Sunday, March 27, 2011

1 ரூபாயில் உங்கள் கிட்னியை சுத்தம் செய்ய?

நமது இரத்தத்தில் உள்ள உப்பையும், விஷத்தன்மையையும் பில்டர் செய்து சுத்தம் செய்யும் வேலையை நமது கிட்னி செய்து வருகின்றது. அப்படிபட்ட மகத்தான வேலையை நமது கிட்னி இராப்பகலாக செய்து வருகின்றது. அப்படிபட்ட கிட்னியை அவ்வப்போது நாம் தனிப்பட்ட கவனம் செலுத்தி கவனித்து வந்தால் அதன் ஆற்றல் நீண்ட நாள் இருப்பதுடன் ஸ்லோவாக இல்லாமல் வெகு தரத்துடன் இயங்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது மிகவும் எளிது அதற்கு தேவை 1 ரூபாய் மட்டுமே. 



இந்த ஒரு ரூபாய் கொண்டு நான் கொத்தமல்லிதழை என்னும் இலையை வாங்கி அதை சிறிதாக நறுக்கி சுத்தமான நீரில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு அதன் பிறகு அதை வடிகட்டி ஆற வைத்து தினமும் ஒரு க்ளாஸ் குடித்து வந்தால் நமது கிட்னி மிகவும் சுத்தமாக்கபட்டு நன்றாக வேலை செய்யும். சால்ட் & விஷக் கழிவுகள் யூரின் மூலம் வெளி வருவதை நீங்கள் கவனிக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் ஒரு வித புது மாற்றத்தை உணரலாம்.

இது ஒரு இயற்கையான கிட்னியை சுத்தம் செய்யும் முறையாகும். 

கொத்தமல்லி தழையை ஆங்கிலத்தில் Coriander (Coriandrum sativum) என்றும், ஹிந்தியில் இதை Dhania என்றும் அமெரிக்காவில் இதை Cilatro என்றும். இதையையே வெஸ்டர்ன் உலகத்தில் Chinese parsley or Mexican parsley என்றும் அழைப்பார்கள்.

ஜப்பானின் அணு உலையும், மழையும், பிடாடைனும், கேடயச்சுரப்பியும், போலி குறுஞ்செய்தியை மேலனுப்புதலும்



இதோ இந்த படத்தில் நீங்கள் பார்ப்பதை கேடயச்சுரப்பி கேடயம் (Thyroid Shield) என்று அழைப்பார்கள்


இதை கழுத்தை சுற்றி அணிந்தால் இப்படி இருக்கும்
இதோ இந்த அக்கா அணிந்திருக்கிறார்களே, அப்படித்தான்


இதோ மற்றொரு படம்

இது எதற்கு தெரியுமா

நம் கழுத்தில் கேடயச்சுரப்பி (thyroid gland) என்று ஒரு நாளமில்லா சுரப்பி (endocrine gland) உள்ளது. இது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும்



ஆனால் கதிரியக்கத்தால் (Radiation) இது அதிகம் பாதிக்கப்படும் ஒரு உறுப்பு. கதிரியக்கம் என்பது அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும், இந்த உறுப்பை அதிகம் பாதிக்கும் என்பதால்

ஒருவர் கதிரியக்கதினால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் அவர் இதை கழுத்தில் அணிவது அவருக்கும், அவரது கேடயச்சுரப்பிக்கும் நலம். எனவே ஊடுகதிர் பரிசோதனை மேற்கொள்ளும் பிணியாளரும், அந்த அறையில் இருக்கும் மருத்துவர்கள் அல்லது பிற பணியாளர்களும் இதை அணிவார்கள்

ஏன் இதை அணிகிறார்கள் என்றால், இதை அணிந்தால் தான் கேடயச்சுரப்பிக்கு பாதுகாப்பே தவிர வெறும் பிடாடைனை கழுத்தில் தடவினால் அது கதிரியத்திலிருந்து பாதுகாக்காது



“கழுத்தில் பிடாடைன் (betadine) தடவி ஜப்பானிய கதிரியக்கத்திலிருந்து உங்களை பாதுகாக்கவும்” என்று வரும் குறுஞ்செய்தியை (SMS), மின்னஞ்சலை (E Mail) அடுத்த முறை மேலனுப்பும் (forward) முன்னர் வெறும் பிடாடைன் கதிரியகத்திலிருந்து பாதுகாக்காது என்பதாலேயே கேடயச்சுரப்பி கேடயம் என்ற ஒரு பொருளை பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைக்கவும்

உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க


இந்த பிஸி உலகில் பெண்கள் வேலைக்கும் சென்று , வீட்டிலேயும் வேலை செய்து லேட்டாக தூங்க செல்வார்கள். ஒழுங்கான நேரத்திற்கு தூங்க செல்லாதது உங்கள் தோலுக்கு அதிக கெடுதலை கொடுக்கும்.


உங்கள் முகம் பொலிவோட இருக்க அதிக பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்கு சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவுயில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போல பளபளக்க ஒரு எளிமையான அட்வைஸ் தருகின்றேன். 


ஒரு தக்காளி பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக ஸ்லைஷ் பண்ணி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணிரில் கழுவுங்கள்.


அதன் பிறகு உங்கள் முகம் கண்ணாடி போல பளபளனு இருப்பதை உணர்விர்கள். காலையில் உங்கள் கணவர் உங்கள் அருகில் வந்தால் உங்களை முத்தமிட வருகிறார் என்று நினைக்காதீர்கள். கண்ணாடியை தொலைத்து விட்டு சேவிங் செய்ய கண்ணாடியில்லாததால்தான் உங்கள் அருகில் வருவார், காலை நேரத்தில் நம்ம ஆட்களுக்கு ரொமன்ஸ் மூடு ஏதுவும் வராதுங்கோ...

கடைசியாக ஆண்களுக்கும் ஒரு குறிப்பு. நீங்களும் இந்த குறிப்பை கடைப்பிடிக்கலாம்.அதன் பிறகு சிவாஜி படத்தில் வரும் ரஜினியை போல பளபளக்காலாம்.

புதிய கண்டுபிடிப்பு: பணத்தை கணக்கிட....Simplified money counting machine


எல்லாமே எளிதாக இருக்கவேண்டும் என்றும் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்காத மனிதன் இருக்கமாட்டான். அதுபோல மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சரியாக எண்ணிக் கொடுக்க வேண்டும் என்றும் வாங்கும் போது அதிக அளவு கிடைத்தால் சந்தோஷமே ஆனால் குறைந்த அளவு வாங்கிவிடக் கூடாது என்று ஓன்றுக்கு இரண்டு தடவையாக எண்ணி பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. 
பணப் புழக்கம் அதிகரித்துவிட்ட தமிழ் நாட்டில் அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..?

வங்கிகளில் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அவ்வளவு பெரிய மெஷின்கள் தேவையில்லை அதற்காக. உங்களின் இந்தக் கவலையைப் போக்க வந்திருக்கிறது பணத்தை எண்ணும் "கவுண்ட்டிங் ரிங்" என்ற மோதிரம். 
இந்த கவுண்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும். மோதிரத்தில் உள்ள பவர் பட்டனை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்

.இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுண்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி தலைவர்களுக்கு மிகவும் இது உதவியாக இருக்குமென்பதால் இந்த பதிவை வெளிடுகிறேன். ஹீ....ஹீ...........ஹீ........

மக்களே இதுவும் உங்களுக்கு கடினம் என்றால் என்னிடம் அனுப்பி வையுங்கள் நான் உங்களுக்காக கணக்கிட்டு பாதுகாப்பாக வைத்து இருப்பேன். இதற்கெல்லாம் நீங்கள் சுவிட்ஸர்லாந்து போக வேண்டாம். 

தனது அச்சில் இருந்து பூமி 4 இஞ்சியும், ஜப்பான் 8 அடியும் விலகல்..!

தனது அச்சில் இருந்து பூமி 4 இஞ்சியும், ஜப்பான் 8 அடியும் விலகல்..!
8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.
பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக மேற்கிலிருந்து கிழக்காக சுழன்று வருகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டு இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் 2.76 இன்ச் அளவுக்கு (7 சென்டி மீட்டர்) பூமியின் சாய்வை மாற்றியது. இதனால் பூமியின் சுற்று வேகமும் குறைந்து ஒரு நாளின் சில மைக்ரோ செகன்டுகளும் குறைந்தன. மேலும் அந்தமான் தீவுகளுக்கும் இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் இடையிலான தூரமும் சில அடிகள் குறைந்தது. மேலும்

இதையடுத்து கடந்த தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கமும் இதே போல பூமியின் அச்சை சில செ.மீ. மாற்றி பூமியின் சுற்று நேரத்தின் சில மைக்ரோ செகன்டுகளைக் குறைத்தது.
இப்போது ஜப்பானை உலுக்கிய பூகம்பமும் பூமியின் அச்சை 4 இன்ச் அளவுக்கு மாற்றியுள்ளதோடு, 24 மணி நேரத்தில் 1.6 மில்லி செகண்டுகளையும் குறைத்துவிட்டது.
அமெரிக்க பூகம்பவியல் கழக விஞ்ஞானி கென்னத் ஹட்நட் கூறுகையில், ஒட்டுமொத்த ஜப்பானும் பூமியின் அச்சிலிருந்து 8 அடி அளவுக்கு விலகியுள்ளது. ஜப்பான் வரலாற்றில் இது மிகப் பெரிய பூகம்பமாகும். இந்த கடும் பூகம்பத்தின் காரணமாக வெளியான மிக மிக அபரிதமான சக்தியே, கடலை கொந்தளிக்க வைத்து பெரும் சுனாமி அலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. 30 அடி அளவுக்கு சுனாமி அலையின் உயரம் இருந்ததற்கும் இதுவே காரணம். குறிப்பாக மியாகி மாகாணத்தை முற்றிலும் சீரழித்துள்ளது இந்த பூகம்பம் என்றார்.

உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!


உலகம் இப்படியும் அழியலாம்: வீடியோ பாருங்கள்!
2012 ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என கடந்த ஒரு சில ஆண்டுகள் முதலே இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றிய செய்தி பல இணையத்தளங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். இதை மையமாக கொண்டு பல ஆங்கில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விஞ்ஞானிகளாலும் சித்தர்களாலும் கணிக்கப்பட்டு படமாக எடுக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்திலும் நடைபெற்றுள்ளமை ஒ
ரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு உலகம் அழியுமானால் இப்படியும் அழியாலாம் என்பதை சொல்லும் வீடியோவை நாம் இணைத்திருக்கிறோம். அதாவது எமது புவியில் மிகப் பிரமாண்டமான விண்கல் ஒன்று மோதுகிறது. இந்த மோதுகையின் வேகத்தால் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்பாக மாறி கண்டங்கள் நாடுகள் அப்படியே அழிந்து செல்லும் கோரக்காட்சிதான் இது. பார்த்தால் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும்.

காருக்குள் மல ஜல கூடம்: சீனாவில் புதுமை!(படங்கள் உள்ளே)


காருக்குள் மலசலகூடம்: சீனாவில் புதுமை!(படங்கள் உள்ளே)
மனிதன் காலத்தையும் நேரத்தையும் மீதப்படுத்து என்னவெல்லாம் பாடுபடுகின்றான். நவீன இந்த உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விடயமாகிப்போய்விட்டது. வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலைத்தேய நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சீனர்கள் புதிய ஒரு முயற்சியை  
கையாண்டுள்ளனர்.  இவர்களின் முயற்சிகள் சிந்திக்க வைத்தாலும் சிரிக்கவும் வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் மலசலகூடம். ம்ம்… எப்படி??? நீங்களே பாருங்கள் புகைப்படங்களே சாட்சி!!
WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.








WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.








WORLD AMAZING INFORMATION - FIND ONLINE WORLD AMAZING PHOTOS, AMAZING NEWS, WORLD AMAZING FICTIONS, AMAZING REALITY FACTS, AMAZING HUMORS, WORLD AMAZING FACTS, WORLD AMAZING PICTURES, AMAZING LETTERS, AMAZING RHYMES, WORLD AMAZING THINGS, STRANGE FACTS, AMAZING 3D ART & LATEST AMAZING THINGS ACROSS THE WORLD.