Thursday, December 1, 2011

மனைவியின் தலையை வெட்டி வீதியில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன்


கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கொலை செய்த கணவர் மனைவியின் தலையை துண்டித்து தோளில் போட்டபடி பொலிஸ் நிலையத்துக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவின் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.

41 வயதான ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொம்மைகள் விற்பனை செய்பவர். இவரது மனைவி 38 வயதான சரோஜா இவர் நடந்து சென்று சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி விற்று வந்தார்.

இவர்களுக்கு மகாலட்சுமி, மல்லிகா, மகேஸ்வரி என்ற 3 மகள்களும் கோபால் (20) என்ற மகனும் உள்ளனர்.

சரோஜா ஈரோட்டுக்கு சென்று சரக்கு கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது கடைக்காரருக்கும் சரோஜாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது.இதை அறிந்த ராஜா மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலை கண்டித்த கணவரை விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று சரோஜா மிரட்டியுள்ளார்.

கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும் ஒரு முறை முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் சாப்பாட்டை சாப்பிடாததால் ராஜா அப்போது உயிர் தப்பினார்.

இந்நிலையில் நேற்று நண்பகல் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா வீட்டில் இருந்த கத்தியால், சரோஜாவின் கழுத்தை அறுத்தார்.

இரத்த வெள்ளத்தில் துடித்த சரோஜா வீட்டிலேயே உயிரிழந்தார். இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத ராஜா, சரோஜாவின் தலையை துண்டித்து எடுத்தார்.

தலையை தோளில் போட்டபடி அவர் பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்றுள்ளார். இதையடுத்து ராஜாவை போலிஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment