Sunday, May 1, 2011

இளம்பெண் - ரயில் - டி. டி.ஆர் - கற்பழிப்பு முயற்சி


    தனியாக ரயிலில் பயணம் செய்த பெண்ணை குடிபோதையில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

     அஜ்மரிலிருந்து அபு ரோடு செல்லும் அஜ்மர்-டாடர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயது பெண் ஒருவர் தனியாக பயணம் செய்துள்ளார். இவரிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

      இதனால் கூச்சலிட்ட அந்த பெண்ணின் குரல் கேட்டு வந்த சக பயணிகள் டிக்கெட் பரிசோதகரை சரமாறியாக தாக்கியதுடன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்ட போது, ஸ்லீபர் கோச்சில் அமர்ந்திருந்த தன்னை ஏசி கோச்சிற்கு வருமாறு டிக்கெட் பரிசோதகர் அழைத்ததாகவும் தெரிவித்தார். 

    அருகில் இருந்த ஏசி கோச்களும் காலியாக இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் வந்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாயின் வடிவத்தை மாற்ற வேண்டுமா? ஏன்?

அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் ஆட்சி மொழி அந்தஸ்தில் உள்ள முக்கிய மொழிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது 22 மொழிகள் இந்த அட்டவணையில் இடம் பெற்று உள்ளன. 

இன்னும் 38 மொழிகளை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய தேர்வாணையத்துக்கும் பெரிய சிக்கல் ஏற்படும்.

ரூபாய் நோட்டுகளில் தற்போது எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளில் 15 இடம் பெற்றுள்ளது. இனி 38 மொழிகளை சேர்த்தால் ரூபாய் நோட்டுகளில் 60 மொழிகள் எழுதப்பட வேண்டும். இதற்காக ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்ற வேண்டும். அளவும் பெரிதாகி விடும்.

இதுபோல் மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் இந்த மொழிகள் விருப்ப அடிப்படையில் சேர்க்க வேண்டும். நேர்முகத் தேர்விலும் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தப்பட வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது 8வது அட்டவணையில் 14 மொழிகளே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

FUCK







சரி நம் விசயத்திற்கு வருவோம்..முற்கால இங்கிலாந்தில் அரசனின் அனுமதியில்லாமல் குடிமக்கள் யாரும் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டும் அல்லது உறவு வேண்டும் எனில் அரசனிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். அப்போது அரசனிடமிருந்து ஒரு உலோக பட்டை அவர்களுக்கு அளிக்கப்படும்.

அதை அவர்கள் உறவு கொள்ளும் சமயம் தங்கள் வீட்டிற்கு வெளியே தொங்க விட வேண்டும். அந்த பட்டையில் Fornication Under the Consent of King என்று எழுதியிருக்கும். அதன்சுருக்கம் தான் FUCK (Fornication Under the Consent of King) என்ற வார்த்தை.

புரியுது, நீங்கள் முனுமுனுப்பது. அதெப்படி ஒவ்வொரு வீடாக வந்து பார்க்கவா போகிறார்கள் என்று..அக்கால்த்தில் அரசன் பேச்சை கேட்கும் ஒரு நல்ல குடிமக்களாக இருந்திருந்தால் வாய்ப்பு உள்ளது அல்லவா?. ஆனால் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது, இதனால் தான் மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடம் பூண்டு நகர்வலம் வருகிறார்களோ என்று..

எல்லாரும் பல்ல நறநறன்னு கடிக்கற சத்தம் கேட்குது..இருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டு உங்க் வோட்டு உரிமைய காப்பாத்திட்டு, கொஞ்சம் அறிவுரையும் சொல்லிட்டுப் போங்க...

தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய தொழில்நுட்பம்

தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. கவனமின்மையால் பல திட்டங்களில் குடிநீர் இழப்பு அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் 10 முதல் 15 சதவீத குடிநீர் வீணாவதாக தெரியவந்துள்ளது.

குடிநீர் வீணாகிறதா என கண்காணிக்கும் அதிநவீன கண்காணிப்பு வசதி 10-க்கும் குறைவான திட்டங்களில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக கோவை பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் ரூ.20 லட்சத்தில் டெலி மெட்ரி என்ற கண்காணிப்பு வசதி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 3 குடிநீர் திட்டங்களில் இந்த வசதி செய்யப்பட்டது.

நீர் இழப்பை கட்டுப்படுத்த கண்காணிப்பு வசதியை அதிகரிக்க நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டமிட்டது. குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி 4 குடிநீர் திட்டங்களுக்கு ரூ.7 கோடியில் புதிய பணிகளுக்கான உத்தரவை பிறப்பித்தார்.

 இதன்மூலம் குடிநீர் சப்ளையை கண்காணிக்க ஸ்கேடா (குடிநீர் சப்ளையை மேற்பார்வை செய்தல், விவரம் சேகரித்தல், தகவல் சேமித்தல்) என்ற திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ரூ.1.5 கோடி ரூபாய் செலவில் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டத்துக்கான பணிகள் ஓரிரு மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முத்தூர் காங்கயம், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய இடங்களை தொடர்ந்து மற்ற குடிநீர் திட்டங்களிலும் ஸ்கேடா மற்றும் டெலி மெட்ரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஸ்கேடாவும், டெலி மெட்ரியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தொழில்நுட்பம். நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீர் பிரதான குழாயில் சப்ளையாகும் குடிநீரை ஸ்கேடா கருவி 24 மணி நேரமும் கண்காணிக்கும். சப்ளையாகும் குடிநீர் அளவு, குறைகிற மற்றும் அதிகரிக்கிற அளவு ஆகியவற்றை குடிநீர் வடிகால் வாரிய அலுவலக கண்காணிப்பு மானிட்டரில் கண்டறியலாம்.

குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ, உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்தாலோ குழாயின் குடிநீர் அழுத்தம் மூலமாக அதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஸ்கேடா பயன்பாட்டுக்கு வந்தால் குடிநீர் இழப்பு 90 சதவீதம் வரை தடுக்கப்படும்.

OK ன்னா என்னங்க அர்த்தம்?

பேசும்போது என்னமோ அமெரிக்க ரிட்டர்ன் மாதிரி OK,...OK...OK.....னு பில்டப் பண்ணுவோம். அதோட உண்மையான அர்த்தம் என்ன அப்படின்னு நாம யோசிச்சிருப்போம்...


OK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

முன்னொரு காலத்தில் போரில் இருந்து திரும்பி வரும் படைகள் எந்த வித சேதாரமும் இன்றி வந்தால் (அதாவது எந்த ஒரு உயிரிழப்பும் இல்லாமல்) அதை ஒரு இடத்தில் “0 KILLED” என்று எழுதி மாட்டி வைப்பார்களாம்.அதிலிருந்து தான் OK – O.Killed என்று அர்த்தம் வந்தது.



ECHO என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது.

பதிவு மொக்கையா இருக்குதுன்னு நீங்க என்னை மொக்க பண்ணாம ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்க சாமி.

நான் ஒரு 21வயது பெண்;

நான் ஒரு 21வயது  பெண்; உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் நான் படித்துள்ளேன். இப்போது, என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறேன், உங்களின் வழி காட்டுதலுக்காக...

என் குடும்பத்தில் நான்கு பேர். நான் சிறு வயதிலிருந்து, மிகவும் கஷ்டப்பட்டு, சந்தோஷம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். என் அப்பா, எனக்கு ஒரு அப்பாவாகவும், அம்மாவுக்கு நல்ல கணவனாகவும் நடந்து கொள்ளவில்லை; தினமும் வீட்டில் சண்டை.

பிளஸ் 2 வரை, வீட்டில் இருந்து தான் படித்தேன். கல்லூரி, அதைத் தொடர்ந்து வேலையை வெளியூரில் பார்த்து, ஹாஸ்டலில் இருந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து, நான் ஆசைபட்டது எதுவும் எனக்கு கிடைத்ததில்லை. சந்தோஷம் என்ற ஒன்று இருக்கிறது என்று, வெளியூருக்கு வந்து தான் தெரிந்து கொண்டேன் அம்மா. கஷ்டம், வேதனை இதை மட்டும் பார்த்த நான், வாழ்வில் பிடிப்பு ஏற்படாமல், தற்கொலை செய்ய முயன்றேன். என் அம்மா என்னை காப்பாற்றி, "நீ எனக்காக வாழ வேண்டும்...' என்று கூறினார்; அதனால், கடமையே என்று வாழத் துவங்கினேன்.
அப்போது, என் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்த வந்தார் ஒருவர். அவர், என்னுடைய கல்லூரி நண்பர்; இருவரும் நல்ல நண்பர்கள். சில நாட்களுக்கு முன், அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் என்னை பார்த்து கொண்ட விதமும், என்னிடம் நேர்மையாக பழகிய விதமும், என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. சிறு வயதில் இருந்து எனக்கு கிடைக்காத அன்பு, அவரிடம் கிடைத்தது.

அவரை காதலிப்பதாக, அவரிடம் கூறினேன்; அவரும், என்னை நேசிப்பதாக கூறினார். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். எனக்கும், அவருக்கும், விட்டு கொடுக்கும் தன்மையும், புரிந்து கொள்ளும் தன்மையும் நிறையவே இருந்தன. நாட்கள் மிகவும் சந்தோஷமாக கழிந்தன.

இரு வீட்டாரிடமிருந்து சம்மதம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம், இருவர் மனதிலும் ஆழமாக பதிந்தது. ஆனால், என் மனதில் இப்போது மிகப்பெரிய குழப்பம் ஒன்று தோன்றியிருக்கிறது. எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், என்னால் உறுதியான முடிவு எடுக்க முடியும்; ஆனால், இந்த விஷயத்தில் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், இதில் அவருடைய உயிர் அடங்கியுள்ளது; அதனால் தான், நான் தயங்குகிறேன்.

அந்த விஷயம்... என் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை; ஆனால், அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது. நான் அவரிடம் சொன்னதற்கு, "எனக்கு அதெல்லாம் முக்கியம் அல்ல; நீ மட்டும் தான் எனக்கு முக்கியம். ஒருநாள் வாழ்ந்தாலும், உன்னுடன் வாழ்ந்தால் போதும்...' என்று கூறுகிறார்.

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என்று அவரிடம் என்னால் கூற முடியவில்லை. ஆனால், எனக்கு நூறு வருடம் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக அவர் வாழ வேண்டும் என்று ஆசை. அவரை நான் கல்யாணம் செய்து, அவருடைய உயிருடன் விளையாட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவரை விட்டு பிரிய, அவரை இழக்க எனக்கு சக்தியும் இல்லை. நான் என்ன செய்யட்டும் அம்மா.

ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருந்து, பெண்ணுக்கு இல்லை என்றால், என்ன ஆகும்? அதெல்லாம் உண்மை என்றால், காதல் கல்யாணம் செய்தவர்கள், ஜாதகத்தை நம்பாதவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனரே எப்படி? வாழ்வதற்கு, அன்பு, விட்டு கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் முக்கியமா, இல்லை ஜாதக பொருத்தம் முக்கியமா?

அவரை திருமணம் செய்து கொள்ளவா... விட்டு விலகவா அல்லது நான் இந்த உலகை விட்டு போய் விடவா? ஏனென்றால், அவரில்லாமல் என்னால் வாழ இயலாது. அதிக குழப்பத்துடன், உங்கள் தீர்வுக்காக காத்திருக்கிறேன். அதுவரை நான் கல்யாணத்தை தள்ளி போடுகிறேன்.

பதில் :
 
  உன் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் என எழுதியிருந்தாய். உன் அப்பா, அம்மா, நீ தவிர, நான்காவது ஆள், உன் தம்பியாகவோ, தங்கையாகவோ இருக்கும் என நினைக்கிறேன்.

ஒற்றுமை இல்லாத பெற்றோருடன், பிளஸ் 2 படிக்கும் வரை வாழ்ந்த நீ, விடுதியில் தங்கி, கல்லூரி படிப்பை முடித்திருக்கிறாய். தற்சமயம் வேலை பார்த்து, "ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில்' தங்கியிருக்கிறாய் என நம்புகிறேன். உனக்கு வயது, 21 என்றிருக்கிறாய். 17 வயதில் பிளஸ் டூவும், ஏதாவது ஒரு டிகிரியை, 20 வயதிலும் முடித்திருப்பாய். 10 மாத காலமாக, ஏதாவது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாய் என யூகிக்கிறேன்.
காரணமில்லாத காரணங்களுக்காக தற்கொலை செய்ய முயல்வது, மனப் பக்குவமின்மையை காட்டுகிறது. தொடர்ந்து போராடும் மனோபாவம், எந்த பிரச்னையையும் வென்றெடுக்கும். வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது வந்தாலும், "இதுவும் கடந்து போகும்...' என நினை. கொடுமைக்கார கணவனை சகித்து, உன் அம்மா இல்லையா?

கல்லூரி நண்பனை காதலிப்பதாக எழுதியிருந்தாய். தற்சமயம், அவர் மேற்படிப்பு படிக்கிறாரா அல்லது உன்னைப் போலவே, தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரா அல்லது சும்மா தான் இருக்கிறாரா? இந்த விவரங்களை, நீ, உன் கடிதத்தில் தெரியப்படுத்தவில்லை.

உன் காதலனை, இந்திரன், சந்திரன் என புகழ்ந்திருக்கிறாய். காதலிக்கும் போது, எல்லா ஆண்களும், ஹீரோ போல் தெரிகின்றனர்; கல்யாணத்திற்கு பின், சாயம் போய், வில்லன் ஆகி விடுகின்றனர். காதலன் பற்றிய உன் கணிப்பு சரிதானா என்பதை, காலம் தான் தீர்மானிக்கும். உன்னுடன் படித்தவன் என்பதால், உன் காதலனுக்கும் உன் வயது தான் இருக்கும்.

உங்களிருவருக்கும் இப்போது திருமணம் அவசியம் தானா? இருவருமே வேலைப் பார்த்துக் கொண்டே, தொலைதூரக் கல்வி மூலம், மேற்படிப்பு படிக்கலாமே... மூன்று வருடம், உடல் தொடா காதலை தொடரலாமே? ஒருவரின் மீது ஒருவர் கொண்டிருக்கும் அபிப்ராயம் நிஜம் தானா என சரி பார்க்கலாமே...
சரி... இப்போது உங்களிருவரின் ஜாதக விஷயத்துக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்க்க, ஜாதகங்களை எடுத்துக் கொண்டு, நீயும், உன் காதலனும் நேரடியாக ஜோதிடரிடம் போனீர்களா அல்லது உங்களிரு வீட்டாரில் ஒரு வீட்டார், "மாப்பிள்ளை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறது...' எனக் கூறி, உங்களது திருமணத்தை நிறுத்தப் பார்க்கின்றனரா?

மனப் பொருத்தம் இருக்கும் நீங்கள், தலையில் ஜாதகத்தை சுமப்பது ஏன்? 

செவ்வாய் தோஷ ஆண், செவ்வாய் தோஷமில்லாத பெண்ணை மணந்தால் என்னாகும் என்ற கேள்வியை, ஜோதிடர் ஒருவரிடம் வினவினேன். "ஆணின் ஜாதகத்தை பார்த்தால் தான், கிரகங்கள் எங்கெங்கு நிற்கின்றன என்பது தெரியும். மேற்படி இருவரும் திருமணம் செய்து கொண்டால், செவ்வாய் தோஷ ஆணுக்கு உயிர் ஆபத்து வராது; ஆனால், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே, வெப்பம் தொடர்பான உடல் உபாதைகள் இருக்கும். பரிகாரம், சஷ்டி விரதம் மாதத்திற்கு ஒரு நாள் வீதம், முதல் குழந்தை பிறக்கும் வரை இருக்கலாம் என பதிலளித்தார்.

ஜாதகத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம். அறியாமை, மாறு வேடத்தில் வரும் ஆசீர்வாதம். ஜாதகத்தை பார்க்காத ஒருவருக்கு ஒரு விபத்து நடந்தால், உயிர் பிழைத்த வரை லாபம் என நிம்மதியாக வாழ்வார். ஜாதகம் பார்க்கும் ஒருவருக்கு விபத்து நடந்தால், கண்டதையும் போட்டு குழப்பி, அடுத்தடுத்து விபத்துகளை, தானே ஏற்படுத்திக் கொள்வார்.
ஜாதகம், விதி, ஊழ்வினைப் பயன் எல்லாவற்றையும் விட பிரமாண்டமானது அன்பு. அது, சுயநலம் தொலைக்கும்; 

எதிலும் லாப - நஷ்டக் கணக்கு பார்க்காது. பிரபஞ்ச விதிகளை வகுத்தவன் இறைவன். ஒருவர் மீது அதை பிரயோகிக்க அல்லது பிரயோகிக்காமலிருக்க, அவன் நாட்டமே அதிமுக்கியம்.

மூன்று வருடம் கழித்து, உன் காதலனையே மணந்து கொள்; அவனை விட்டு விலகாதே... மிரட்டல் வார்த்தையாக, "தற்கொலை'யை பயன்படுத்தாதே!
பெஸ்ட் ஆப் லக்!

மொபைல் வைரஸ் ஒரு பார்வை

 மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ் சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள். இப்போது ஐ.பி. முகவரி பெறும் அனைத்து சாதனங்களையும் இலக்காக வைத்துள்ளனர். மொபைல் போன்கள் இன்டர்நெட் இணைப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால், மொபைல் போன்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட மொபைல் போன்கள், பன்னா ட்டளவில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
மொபைல் போன்களைத் தாக்கும் வைரஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப் பின்னர் அதிலிருந்து நீங்கி விடுகின்றன. வந்ததும் போனதும் பயன்படுத்துபவருக்குத் தெரியாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு இயங்குவதாகத் தெரிகிறது. 

இந்த வைரஸ்களுக்கு அடித்தளம் பெரும்பாலும் டவுண்லோட் செய்யப் படும் புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள்ளன. அடுத்ததாக, மொபைல் போனுக்கான சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர்வரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட் மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனாலேயே அது வைரஸ் இல்லாதது என்று தெரிகிறது.

சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10 ஆயிரம் தனிப்பட்ட தளங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ளதாகக் கண்டறிந் துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடுதல் விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தளப் பக்கங்கள் அனைத்தும் நிலையான தகவல்களைத் தரும் பக்கங்களாக அமைக்கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள் சென்று இணைந்து தங்கள் கெடுதல் வேலையை மேற்கொள்வது எளிதாகிறது. 

இவற்றுடன் புளுஜாக்கிங் (Bluejacking) என்ற வகையில் தகவல் திருடும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம் மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை, அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது. 

இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வைரஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் மொத்தமாகத் திருடப் படுகின்றன. 

தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ரோமிங் மேற்கொள்கையில், மொபைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறியப் பட்டுள்ளது.

Zeus Trojan என்ற ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில் உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல் போன் பயன் படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் திறன் கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மொபைல் போன் திருடப்பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம் செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில் உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக்கவும் வழி தரப்படுகிறது.

சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ்களை இங்கு பார்க்கலாம்.

1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது. 

2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ். புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. 

3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும் அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம் அறிகிறது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டுமானாலும், தன் நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.

4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா போன்களில் பயன்படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ். செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது.