ஆரம்பகாலத்தில் காதலை மையமாகக் கொண்ட கதைக்களங்களில் நடித்து வந்தார் விஜய். ‘பூவே உனக்காக’ , ‘ காதலுக்கு மரியாதை’ போன்ற படங்களில் நடித்து வந்தவரை கமர்ஷியல் பாதையில் முழுமையாக திரும்பிய படம் ‘திருமலை’. அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
‘திருமலை’ படத்தினை தொடர்ந்து ‘கில்லி’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘வேலாயுதம்’ என நடித்த பல படங்கள் கமர்ஷியல் படங்கள். இடையில் ‘சச்சின்’, ‘காவலன்’ என சில படங்கள் மட்டுமே வேறு கதை களங்களில் நடித்தார்.
விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே விஜய்யின் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருப்பதாக, விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் முழுக்க காமெடியில் பட்டைய கிளப்பி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் கூட இதுவரை பார்க்காத விஜய்யை பார்க்கலாம் என்கிறது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தினை முடித்துவிட்டு கெளதம் மேனன் இயக்கும் ‘யோஹன்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் இன்டர்நேஷனல் ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறார்.
விஜய்யை வெவ்வேறு பரிமாணங்களில் அடுத்த அடுத்த படங்களில் பார்க்க இருப்பதால், வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதுகுறித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
|
No comments:
Post a Comment