Tuesday, November 15, 2011

ஐஸ்வர்யாவுக்கு,நாளை மறுநாள் பிரசவம்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யாவுக்கு, நவம்பர் 17-ல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன், அபிஷேக்கு பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.


சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யாவுக்கு இப்போது தான் குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஐஸ்வர்யா, மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில், அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் 5வது மாடியில், முக்கியமான நபர்களுக்காக 4 அறைகளை அமிதாப் குடும்பத்தினர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதுகுறித்து `செவன்ஹில்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாராய் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வருகிற 17-ந்தேதி மதியம் குழந்தை பிறக்கும் என்று நாங்கள் தேதி குறிப்பிட்டுள்ளோம் என்றனர்.

ஐஸ்வர்யா குழந்தை பிறப்பையொட்டி, செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment