ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் “3”. தனுஷ் மற்றும் ஸ்ருதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களாக இரு பருவங்களில், நடிக்கின்றனர். படத்தில் வரும் “ஏன் இந்த கொலவெறி” பாடல் ஏற்கனவே ரசிகர்களை கொலவெறியாக்கிவிட்டது.
இந்நிலையில் படக்குழுவினர் இந்த பாடல் வெறும் ஆரம்பம் தான், படத்தில் இதே போல மேலும் சில கொலவெறி பாடல்கள் உள்ளன என்று கூறியுள்ளனர். எனவே “3” படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. “3” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மேலும் சிறப்பாக்க படத்தின் கதாநாயகியான ஸ்ருதி தனது தந்தை கமலஹாசனையும், படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தை ரஜினியையும் விழாவிற்கு வரவைப்பதற்கான ஏற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு கொண்டிருப்பதாக சினிமா வட்டாரம் கூறுகிறது.
ஒருவேளை அவர்களது முயற்சி வெற்றியடைந்தால் இந்த விழா 2011-ம் ஆண்டின் முக்கிய விழாக்களில் ஒன்றாக கறுதப்படும். பாடல் வெளியீட்டு விழா இம்மாதத்தின் இடையில், பெரிய அளவில் நடத்தப்படலாம் என்பது படக்குழுவினரின் பேச்சு.
|
No comments:
Post a Comment