Thursday, December 1, 2011

மதுரையில் வரப்போகிறது இன்டெர் நேஷனல் ஏர்போர்ட்


மதுரையில் இருந்து, வெளிநாடுகளுக்கு, ஜனவரியில் விமான சேவை துவங்க வாய்ப்புள்ளது. இங்கு சராசரியாக தினமும், 700 வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், கொச்சி வந்து, மதுரை வருகின்றனர். இதனால், மதுரையில், சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்தது. தற்போது, சர்வதேச விமானங்களை இயக்கும் அளவில், புதிய "டெர்மினல்' அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. 
விரைவில் கஸ்டம்ஸ், "இமிகிரேஷன்' அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இங்கிருந்து, கோலாலம்பூர், சிங்கப்பூர், கொழும்பு, மஸ்கட்டிற்கு போக்குவரத்தை நடத்த, விமான நிறுவனங்கள், ஆர்வம் கொண்டுள்ளன. மதுரைக்கு போக்குவரத்தை துவங்கினால், ஏற்படும் நன்மைகள் குறித்தும், போதிய அளவு பயணிகள் எண்ணிக்கை இருக்கும் என்பது குறித்தும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை டிராவல் கிளப் போன்றவை விமான நிறுவனங்களிடம் விளக்கியுள்ளன. ஜனவரியில் சர்வீஸ் துவக்க, ஏர்-ஏசியா நிறுவனம் ஆர்வம் கொண்டுள்ளது. டைகர், ஜெட் போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன.

No comments:

Post a Comment