், ஒரு ஆணுக்கு திருமணமாகி விட்டது; இவளின் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இருந்த நிலத்தை இவளின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டேன். இந்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென ஆலோசனை கூறவும்.

உங்கள் இரு மனைவிகள் எதனால் இறந்தனர், இறக்கும் போது அவர்களின் வயதென்ன, அவர்களுடனான உங்கள் தாம்பத்யம் எப்படி இருந்தது, இறந்த இரு மனைவிகளும் அக்கா, தங்கைகளா என்ற தகவல்கள், உங்கள் கடிதத்தில் இல்லை.

உங்களுக்கு குடி, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சீவல் போடும் பழக்கம் உண்டா என்பது தெரியவில்லை. மின்வாரியப் பணியிலிருந்து எதற்காக விருப்ப ஓய்வு பெற்றீர்கள், பணியிடத்தில் எதுவும் பிரச்னையா என்பதும் புரியவில்லை.

உங்கள் மூன்றாவது மனைவி தன்முனைப்புள்ளவர், பிடிவாதக்காரர், பிரச்னைகளுக்கு உரிய தீர்வு வர காத்திராதவர் என யூகிக்கிறேன்.
உங்கள் மூன்றாவது திருமணமே, அவசியமில்லாதது. கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்றால், 35 - 40 வயது விதவைப் பெண்ணை நீங்கள் மணந்திருக்க வேண்டும்.

உங்கள் முதலிரவில், "நீ ஆயிரம் பேரிடம் பழகியிருந்தாலும், இனி, என்னிடம் மட்டும் பழகி, நன்கு அனுசரித்து வாழ்...' என்று கூறியிக்கிறீர்கள். இது, பத்தினிகளை சீண்டும் வார்த்தை; மறைமுகமாக உசுப்பிவிடும் வார்த்தை.

இந்த வார்த்தைகளில் இருந்து, பேச்சில் நீங்கள் கண்ணியம் காக்காதவர், தணிக்கை பண்ணாமல், வார்த்தைகளை அள்ளி கொட்டுபவர் என்பது புலனாகிறது. திருமணமான முதல் ஏழு வருடங்கள், ஒழுக்கமாக இருந்த உங்கள் மனைவி, எதனால் தடம் புரண்டார் என்பதை பார்ப்போம்...

1. உங்களிரு மனைவிகளின் மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மம் பற்றி ஊரார், உங்கள் உறவினர், உங்கள் மூன்றாவது மனைவியிடம் கோள் மூட்டியிருக்கக் கூடும். அதனால், உங்களது மனைவிக்கு, உங்கள் மீதிருந்த பயமும், மரியாதையும் காணாமல் போயிருக்கும்.

2. திருமணமான ஏழு வருடங்களில், உங்கள் பலம், பலவீனத்தை உங்கள் மனைவி முழுமையாக கணித்திருப்பார். தான் தவறு செய்தால், அவரால் எதுவும் செய்ய முடியாது என்ற அசட்டுத் துணிச்சல் அவருக்கு வந்திருக்கும். திருமண பந்தம் மீறிய தன் முதல் தொடர்பை, 2002ல் உங்களிடம் சொல்லி, உங்களை ஆழம் பார்த்திருக்கிறார். நீங்களோ, நெருக்கமான தாம்பத்யத்தால் அவளை திருப்திபடுத்த பார்த்தீர்கள்; அது, தவறான அணுகுமுறை. உங்களது செயல்பாடுகள் பற்றி சரியான கணிப்பு உங்கள் மனைவியிடம்தான் இருக்கும். அறுபது வயது ஆண், இருபது வயது பெண்ணை தாம்பத்யத்தால் திருப்திபடுத்தினால் போதுமா? தோற்ற பொருத்தம், இதர, இதர தேவைப்படும். சமுதாய விமர்சனம் பாசிட்டிவ்வாக தேவை.

3. உங்கள் மனைவிக்கு, யாரோ ஒரு ஆண், விபரமாக செயல்பட சொல்லித் தருகிறார். அதனால்தான், உங்கள் மனைவி, உங்கள் மீது வன்முறை தடுப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்து, கண்டிக்க வைத்திருக்கிறாள்.

4.என்ன தவறு செய்தாலும், அவள், உங்களுக்கு தேவை என்ற நிலையில் இருக்கிறீர்கள்; அதனால்தான், உங்கள் செயல்பாடுகள் ஆக்கரீதியாய் இல்லை. ஒரு தடவை தற்கொலை செய்ய, 12 நாள் வீட்டை விட்டு சென்று விட்டீர்கள். இருந்த நிலத்தை மூன்றாவது மனைவியின் மகனுக்கே சுத்த கிரயம் செய்து கொடுத்து விட்டீர்கள். மனைவி சமைத்த சமையலை சாப்பிடுவதில்லை. சில, பல மாதங்களாக நீங்கள் மனைவியுடன் பேசுவதில்லை. நீங்கள் இல்லாமல் மகளின் பூப்புனித நீராட்டு விழாவை, தன் தாய் வீட்டிலேயே நடத்தி முடித்து விட்டாள் உங்கள் மனைவி.

5. உங்களுக்கும், உங்களிரு மனைவிகள் மூலம் பெற்ற குழந்தைகளுக்கும், சரியான தகவல் தொடர்பு இருக்காது என, நம்புகிறேன்.

6. ஊர் பஞ்சாயத்து மூலம், உங்களின் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்து விடுங்கள். பென்ஷன் பணத்தை வைத்து, மீதி ஆயுளை தன்னந்தனியனாக கழியுங்கள்.

7. பொருந்தாத திருமணங்கள் நிரந்தர தலைவலியை பரிசளிக்கும் என்பது இக்கேள்வி - பதில் மூலம் அறியப்படும் நீதி.

இருபதாவது குழந்தையை பெற்று சாதனை

உக்ரைன் நாட்டில் ஒரு பெண் தன், இருபதாவது குழந்தையை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் பெயர், லியோனோரா நமினி; வயது 41. சமீபத்தில் இவருக்கு, இருபதாவது குழந்தை பிறந்தது. இதன் மூலம், இவருக்கு, பத்து ஆண், பத்து பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் பெயர் ஜோனாதன்; வயது இருபது. அவருக்கு திருமணம் ஆகி விட்டது. மேலும், ஆறு குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர். எட்டு குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றனர். ஆறு குழந்தைகள் துவக்க பள்ளியில் படிக்கின்றனர். இந்த குழந்தைகளின் தந்தை பெயர் ஜனோஸ் நமினி. அவருடன் கூட பிறந்தவர்கள் மொத்தம், 16 பேர். தாய் லியோனோரா, அவரது குடும்பத்தில், 14வது நபர்.

"இத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தப் போவதில்லை. இன்னும், அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன்...' என்கிறார் லியோனோரா.

செல்போன் நிறுவனங்கள் கொள்ளையே அடிக்கின்றன

   அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும்,செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது. 




  "விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.

      


       
மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம். 

கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 

அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை. 

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.

இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.






அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும்.

நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..





நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

Back to Top பட்டனை எப்படி வைப்பது?

1. முதலில் Blogger Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்தால் ஒரு window வரும். அதில் HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

குறிப்பு: Add a Gadget இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இதை செய்யலாம். ஏற்கனவே நீங்கள் HTML/JavaScript gadget வைத்திருந்தால் அதில் சேர்ப்பது நல்லது.

3. பிறகு Title என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை இடவும். உதாரணமாக, Back To Top.
Content என்ற இடத்தில் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTLTKE3gvby4cmxMxB7f0RTwqGBkxbj4kAA2D50YQwwlUGDSnEPArASLuf8NxoZ0JKOBNbPhJZ_jWwRcsnBUzJJ08K7kuqa3HpfXIzti5XDcfp-DygwELKdF6X1w0YFCQaH94DSDYbB3g/s1600/4.gif"/></a>

4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

இனி உங்கள் ப்ளாக்கின் கீழே Back To Top பட்டன் காட்சி அளிக்கும்.






Code-ல் மாற்றம் செய்வதற்கு:

**மேலே உள்ள Code-ல் நீல நிறத்தில் உள்ள Back to Top என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான வார்த்தைகளை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு "மேலே செல்ல"

**மேலே உள்ள Code-ல் சிகப்பு நிறத்தில் உள்ளhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTLTKE3gvby4cmxMxB7f0RTwqGBkxbj4kAA2D50YQwwlUGDSnEPArASLuf8NxoZ0JKOBNbPhJZ_jWwRcsnBUzJJ08K7kuqa3HpfXIzti5XDcfp-DygwELKdF6X1w0YFCQaH94DSDYbB3g/s1600/4.gif என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தின் முகவரியை (Image URL) கொடுக்கலாம்.

மேலே உள்ள Code-ல் bottom:5px;right:5px; என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு,

*கீழிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற bottom:5px; என்பதில் 5 என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.

* வலது பக்கத்திலிருந்து பட்டன் வரை உள்ள இடைவெளியை மாற்ற right:5px; என்பதில் 5என்பதற்கு பதிலாக வேறு எண்ணை மாற்றலாம்.

** பட்டன் இடது பக்கம் தெரிய வேண்டுமானால், right என்பதற்கு பதிலாக left என்று மாற்றிக் கொள்ளவும்.

உங்களுக்காக சில பட்டன்கள்:









Internet Download Manager v6.04 License key யுடன்


யுடன் 
   இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் மென்பொருள் Internet Download Manager v6.04. இந்த internet download manager பற்றி நாம் அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை.ஏனெனில் உங்களில் அதிகமானவர்கள் இந்த மென்பொருளையே பயன்படுத்தி கொண்டிருப்பீர்கள். ஆனால் அதுவும் Trail version ஆக தான் இருக்கும். அந்த Trail version மென்பொருளை நாம் $ 29.95 வாங்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்த மென்பொருளை கீழே தரபட்டுள்ள link ஐ கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.

தரவிறக்க சுட்டி : Internet Download Manager v6.04



இம் மென்பொருளை Download செய்தால் .rar file ஆக zip செய்யப்பட்டு வரும். அந்த file ஐ extract செய்யும் போது ஒரு passward கேட்கும். அப்பொழுது நீங்கள் www.infotechportal.com என்று type செய்து இந்த மென்பொருளை download செய்து கொள்ளலாம்.உங்களுக்கு இந்த மென்பொருளுக்குரிய serial key உம் தரப்பட்டிருகிறது. இம் மென்பொருளை தரவிறக்கிய பின் அந்த மென்பொருளின் setup file ஐ double click செய்து run பண்ணத் தொடங்கும் போது கீழ் கண்டவாறு ஒரு dialog box வரும்.

இந்த dialog box இலே www.infotechportal.com எனும் passward ஐ type செய்து இம் மென்பொருளை install செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தி பாருங்கள். ஏதாவது இது தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்கள் இருந்தால் 0094770741844 (இலங்கை) எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் செய்யுங்கள்.