Saturday, December 24, 2011

விக்ரமை அறைந்த நிருபர் VIKRAM

செய்திக்கு வருவதற்கு முன், எனக்கு சினிமா ஸ்கூப் நியூஸ்களைத் தொடர்ந்து பொன்னுச்சாமியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்
உளறி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். பழம் தின்று கொட்டை போட்டவர் மாதிரி
சினிமா தின்று ஃபிலிம் போட்டவர் நம்ம அண்ணன். சினிமா நியூஸைப் பொறுத்தவரை
'give and take' அதாவது போட்டு வாங்குறதுதான் அண்ணனோட பாலிசி. கொஞ்சம் பழைய
ஆளுங்கிறதால காது கொஞ்சம் மந்தம்.இவரு புராணத்தை அப்புறம் பாக்கலாம்.
நேத்து ரிலீஸான விக்ரம் பட ரிப்போர்ட் பத்தி பொன்னுசாமி சொன்ன பகீர் தகவல்கள்.
படத்தோட மொத்த பட்ஜெட் 38 கோடி ரூபாய்
விக்ரம் சம்பளம் 8 கோடி
சுசீந்திரனுக்கு 2.50 கோடி
யுவனுக்கு 1கோடி
ஹீரொயின் தீஷா 25 லட்சம்
மற்ற டெக்னிஷியன்கள் 2கோடி,,,,விக்ரமின் ஸ்பெஷல் வேண்டுகோளுக்காக ஒரு பாட்டுக்கு
குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாவுக்கு 25 லட்சம், ரிமாசென்னுக்கு 15 லட்சம். மத்தது கொஞ்சம் கூட
பொறுப்பில்லாம நடந்த 150 நாள் சூட்டிங் செலவு.
பொதுவா ஒரு படத்தோட தலை எழுத்து படம் ரிலீஸான ரெண்டாவது ஷோவுலயே தெரிஞ்சிடும்.
சனிக்கிழமை 3 மணி ஷோ நிலவரப்படி ‘ராஜபாட்டை’ வெறும் ரெண்டு வாரப்படம்தான்.
சில ஏரியாக்களை புரடியூசரே ரிலீஸ் பண்ணியிருக்கதா தகவல்.
மொத்தமே எட்டுக்கோடிதான் வசூலாகுமாம் இந்தப்படத்துக்கு. ஆக புரடியூசருக்கு முதல்
படத்துலயே முப்பது கோடி நாமமாம்.
இவ்வளவு பெரிய நாமத்தை பொட்லுரி .வி. பிரசாத் நெத்தி தாங்குமா?
என்ற கேள்வி ஒருபுறமிருக்க, யாரும் தப்பாக விமரிசனம் எழுதிவிடக்கூடாதே என்பதற்காக, அவசர அவசரமாக இன்று மதியம் மட்டன் பிரியாணி பிரஸ்மீட்டுக்கு எற்பாடு செய்திருந்தார் விக்ரம். முதல் நாள் படம்பார்த்து நொந்து வெந்து அந்து போயிருந்த நிருபர்கள், கேள்விகளால் அனல் கக்கிணார்கள்.
‘’தசாவதாரம்’ படத்து மேல என்ன கோபம் உங்களுக்கு, கமலைக் கிண்டல் பண்றமாதிரி இவ்வளவு கெட் அப்? என்று ஒருவர் ஆரம்பிக்க தொடர்ந்து
விக்ரமை நிருபர்கள் கொத்துக்கறி ப்போட ஆரம்பித்தார்கள். விக்ரமின் மேனேஜர் கிரி ஏடாகூடமாக கேள்வி கேட்பவர்கல்ளை திசை திருப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.சரி இன்னைக்கி சாருக்கு ‘அரிகிரி அசெம்பிளி’தான் ஒரு ஓரமாய் ஒளிந்துகொண்டார்..
‘’ இவ்வளவு மட்டமான படத்துல நடிக்க எப்பிடி ஒத்துக்கிட்டீங்க விக்ரம்? இப்படி ஒரு கேள்வியுடன் விக்ரமின் செவிட்டில் ஓங்கி அறைந்தார் இன்னொரு நிருபர்.
‘’கதை எனக்கு பிடிச்சிருந்தது அதான் நடிச்சேன்.சத்யம்’ தியேட்டருல நல்லா ரசிக்கிறாங்க. எங்கூட வாங்க ,காட்டுறேன்’ போன்ற விக்ரமின் பரிதாபமான பதில்களை நிருபர்கள் எகத்தாளச்சிரிப்புடன் தான் ரசித்தார்கள்..தன்னை வைத்து நிருபர்கள் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டதை விக்ரம் புரிந்து கொண்டாலும் தப்ப வழியில்லாமல் தவித்தார்.
உச்சக்கட்டமாக இன்னொரு நிருபர், ‘’விக்ரம் ஹாலிவுட் படங்கள்ல எப்ப நடிக்கப்போறீங்க? என்று கேட்டு சக நிருபரகளை விலா நோகச்சிரிக்க வைத்தார். இப்படி ஒரு சிக்கலான கேள்வியை எதிர்பாராத விக்ரமுக்கு திடீரென விக்கல் வந்துவிட்டது.. அருகிலிருந்த அக்காபினா பாட்டிலை எடுத்து அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்..ஆனால் கேல்விக்கு பதில் சொல்லாமல் தன்னை ரொம்ப கேவலமாக பேச ஆரம்பித்து விடுவார்களே என்று நினைத்து,’’ ஹாலிவுட்லருந்து எப்ப கூப்பிடுறாங்களோ அப்ப நடிக்கலாமுன்னு இருக்கேன் பாஸ்’’ என்றார்.
இந்த பதிலின்போது, நம்மை ஒரு கை லேசாக சுரண்டியது. திரும்பிப்பார்த்தால்...அட நம்ம புரடக்‌ஷன் பொன்னுச்சாமி.. தம்பி கொஞ்சம் காதைக்குடுங்க என்றார். வேற வழி? க்டுத்தேன்.
தம்பி படம் ரிலீஸான அன்னைக்கி விக்ரமோட பொண்டாட்டியும் புள்ளைங்களும் பாத்தாங்களாம்.அம்மாவைவிட புள்ளைங்க ரொம்பவேஅப்செட். அப்பாவோட 14 கெட் அப்புமே எங்க ஸ்கூல் டிராமாவை விட ரொம்ப கேவலமா இருக்கு.அதனால அவர ஒரு ஆறு மாசத்துக்கு வீட்டுல சேக்கவேண்டாம் என்று பிள்ளைகள் அம்மாவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்களாம். என்றார் பொன்னுச்சாமி.
இந்த நேரத்துல இந்த நியூஸ் எதுக்குண்ணே?
‘’தம்பி ஹாலிவுட்ல கூப்பிட்டா இவரு போவாராம். முதல்ல வீட்ல கூப்பிடுறாங்களான்னு பாருங்க’’ அப்பிடீன்னு ஒரு ஃபினிஷிங் போடுங்க’’ என்றார் பொன்னுச்சாமி.
போற போக்குல அண்ணன் நம்மள ஃபினிஷ் பண்ணிடுவார் போல இருக்கே?

எழுத்தாளர் சுஜாதாவின் சொர்க்கத்தீவு

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான். 

கதை


அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. உதாரணமாய் செக்ஸ், அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு குரல் "அவர்கள் சொல்வதை செய்யாதே" என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் பீச்சில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் "சத்யா அனைவருக்கும் மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு குடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை ரிப்பேர் செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரிய வர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி சொல்கிறார் 

"நான் கணினியில் ஒரு லேபிளை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்" என்று! 

வழக்கமான சுஜாதா கதை போல், அந்த விழிப்புணர்வு நிச்சயம் நடக்குமா, சத்யா அதை கண்டுபிடித்து சரி செய்துவிடுவாரா என்கிற யோசனையுடனும், கேள்விகளுடனும் கதையை முடிக்கிறோம் நாம். 
********
கதை எழுதப்பட்ட வருடம் 1971 ! இதை படிக்கும் மனிதர்களில் பலரும் அப்போது பிறந்திருக்க கூட மாட்டார்கள் ! அப்போதே கணினி பற்றி இவ்வளவு விரிவாகவும், கணினி ஆட்சி செய்ய போகிறது என்றும் எழுதி உள்ளார் சுஜாதா !

புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த ஓரிரு மணி நேரம் நம் அனைத்து கவலைகளையும் மறந்து விட்டு வாசித்து முடித்து விட்டு தான் கீழே வைக்கும் விதத்தில் எழுத பட்டுள்ளது. 

சுஜாதா எல்லா புத்தகத்திலும் முன்னுரை அல்லது விளக்கம் தருபவரில்லை. ஆனால் முன்னுரையில் , புத்தகம் வெளி வந்த போது பலரும் ஆங்கில நாவல்களில் இருந்து எடுக்க பட்டதாக சொன்னதாகவும், அது எப்படி உண்மை இல்லை என்றும் சொல்கிறார். மேலும் தான் எழுதிய முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது தான் என்கிறார். 

அய்யங்கார் என்கிற கணினி இஞ்சினியர் பாத்திரத்துக்கு நான் சுஜாதாவை தான் கற்பனை செய்து கொண்டேன். இப்படி நினைக்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. 

நாவலில் சில சுவாரஸ்யங்கள்:

அந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இரு எழுத்து பெயர்கள் தான். சத்யா என்கிற தலைவருக்கு மட்டுமே மூன்றெழுத்து பெயர். இவர்களை எதிர்க்கும் புரட்சி காரர்கள் முதலில் செய்வது தங்கள் பெயரை நான்கெழுத்தாக மாற்றி கொள்வது தான் ! எதிர்ப்பை காட்ட ஒரு குறியீடு !

பிறப்பு, இறப்பு இரண்டையுமே அங்கு கண்ட்ரோல் செய்கிறார்கள். இயல்பான செக்ஸ் கிடையாது. மனிதர்களின் உணர்வுகள் மழுங்கடிக்க படுவதால் அந்த ஆசை அவர்களுக்கு இல்லை. 54 வயதானால் மனிதர்களை கொன்று விடுகிறார்கள். (நமக்கும் தூக்கி வாரி போடும் இடம் இது !)

உள் வட்டம், வெளி வட்டம் என இரு பிரிவுகள் உண்டு. சத்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உள் வட்டம். இவர்கள் புகைக்கலாம். பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளலாம். (நம்ம ஊர் அரசியல் வாதிகள் வழக்கில் கைதாகும் வரை மற்ற எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பார்களே அந்த மாதிரி !!) மற்ற மக்கள் எல்லாரும் வெளி வட்டம். உள் வட்ட ஆண்கள் பிற பெண்களை தங்களுக்கு வேண்டிய படி உபயோகிக்கிறார்கள். இது குறித்து எந்த உணர்வும் இன்றி அந்த பெண்கள் சம்மதிக்கிறார்கள் !

பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !

இந்த கதையை சிலர் சினிமாவாக எடுக்க விரும்பினர் என்று சுஜாதா சொன்ன நியாபகம் ! நல்ல வேளை படமாக வில்லை !

வாய்ப்பு கிடைத்தால் இந்த வித்தியாச கதையை வாசித்து பாருங்கள் !!

திண்ணை நவம்பர் 28 தேதியிட்ட இதழில் வெளியானது.

குமுதம் - சொல்வதெல்லாம் வக்கிரம்... செய்வதெல்லாம் அக்கிரமம்...

புலனாய்வு துறை பத்திரிகைகளுக்கு - அடுத்தவர் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து - அவர்களின் படுக்கையறை சமாசாரங்களையும் எழுதவில்லை என்றால் தூக்கம் வராது போலும் அல்லது மண்டை வெடித்து விடும் - சிந்துபைரவி ஜனகராஜ் போல. அந்த வகையில், தற்போது குமுதம் ரிப்போர்ட்டர் அந்த ஈனத்தனமான (அவர்களுக்கு அது சமுக சேவை) வேலையை "சொல்வதெல்லாம் உண்மை (வக்ரம்)" என்கிற தலைப்பில் பிரபலங்களின் அந்தரங்களை விஷமத்தனமாய் வெளியிட துவங்கி உள்ளது...

ரஞ்சிதா, நித்யானந்தாவை நக்கீரன் பிடித்து கொண்டது போல. இது நாள் வரை, சினிமா கலைஞர்களின் பால் மாத்திரம் - தங்கள் வக்ர புத்தி சித்திரங்களை, அந்தரங்ககளை வெளியிட்டவர்கள் - இப்போது அரசியல்வாதிகள், பகுத்தறிவாளர்கள், மதபோதகர்கள் என்று அனைவர் மீதும் கை மற்றும் கண் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து - நம் இனமான தலைவரும் தப்பவில்லை. ஆனால் அவர்கள் மட்டும் உத்தம புத்திரர்கள்.

குறைந்து விட்ட சர்க்குலேஷனை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் போலும். இனி இதே அசிங்க அயோக்யத்தனத்தை - ஏனைய புலனாய்வு பத்திரிகைகளும் செய்யக்கூடும். செய்து தானே ஆக வேண்டும். ஒருவர் வாந்தி எடுப்பதை பார்த்தால் - எல்லோரும் வாந்தி வருமே. வாந்தி எடுப்பார்களே. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே...

"சொல்வதெல்லாம் உண்மை"யில் - உண்மை இருக்கிறதோ, இல்லையோ - அதை வெளியிடுபவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டுமே. அவர்களின் அலுவலகத்தில் நடந்த "சொல்வதெல்லாம் உண்மை"யை - பதிவர் சவுக்கு வெளியிட்டு இருக்கிறார். அவை போக -குமுதம் குறித்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதுவும் "சொல்வதெல்லாம் உண்மை" டைப் தான். அங்கங்கே படித்த, பார்த்த தகவல்கள்...

ஒரு முறை குமுதத்தில் நான்கு நடிகைகளின் பின்பக்கத்தை போட்டு (இடுப்பும், இடுப்பு சார்ந்த பகுதியும்) எது எது எந்தெந்த நடிகையின் இடுப்பு என்று வக்ர புத்தியுடன் கேட்டிருந்தார்கள். இவர்கள் தான் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு - பேனா முனையை வலிமையான ஆயுதமாக பாவிக்கிறவர்களா?

மதுரை நகரில் ராம்தாஸ்க்கு எதிராக கருப்பு கொடி காட்டிய ரஜினி ரசிகர்களை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய போது - குமுதம் ரிப்போர்ட்டர் நிருபரும் அடி வாங்கி காயமடைந்தார். ஆனால் தாக்குதலை நடத்தியது பெரிய கை என்பதால் - தமது பத்திரிகை நிருபர் அடிவாங்கியதை கூட பெரிது படுத்தவில்லை. என்னா பத்திரிகை தர்மம். இவர்கள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

தம் பத்திரிகையில் எழுதிய ஞானிக்கே எழுத்துரிமையை பறித்தவர்கள் என்பது மேலதிக தகவல். அந்த பத்திரிகையில் ஒரு இலக்கிய எழுத்தாளர் பணிபுரிந்தார். தமிழக இலக்கியமும், வாசிப்பாளர்களும் மதிக்கின்ற மிக பெரிய மாண்பு, ஆளுமை படைத்தவர். அவர் அங்கே பணிபுரிந்த காலத்தில் - ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். அங்கே அவரின் எழுத்தை நேசிக்கின்ற ஒருவர் "இந்த மாதிரியான குப்பை பத்திரிகையில் வேலை செய்யணுமா" என்று கேட்டார்.

நம் மரியாதைக்குரிய எழுத்தாளர் இப்படி பதில் சொன்னார். "அந்த பத்திரிகை குப்பை தான். ஆனா என் படைப்பு குப்பையா, குப்பை இல்லையான்னு மட்டும் பாருங்க" என்றார். என்ன ஒரு ஆணித்தரமான, நேர்மையான பதில். நேர்மைக்கு சொந்தக்காரராக இருப்பின் - அச்சப்பட வேண்டியதில்லையே. இப்படியொரு பதிலை பெற பத்திரிகை நிர்வாகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி பதில் தந்தது நிர்வாகத்திற்கும் தெரிந்தது. பிறகு மதிப்புக்குரிய அந்த எழுத்தாளர் - அங்கிருந்து விலகி விட்டார்.

இப்படிப்பட்ட எழுத்தாளர் பணிபுரிந்த பத்திரிகையில் தான் - சரித்திர கதை என்கிற போர்வையில் சாண்டில்யனை வைத்து ஆபாசங்களை அள்ளி இறைத்தார்கள். ஹேமா ஆனந்தீர்த்தன் என்பவரை வைத்து எழுதப்பட்ட ஆபாச கதைகளை - எண்பதுகளின் மத்தியில், துக்ளகில் துர்வாசர் எனும் எழுத்தாளரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டது. 


"சொல்வதெல்லாம் உண்மையை" எழுத எதற்கு ஒரு எழுத்தாளரை அமர்த்தி - சம்பளமும் தர வேண்டும். உங்களுக்குள்ளேயே இருக்கிறதே ஆயிரம் "சொல்வதெல்லாம் உண்மை" கள்.

கூகிள் தேடுபொறியில் பனி கொட்டும் அதிசயம்!

விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழியுங்கள் என்பதை குறிப்பிடுவதற்காகவும் காலநிலை மாற்றத்தை கருதியும் கூகிள் தனது தேடுபொறியில் பனி கொட்டுவதுபோல் அனிமேசன் செய்துள்ளது.


இதைக் கண்டு மகிழ கூகிள் தேடுபொறிக்குச் சென்று let it snow என்று டைப் செய்து என்டரைத் தட்டுங்கள். பனி கொட்டும் அதிசயத்தை காண்பீர்கள்.

இச் சிறுவனைத் தேடித் தருவீர்களா? பி.பி.சியின் உருக்கமான வேண்டுகோள்!

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வருவது வழமை. ஆனால் இச் சிறுவன் ஒரு வயலினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து தற்போது மாயமாகி விட்டான். இவனைத் தேடி பி.பி.சியின் நிருபர் ஒருவர் யாழ்ப்பாணம் வரை வந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா? அந்த வயலின் அவனிடம் இருக்கின்ற​தா? இசையில்லாம​ல் அவன் வாழமாட்டான். உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கு​ம், இந்த செய்தியை அனுப்புவீர்​களா? யேசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள்! இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல.

BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள். இராணுவத்திடம் சரண்டையச் சென்ற மக்கள் தம்மிடம் உள்ள பணத்தை நகைகளை மற்றும் பெறுமதியான பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றனர்! ஆனால் இச் சிறுவனைப் பாருங்கள் அவன் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் கூட இல்லை. ஆனால் அவன் கைகளில் இருப்பது ஒரு வயலின்! இசை இல்லாமல் இவன் இருக்கமாட்டான் போலும்.

இவன் தற்போது எங்கே? இருக்கிறானா இல்லை இறந்துவிட்டானா? இராணுவத்தின் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பானா? இல்லை இவனை சிலர் பிடித்து வெளிநாட்டில் வேலை பார்க்க ஒரு வேலைக்காரனாக அனுப்பிவிட்டார்களா? என்னவென்று நினைப்பது? இதோ இவனைத் தேடி BBC நிருபர் ஒரு யாழ்ப்பாணம் வரை சென்றுள்ளார்.

அதன் காணொளியை நாம் இணைத்துள்ளோம். இச் சிறுவனுக்காக வேற்றின மக்கள் காட்டும் அக்கறையை எமது சொந்த மக்கள் ஏன் காட்டவில்லை? இவவைத் தேடும் பயணத்தை BBC ஆரம்பித்துள்ளது. ஆனால் எமது உலகத் தமிழ் உறவுகளே இவனை நீங்கள் இன்னும் எளிதாகக் கண்டுபிடிப்பீர்கள் என நாம் எண்ணுகிறோம். இவனை உங்களுக்கு அடையாளம் தெரிந்தால் BBC இணையத்தோடு தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்!




CANCER - புற்றுநோய் : தெரிந்த பொய்களும் - தெரியாத உண்மைகளும்

நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம்.
கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1)ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரணடெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின்,டாக்டர் நோயாளியின்உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2)ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3)ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4)ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்துகுறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு,சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5)சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6)கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களைமட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி,இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.

7)கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள்,உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8)ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor)அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9)கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமானபிரச்சனைகளும்,நோய்களும் ஏற்படும்.

10)கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11)கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12)இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிகநேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13)கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி,உடலின் அழிக்கும் செல்லானது (body'ச own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14)IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins,minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells)மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15)கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே!நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,ஆசுவாசப்படுத்தி கொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1)கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தேவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etcபோன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manukaபோன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.Table Salt -ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம்,கேன்சர்செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமானஉணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன்,ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது.

4)ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ்,முழுதானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது,இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5)டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea)எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரைதவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

நன்றி: திரு. ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் 

தமிழாக்கம்: H. ரஃபீக் அஹ்மத் (துபாய்)

ராஜபாட்டையிலே ஏன்யா விக்ரம் இப்டி நடிச்சிருக்காரு?



உன்களுக்கு தெரியுமா?
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஆவலா இருக்கு..

சுஜாதா - A WRITER, A FRIEND, A MAGIC MAN

இவரின் எழுத்துக்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பது நினைவில்லை. அந்த மனிதரின் வீட்டு குழாயில் 24 மணி நேரம் இடை விடாத தண்ணீர் சப்ளையும், என்றுமே மின்சாரம் தடை படாத வாழ்கையும் ,நொடிக்கொரு முறை SMS அனுப்ப விரும்பாத குழந்தைகளும் கிட்டட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

எல்லோருடய சிறுவயதிலும் புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது சிறுவர் மலர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், கோகுலம் , அம்புலிமாமா, வாண்டு மாமா வகையறாக்கள் என்பதை மறுக்க முடியாது. அதன் உலகமே வேறு. அதற்கு பிறகு ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் தோன்றும் எண்ணங்களும் வாசிப்பு பற்றிய ரசனைகளும் தலைக்கு தலை மாறுபடும். தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் ஒரு சின்ன தடுமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அந்த மாதிரி காலகட்டங்களில் சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

சுஜாதா சார் அவர்களை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல எனினும், அவரை பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானதாக எனக்கு படுகிறது.

ஓவ்வொரு எழுத்தாளர்களுக்கும் இவர் நகைச்சுவை, இவர் க்ரைம், இவர் பேய் கதை, இவர் குடும்ப கதை என ஒரு தனி அடையாளம் இருக்கும். ஆனால் சுஜாதா சார் எல்லா துறைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாய் வெளுத்து வாங்கினார். கம்ப்யூட்டர் முதல் கர்நாடிக் வரை எல்லா மைதானங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்த அவர் எல்லோரயும் எளிதாக வசீகரிக்க காரணமே அவரின் இயல்பான நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்தான். படிக்கும் போதே ஒரு தோழமை உணர்வு நம்முள் ஸ்டுல் போட்டு அமர்ந்து விடும்.

வாசிக்கும் ஆர்வத்தை மட்டுமல்லாது எழுதும் ஆர்வத்தையும் அவர் தூண்டிய விதம் அலாதியானது. கார்டூனிஸ்ட் மதன் ஒரு எழுத்தாளர் மதன் ஆகியது சுஜாதா சார் அவர்களின் மூலம்தான் என்பதை அவரே பெருமையாக சொல்லிக்கொள்ளும் விஷயம். 
விகடன், குமுதம் மூலம் பல ஆயிரம் வாசகர்களை கவிதை கிறுக்க வைத்ததும், ஹைகூ புனைய வைத்ததும், ஒரு பக்க கதை சொல்ல வைத்ததும் அவரின் தனி பெரும் சாதனை.

புத்தகங்கள் மூலம் மட்டுமல்லாது சினிமா வழியாகவும் அவரின் எழுத்துக்கள் பல முறை நம்மை வசீகரிக்கவும், புன்னகைக்கவும் செய்திருக்கின்றன. கமல், ஷங்கர், A .R ரஹ்மான் என பல ஜாம்பவான்கள் இருந்தாலும் இந்தியன், முதல்வன் படங்களின் மாபெரும் வெற்றிக்கு அவரின் சமூக அக்கறை மிகுந்த வசனங்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சில சமயம் இந்த ஆள் ஒரு தீர்க்க தரிசியோ அல்லது மந்திரவாதியோ என வியந்ததுண்டு. ஆண் விபச்சாரம் பற்றி 15 - 20 வருடங்களுக்கு முன்பே இவரால் யோசிக்க முடிந்ததும், இப்போது உள்ள அரசியல் குடிமி பிடி சண்டைகளை அப்போதே "பதவிக்காக" நாவல் மூலமாய் புட்டு புட்டு வைத்ததும் நம்ப முடியா ஆச்சரியம். 

அவரின் கணேஷ் வசந்த் கதா பாத்திரங்கள் இன்னமும் நம்முள் மீள முடியாத ஒரு தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. எழுதும் ஆர்வமுடைய எல்லோருக்கும் ஒரு நல்ல குருவாக, நல்ல நண்பனாக, வழிகாட்டிய அவரின் எழுத்துக்களும், அவரின் நினைவுகளும் எல்லா தலைமுறைக்கும் உண்டான ஒரு பொக்கிஷம்.

அவரது மறைவு குறித்த செய்தி தீடிரென T .V யில் முக்கிய செய்தியாக வந்த போது ஒரு நிமிடம் ஏதும் செய்ய இயலாமல், ஒரு நல்ல ஆசிரியர்,வழிகாட்டி, ஒரு ஆத்ம சிநேகிதன் பிரிந்ததை நம்ப முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது என்றும் மறக்க முடியாதது. எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல கோடி பேர் அந்த நொடியில் அடைந்த அதிர்ச்சி, இழப்பு, கண்ணீர் என்றும் ஈடு செய்ய இயலாத ஒன்று. 

மரணம் பற்றி அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் இங்கு நினைவுக்கு வருகிறது. "ஒரு கிரிக்கெட் மேட்சில் பேட்ஸ்மென்கள் அவுட் என்கின்ற விதிமுறை இன்றி நுறு, இருநுறு, முண்ணுறு, என அடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடும் . விக்கெட் என்கின்ற ஒரு வஸ்து தான் ஆட்டத்தை சுவாரசியப்படுத்துகிறது.அது போல தான் வாழ்கையும்" - எவ்வளவு உண்மையான வார்த்தைகள்......!

அவரின் எழுத்துக்கள் இன்னமும் புதிது புதிதாய் பிறந்து கொண்டேதான் இருக்கிறது, சக எழுத்தாளர்கள் மற்றும் எண்ணற்ற பதிவர்கள் மூலமாக..... யார் மறுக்க முடியும் இதை... 

இப்போதும் என் தலையணை பக்கத்தில் இருக்கும் ஈ ரீடரில் அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இருக்கிறது. ஒவொரு முறை திரும்ப வாசிக்கும் போதும் அது ஏற்படுத்தும் அதிர்வலைகள் புதிதானவை.

விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? - நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்! VIKRAM - RAJAPATTAI

ராஜபாட்டை- திரைவிமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும் 

ராஜபாட்டை- மொக்கை அல்ல, படு மொக்கை - திரைவிமர்சனம்

குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள்.

தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள், சாமி ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, ஜேகே ரித்தீஷ் படம் அளவுக்குக் கூட இல்லையே என்ற விமர்சனம் ராஜபாட்டை மீது விழுந்துவிட்டது (இந்தப் படத்தில் லத்தீஸ்வரன் என்று ஒரு ஹீரோவை வேறு விக்ரம் விமர்சனம் பண்ணுகிறார். அது ஜேகே ரித்தீஷா, லத்திகா ஹீரோ பவர் ஸ்டாரா என்ற காமெடி விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது!)

இந்த நிலையில், ராஜபாட்டைக்காக நிருபர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். இன்று ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் நேரடியாகவே விக்ரமிடம் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுசீந்திரன் - விக்ரம் என்றதும், பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. அதைப் பொய்யாக்கிவிட்டதே இந்தப் படம். ஏன் இப்படியொரு படம் தந்தீர்கள் விக்ரம்? என்று கேள்வி எழுப்ப, சற்று சுதாரித்து பதில் தந்தார் விக்ரம்.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு ஜாலியா, அதிரடியா, கலர்புல்லா ஒரு படம் தரணும் என்று விரும்பித்தான் இந்தப் படம் செய்தோம். இந்தக் கதை எனக்கு மிகவும பிடித்துப் போனதால் ஒப்புக் கொண்டோம். ஒரே மாதிரி சீரியஸ் படம் கொடுத்தா ரசிகர்களுக்கு அலுத்துப் போகும் என்பதால் எடுத்த முடிவு அது. நீங்கள் தியேட்டரில் ரசிகர்களோடு படம் பாருங்கள் (நேற்று நிருபர்களுடன் படம் பார்த்தார் விக்ரம்!!). ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது," என்றார்!

சரி... படத்தில் வரும் நில அபகரிப்பு அக்கா கேரக்டர் நிஜத்தில் யாருங்க?




ராஜபாட்டை- மொக்கை அல்ல, படு மொக்கை - திரைவிமர்சனம்

நம்பிக்கையான இயக்குனர் என நம்ம்ம்ம்பி முதல் நாளே படம் பார்க்க போனால் காலை வாரி விட்டு முகத்திலேயே மிதிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. ராஜபாட்டையும் அந்த பாதையில்... 

அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல.. என வித விதமான கதை களனில் கவர்ந்த சுசிந்தரன் முதல் முறையாய் வாங்கியிருக்கும் அடி... படம் பார்க்கும் நமக்கும் பார்த்து முடித்து வெளியே வரும் வரை வலிக்கிறது...

தமிழகத்தில் மோசமான வியாதியாக பரவியிருக்கும் நில அபகரிப்பு பிரச்சனைதான் கதையின் அடிநாதம். நல்ல கருதான். ஆனால் அதை சொல்லி சென்ற விதத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டாமா? ஒரு மாஸ் ஹீரோவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக தினசரிகளை மேலோட்டமாக மேய்ந்து விட்டு குத்து மதிப்பாக படம் எடுத்தால் உருப்படாது என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். 

விக்ரமை இந்த அளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டியதில்லை. அவரது ஹேர் டிசைனருக்கு எதாவது சம்பள பாக்கியா என்ன என்பது தெரியவில்லை. ப்ளீச் செய்கிறேன் பேர்வழி என்று முடிந்தவரை அவரது இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார். முகத்தில் நன்கு தெரியும் சுருக்கங்களும், அவருக்கான உடை தேர்வும்.... சீயான் இந்த படத்தில் நடித்ததை நினைத்து காலம் பூராவும் கண் கலங்க போகிறார்.

முதற்பாதி மொக்கை என்றால் இரண்டாம் பாதி படு மொக்கை. அழுத்தமில்லாத திரைக்கதையால்... நடந்தால் பாட்டு.. நின்றால் சண்டை என்று டெரர் கும்மி அடித்து பீதியே கிளப்புகிறார்கள்.

தமிழ் நாட்டையே தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதி வில்லி.. ஒற்றை ஹீரோவை அழிக்க லோடு லோடாக ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவரும் வந்தவர்களை எல்லாம் மிதி மிதி என மிதித்துக்கொண்டே இருக்கிறார். படம் பார்க்கும் நாம் டயர்டாகி போதும்டா சாமி என சொல்லும் வரைக்கும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். விடுங்க... நாம் பார்ப்பது தமிழ் சினிமா. உலக சினிமா இல்லை. 

ஹீரோயின்... ஆன்ட்டியா.... இல்லை நல்ல பிகர்தானா என முடிவு செய்வதற்குள் படத்தில் அவரது போர்ஷன் முடிந்து விடுகிறது. இந்த படத்தின் லவ் சீன்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் தேவை இல்லாமல் உங்களை கெட்ட வார்த்தை பேச வைத்த பாவம் எனக்கு வந்து சேரும்.

நல்ல நடிகர்கள்... நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல வசனகர்த்தா, நல்ல இசையமைப்பாளர் என எல்லோரும் பாரபட்சமின்றி வீணடிக்கபட்டிருக்கிறார்கள். லட்டு போன்ற ஒரு குத்து பாடலை.... தலை முடியே பீய்த்துக்கொண்டு அவசரகதியில் ஓடி வர வைக்கும் கேவலமான கிளைமாக்ஸ்க்கு அப்புறம் சொருகிவிட்டிருப்பது இயக்குனருக்கு கற்பனை பஞ்சம் தலை விரித்தாடுவதை சொல்லாமல் சொல்கிறது. லட்டு போன்ற ரெண்டு பிகர்கள்.. அருமையான மெட்டு... வெளிநாட்டு லொக்கேஷன்... என நிலத்தை விற்று.. நகையே விற்று... அதில் செலவு செய்து எடுத்த பாடலை ஆளில்லாத தியேட்டரில் காண நேரும் தயாரிப்பளருக்கு நிச்சயம் ரத்த கண்ணீர் வரும். 

படத்தில் எந்த நல்ல விஷயமுமே இல்லையா என கேட்பவர்களுக்கு... எங்கள் வாத்தியார் சுஜாதா சொல்வார், "ஒரு பியர் அடிப்பதற்கு ஒரு டாஸ்மாக்கையே வாங்க வேண்டுமா" என. அது போலத்தான், அவ்வபோது லேசாக கவரும் விஷயங்களுக்காக மொத்த படத்தையும் பார்ப்பது உங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கான சவால்.

படம் பூராவும்.. விக்ரம் தான் மலை மாடு போல புஜபலத்துடன் இருக்கிறார். கதையோ TB அட்டாக் ஆனா பேஷன்ட் போல எலும்பும் தோலுமாய் பரிதாபமாய் காட்சியளிக்கிறது.


(+) பிளஸ்

இந்த மொக்கை படத்திலும் முழு அர்பணிப்பு காட்டிய விக்ரம். 

(-) மைனஸ்

திரைக்கதை
லாஜிக் ஓட்டைகள்
இயக்கம்
சீட்டை பிராண்ட வைக்கும் இரண்டாம் பாதி. 

VERDICT : கசப்பான மசாலா. 
RATING : 3.4 / 10.0

EXTRA பிட்டுகள் 


இந்த நட்ட நடு ராத்திரியில் (மூன்று மணி) இதை எழுதுவதில் ஒரு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. உங்கள் பாக்கட்டில் இருக்கும் நூறு ரூபாய்
அநியாயமாக தொலைந்து போய்விட கூடாது என்கின்ற ஒரு பரிதவிப்பு இருக்கிறது. இது போன்ற மொக்கை மசாலா படங்களை பார்ப்பதற்கு செலவிடும் நேரங்களில் நீங்கள் உபயோகமாய் உங்கள் மனைவிக்கு சமையலில் உதவலாம்.. விகடனில் ராஜு முருகன் எழுதும் "வட்டியும் முதலும்" வாசிக்கலாம். நல்ல இசையே கேட்கலாம். வேறு வேலை எதுவும் இல்லையா.. நிம்மதியாய் தூங்கலாம்.

தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்

பதிவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா)

சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர் நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கிறேன். அப்புறம் சிலம்பாட்டம், களரி, போன்ற மண்சார்ந்த கலைகளும் தெரியும் .சர்க்கரை நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள், இருதய நோயளிகளுக்கான உடற்பயிற்சி முறைகள் என்று பல வகை இருந்தாலும் நான் இந்த பதிவில் சொல்லி கொடுக்க போவது தொந்தியை குறைக்க செய்யவேண்டிய உடற்பயிற்சி முறைகள் மட்டும். இந்த கிரவுண்ட் எக்ஸர்சைஸ் முறையில் ஒவ்வொரு உறுப்புகளையும் தனிதனியாக இயக்கலாம் வயிறை குறைக்க மட்டும் 35 வகையான பயிற்சி முறைகள் இருக்கின்றன அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்


இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்

விரிப்பின் மீது நேராக உட்கார்ந்து கால்களை நெடுக நீட்டிக் கொள்ள வேண்டும். பின்பு முன்னுக்கு குனிந்து மூச்சை விட்டுக் கொண்டே, கைகளால் கால்களின் பக்கவாட்டில் தேய்த்துக் கொண்டே சென்று கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரலால்,கொக்கி போல் மடக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். கால் கட்டை விரல்களை கெட்டியாகப் பிடித்ததும், வயிறு எக்கிக் கொள்ளும். இப்படி கால் கட்டை விரல்களைத் தொட முயற்சிக்கும் போது முழங்கால் உயரக்கிளம்பும் அப்படி கால்கள் மேலெழும்புவதைத் தடுத்து உடலைக் கால்கள் மேல் வளைத்துக் கொஞ் சம் கொஞ்சமாக கால் கட்டை விரலை பிடித்து விட வேண்டும்.(பருமனாக இருப்பவர்கள் கால் கட்டை விரலைக்கூட தொடமுடியாது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானது)கால் கட்டை விரல்களை பிடித்த பிறகு, தலையை கொஞ்சம் கொஞ்சமாக குனிந்து நெற்றி முழங்கால்களை சேரும்படி நெருக்க வேண்டும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்


இந்த பயிற்சி செய்யும் போது வயிறு நன்றாக மடிக்கப்படுவதால் வயிற்றிலுள்ள கொழுப்புகள் எரிந்து தொந்தி குறையும். காற்றுக் குழாய், விதானம், சிறுநீர்க்குழாய், இருதயத்திற்குப் போகும் கீழ் இரத்தக் குழாய், இதயத்திலிருந்து வரும் பெரிய இரத்த நாளம், ஆகாரக் குழாய், சிறுநீர்ப்பை, மண்ணீரல் பெருங்குடல் இவை அனைத்துமே விரிவடைந்து நன்கு செயல்படும் .இப்படி செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூறவும் வேண்டுமா?
மேலும் சிறுநீர்த் தடையையும் இப்பயிற்சி நீக்குகிறது. நாடி இயக்கங்களின் குறைகளைப் போக்குகிறது. முதுகெலும்பிற்கு பலத்தைக் கூட்டுகிறது. இடுப்பு பலம் பெறுகிறது. இடுப்புவலி வாயுத்தொல்லை போன்ற உபாதைகள் நீங்கும்
இப்பயிற்சியை இடைவிடாமல் செய்து வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வராது எப்படி? இந்த பயிற்சியினால் கல்லீரலுக்கு நல்ல இரத்த ஒட்டம் கிடைக்கிறது. கல்லீரலில் இன்சுலின் என்ற திரவம் சுரக்கிறது. இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற பொருளே ஆகும். இது போதுமான அளவு கல்லீரலில் உற்பத்தி ஆகாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து அது நமது உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும். இப்பயிற்சியை செய்யும்போது கல்லீரலில் நன்கு புத்துணர்வுடன் செயல்படுவதால் அங்கு இன்சுலின் தாராளமாக உற்பத்தியாகிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இதனால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரவே வராது.

சில முன்னெச்சரிக்கைகள்
ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.

கர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் எளிதில் இப்பயிற்சி கைகூடாது . அதற்காகப் பயிற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.

மொத்தம் வயிற்றுக்கான 35 பயிற்சிகளில் இரண்டை இந்த பதிவில் சொல்லுவதாக இருந்தேன் ஆனால் பதிவு மிகவும் நீளமாகி விட்டதால் இன்னும் மூன்று நாட்களுக்குள் அந்த அடுத்த பயிற்சியை இரண்டாவது பதிவாக இடுகிறேன்.


இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது இமெயில் பன்னுங்கள்.

நூறு பேர்(The 100) புத்தக அறிமுகம்

"100 பேர்" நூல் முதலில் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன
(இதன் தமிழ் முதல் பதிப்பு1998).இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு.


The100 தமிழக்கம

நூலாசிரியர்ஹெச்.ஹார்ட்
பதிப்பாசிரியர்
மணவை முஸ்தபா
இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்ப்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.சரியான செய்தியைக் கொண்டு சேர்த்தார்.இந்நூல் ஆசிரியர் கிறிஸ்துவர் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.

இங்கு கணொளியாக ஆங்கில புத்தகத்தின் விளக்கம்
இனி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணமேன்ன என்பதை நூலாசிரியர் தனது முதல் அத்தியாயத்தில் சொல்வதை பார்ப்போம்.
1 முஹம்மது நபி (570-632)

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்;மற்றும் சிலர் “ஏன் அப்படி” என்று வினாவும் தொடுக்கலாம்: ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும்,எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பேற செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று:
கிரிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவர்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரனமாக இருந்தாலும், அதன் இறையமையிலை (THEOLOGY) உருவாக்கியதில் முதனமையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்,புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான துய பவுல்தான்.(St.PAUL)

ஆனால் இஸ்லாத்தின் இறையமையியல் (THEOLOGY) அதன் அரநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அசமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொருப்பினை மேற்க்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தான்.

முஹம்மது நபி வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன: அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும்,போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவவத்தின் மீது ஏசுநாதரும்,தூய பவுலும் ஒருங்கினைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:

மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல்,முஹம்மது நபி சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவாரக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

இந்நூல் உலகளவிய இஸ்லாமிய அழைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது



அஹ்மத் தீதாத் அவர்கள் The 100 புத்தகத்திலிருந்து
மேற்கோள் காட்டுகிறார்கள்

இப்படியே இந்த புத்தகத்தைப் பற்றி எழுதினால் பெரிய பதிவாகி விடும் அதனால் ஒரு சில குறிப்புகள் மட்டும்.

கிழேயுள்ள லிங்க்யில் the 100 ஆங்கில புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The 100 -Michael Hart.pdf - Google Docs

மொபைல் பண பரிமாற்றத்திற்கான உச்சவரம்பை நீக்க ஆர்பிஐ முடிவு

வாடிக்கையாளர் சேவை கருதி மொபைல் பண பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை நீக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு மொபைல் பாங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மொபைல் பாங்கிங் வசதியில் பணப் பரிமாற்றம் செய்ய கடந்த 2009ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதற்கான உச்சவரம்பு ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், அதுபற்றி ரிசர்வ் வங்கி சமீபத்தில் மறுஆய்வு நடத்தியது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கிகள் இடையே மொபைல் பேமென்ட் சர்வீசை தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அளிக்கிறது. வங்கி கணக்குகள் இடையே செல்போன் மூலம் உடனுக்குடன் பணப் பரிமாற்றம் செய்வதை இது உறுதி செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த வசதியை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கையும் தொகையும் அதிகரித்து வந்துள்ளது.
இந்த வசதிக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை கருதி மொபைல் பண பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரும்பும் தொகையை வாடிக்கையாளர்கள் இனி மொபைல் போனில் இருந்து பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை- வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு

Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை கேமராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும். மற்றும் வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமேராக்கள் தான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கேமரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.

ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கேமராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய கேமராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த கேமராவை MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டு பிடித்துள்ளார்.

இந்த புதிய கேமரா எப்படி செயல்படுகிறது என்பதை வீடியோவாக விளக்கி உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.


சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.


இந்த வீடியோ கேமாரவை எப்படி கண்டுபிடித்தனர் போன்ற மேலான தகவல்கள் அறிய இந்தலிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

அனுமதியின்றி 3ஜி ரோமிங்: ஏர்டெல், ஐடியா, வோடாபோனுக்கு நோட்டீஸ்!

3ஜி ரோமிங் சேவையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்க 3ஜி ரோமிங் உரிமம் ஒதுக்கப்படாத இடங்களிலும், அச்சேவையை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை வழங்கி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சேவையை நிறுத்துமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்காக அபராத தொகை செலுத்தவும் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த நோட்டீஸ் பார்தி மிட்டலின் பாரதி ஏர்டெல், விட்டோரியா கோலாவ்வின் வோடாபோன், குமாரமங்கலம் பிர்லாவின் ஐடியா, அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன், மற்றும் டாடா போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 67,719 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி ஒப்பந்த சேவையை நிறுத்தி விட்டதாகவும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. தொலை தொடர்புத்துறையின் உத்தரவினால் 3ஜி சேவையைப் பயன்படுத்தும் ஒருகோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், ஆபரேட்டர்களும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

பெண்களை போல ஆண்களுக்கு ஏன் மார்பகம் பெரிதாகிறது ?

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும்.

ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும். டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.

அதனால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு மார்பகம் பெரிதாகவே இருந்தாலோ, அல்லது இருபது வடக்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு காரணங்கள் உண்டு.

அவை:

1. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நிரந்தரமாகி விடுவது.

2. உடல் பருமன். நீங்கள் குண்டாக இருந்தால், கொழுப்பு சத்து மார்புக்கு அருகே தங்கி விடுகிறது. உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இல்லா விட்டாலும், கொழுப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.

3. குடிப்பழக்கம்.

4. போதை மருந்து-

கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட்கொள்வது. 5. வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.

– ரத்தக் கொதிப்பு, மன நோய், அஜீரணம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந்துகள்.

– தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள்.

– மூலிகை மருந்துகள் பலவற்றில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மறைந்துள்ளது.

– உடல் தசை வளர்வதற்காக (பாடி பில்டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.

6. ஈரல் நோய் (Cirrhosis)

7. சிறுநீரகக் கோளாறு.

8. தைராய்ட் சுரப்பிக் கோளாறு (இது தொண்டைக்கு முன்னால் இருக்கும் சுரப்பி)

9. விறைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.

10. வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறைந்து போதல். ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. அதுவும் மார்பக வளர்ச்சி போலவே இருக்கும். ஆண்கள் மார்பகத்தால் வரும் பிரச்சனைகள்:

1. முலையில் வலி, அல்லது திரவம் வெளியாதல்.

2. மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன்றவற்றால் மன உளைச்சல்.

3. இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்படுதல்.

மருத்துவரை அணுகுங்கள்:

* எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப்படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள்ளுங்கள். *

இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர்கள் ஒரு 2-3 வருடங்கள் பொறுத்து, திரும்ப வரச் சொல்வார்கள். இது அதற்கு மேலும் தொடர்ந்து இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளியானாலோ உடனே மருத்துவரிடம் திரும்பச் செல்லுங்கள்.

* நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.

* நீங்கள் நடுத்தர வதில் இருந்தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக் காரணமாக இருக்கலாம்.

* குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக் கை விடவும்.

சிகிச்சை முறைகள்:

1. டீன் ஏஜ் பருவத்தில் நடந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போதுமானது.

2. ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை தடுக்க நிறைய மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக Tamoxifen, Raloxifen போன்றவை.

3. அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை அகற்றுவது.

4. மன ரீதியான ஆறுதலையும், அரவணைப்பையும் குடும்பத்தினரும், நண்பர்களும் கொடுக்க வேண்டும்.

ஷங்கர் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடிக்கவிருக்கும் புதிய படம்

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன்.
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை கேட்டு வருகிறார்

கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.

எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம்.

எப்படியெனில் ஒரு தயாரிப்பாளாராக ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பெற்றோரும் பெட்ரோலும்






தூக்கம் பற்றிய ஒரு சுவாரசிய ஆய்வு!!

ஆழ்ந்த தூக்கம் தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம். படுத்ததும் தூங்கிப் போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம். சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள்.

இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும் போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும். சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள்.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரியவந்தது. ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள்.

மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரியவந்தது. அதாவது சீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம்.

சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிப் போகிறார்களாம். இவை தவிர கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தமும் இங்கிலாந்து நாட்டவர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விடயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

பெண்ணே பெண்ணே கொல்லாதே ! girls






வருமான வரி சோதனையில் சிக்கிய 18,750 கோடி

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை மூலம் கணக்கில் காட்டப்படாத ரூ.18 ஆயிரத்து 750 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வாரியம் மேலும் கூறியதாவது: வரி ஏய்ப்பு பற்றி வரும் நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையிலேயே வருமான வரி சோதனைகள்மேற்கொள்ளப்படுகின்றன. 

அந்த தகவல் உறுதிப்படுத்தபட்ட பிறகே சோதனை நடத்தப்படும். வருமான வரி அதிகாரிகள் கண்மூடித்தனமாகவும் அடிக்கடியும் நடத்தும் சோதனைகளால் பாதிக்கப்படுவதாக அரசிடம் தொழிலதிபர்கள் புகார் கூறியுள்ளதாக வெளியான செய்தி உண்மையல்ல. 

நாட்டின் எந்த இடத்திலும் தொழிலதிபர்களோ, தொழில் நிறுவனங்களோ வருமான வரி அதிகாரிகளால் தொல்லைகளுக்கு ஆளாகவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரூ.18 ஆயிரத்து 750 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.


நிர்வாண காட்சியில் பிரபல நடிகை!! கிரைம் படத்துக்காக ரகசிய ஷூட்டிங்!

கிரைம் படத்துக்காக நடிகை பூஜா காந்தி நடித்த நிர்வாண காட்சி படமானது. நிர்வாண காட்சியில் பூஜா பயமில்லாமல் நடித்தார் என்று இயக்குனர் கூறினார். தமிழில் கொக்கி, திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் தண்டுபால்யா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமானது.

இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: காதல் படங்களை இயக்கி வந்த நான் வித்தியாசமான கிரைம் கதை இயக்க முடிவு செய்தேன். இதற்காக தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதையை தேர்வு செய்தேன். 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இதை படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன்.

நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன். யோசித்து சொல்ல அவகாசம் தரும்படி கேட்டார். 3 வாரங்களுக்கு பிறகு சம்மதித்தார். அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இக்காட்சி படமாக்கப்பட்டபோது பட யூனிட் ஆட்கள் தவிர வேறு யாரும் ஷூட்டிங் அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை. பயமின்றி இக்காட்சியில் பூஜா நடித்தார். இவ்வாறு ஸ்ரீனிவாச ராஜு கூறினார்.

ஜெயா டி.வி.-யிலிருந்து காரில் கடத்தப்பட்ட ‘அந்த’ அதிகாரி கக்கியது என்ன? jaya tv

வெளியே பரபரப்பு காட்டாமல், ஜெயா டி.வி. நிர்வாக அலுவலகத்தில் இருந்து மூன்று அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. காவல்துறை அடையாளம் ஏதுமற்ற இரு வாகனங்களில் இந்த அட்டைப் பெட்டிகள் சென்றிருக்கின்றன.

இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட யாருமே -வாகனங்களின் டிரைவர்கள் உட்பட- யூனிபார்மில் இருக்கவில்லை.

கடந்த இரு தினங்களாக இந்த டாக்குமென்ட்கள் ஜெயா டி.வி. அலுவலகத்தில் இருந்து வெளியேறி விடாதவாறு மேலதிக செக்யூரிட்டி போடப்பட்டிருந்தது. நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள் யாருக்கும் கடந்த இரு தினங்களாக இந்த ஆவணங்கள் இருந்த அறைக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.

போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின் சற்றுத் தாமதமாக, சிறிது சிறிதாகத்தான், அவர் தொடர்பான இடங்களில் பல உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தன. ஆனால் எவ்வித தாமதமும் இல்லாமல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட இடம், ஜெயா டி.வி. அலுவலகம்தான்.


எமக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களின்படி, சசிகலா வெளியேற்றப்பட்டதற்கு சில தினங்கள் முன்பிருந்தே ஜெயா டி.வி.-யில் கண்காணிப்பு தொடங்கிவிட்டது. மீடியாவுடன் தொடர்புடைய இடம் என்பதால், அங்கிருந்து வில்லங்கமான செய்திகள் ஏதாவது ஒளிபரப்பாகலாம் என்ற முன்ஜாக்கிரதையே அதற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அன்டு கோ வெளியேற்றப்பட்ட செய்தி ஜெயா டி.வி.-யில் பிளாஷ் செய்யப்பட்ட விஷயம்கூட, டி.வி.-யின் நிர்வாக இயக்குனர் அனுராதாவுக்கு (தினகரனின் மனைவி) தெரியாமலேயே நடந்தது.


அனுராதாவின் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கொஞ்சம் அப்படியிப்படியாக இருந்ததால், அவருக்கு ஆல்-இன்.-ஆலாக ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவரும் ஏதோ ஒரு வகையில் சசிகலா உறவினர்தான். (இவரை கமிஷன் மன்னர் என்று கேலியாக கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்)


இந்த ஆளுக்கும், சசிகலா வெளியேற்றப்பட்ட செய்தி தமது டி.வி.-யில் ஒளிபரப்பாகப் போகும் விஷயம் முன்கூட்டியே தெரியாது.


ஜெயா டி.வி.-யின் இரண்டாம் நிலை அதிகாரிகளில் ஒருவர் கார்டனுக்கு அழைக்கப்பட்டு, சசிகலா வெளியேற்றம் தொடர்பான செய்தியை நேரடியாக முதல்வர் ஜெயலலிதாவே கொடுத்திருந்தார். செய்தி ஒளிபரப்பாகும்வரை யாருக்கும் தெரியக்கூடாது என்ற உத்தரவும் போடப்பட்டிருந்தது.


செய்தி ஒளிபரப்பாகும் முன்னரே பில்டிங்குக்குள் அறிமுகமற்ற சிலரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள் உளவுத்துறையின் ஆட்களா, அல்லது தனியார் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களா என்பது தொடர்பாக சரியான விபரம் கிடைக்கவில்லை. ஆட்கள் யாராக இருந்தாலும், அந்த பில்டிங்கே ஒரு முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.


பில்டிங்கில் இருந்து வெளியேறியவர்களில் சிலரது பிரீஃப் கேஸ்கள் காரணம் சொல்லப்படாமல் திறந்து பார்க்கப்பட்டன. சில பெண்களின் ஹேண்ட்-பேக்குகள்கூட சோதனைக்கு தப்பவில்லை. செக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களிடம், அது தொடர்பாக வெளியே யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.


அதன்பின், சசிகலா வெளியேற்றம் என்ற செய்தி பிளாஷ் ஆகியது. அடுத்த நிமிடமே பில்டிங்குக்குள் வெவ்வேறு இடங்களில் நடமாடிய நபர்கள், நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கொண்டார்கள். ஆனால், வேறு ஒரு ரிக்கார்டு ரூமில் நடைபெற்ற ஒரு விஷயம் இவர்களுக்கு உடனே தெரியவரவிலலை. இங்கே, டி.வி.-யின் முக்கிய அதிகாரி ஒருவர் அவசர கதியில் சில காகிதங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


நிர்வாக அலுவலகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்த நபர்கள் சுமார் அரை மணி நேரத்தின் பின்னர், ரூட்டீன் செக்கிங்குக்காக அந்த ரூமுக்குள் சென்றபோது அந்த அதிகாரி அங்கேயே இருந்திருக்கிறார். அவரது கையில் வேறு சில டாக்குமென்ட்கள் இருந்திருக்கின்றன.


இவரது நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவான காட்சியை ரீவைன்டு செய்து பார்த்திருக்கிறார்கள். அதில் அந்த நபர் காகிதங்களை அழித்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அங்கு புதிதாக வந்தவர்களில் ஒருவர் வராந்தாவில் நின்றபடி யாருடனோ செல்போனில் சில நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்பினார்.


வந்தவர்களில் இருவர், டி.வி. அதிகாரியை நெட்டித் தள்ளாத குறையாக வெளியே கொண்டு சென்றனர். இவர்கள் பில்டிங்குக்கு வெளியே வந்தபோது, மார்க்கிங் ஏதும் இல்லாத கார் ஒன்று காத்திருந்தது. இருவரும் அந்த காரில் அதிகாரியை ஏற்றிக்கொண்டு எங்கோ சென்றனர். அந்த அதிகாரி அதன்பிறகு டி.வி. அலுவலகத்துக்கு திரும்பவில்லை. குறிப்பிட்ட அதிகாரி கைது செய்யப்பட்டதாகவும் தகவல் ஏதுமில்லை.


குறிப்பிட்ட அதிகாரி அவரது வீட்டில்தான் உள்ளார் எனவும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபின் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்றும், டி.வி. ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.


அவரால் அழிக்கப்பட்ட டாக்குமென்ட்டுகளுக்கு வேறு பிரதிகள் உள்ளனவா என்பதும், என்ன விஷயம் தொடர்பான டாக்குமென்டுகள் அவை என்ற விபரமும் தெரியவில்லை. டி.வி. அலுவலகத்தில் பணிபுரிந்த வேறு சிலரும் விசாரிக்கப்பட்டனர். அன்று அலுவலகத்தில் இல்லாத சிலரும், அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அலுவலக பேக்ஸ் மெஷினில் இருந்து பேக்ஸ் அனுப்பப்பட்ட அவுட்-கோயிங் சம்மரி பட்டியல் ஒன்றும் எடுக்கப்பட்டு செக் செய்யப்பட்டது.


இவ்வளவும் நடந்த பின்னரும், அங்கிருந்த பைல்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல், எதற்காக நேற்று மாலை வரை காத்திருந்தார்கள் என்பதுதான் குழப்பமாக உள்ளது. அவற்றைக் கொண்டு வருமாறு கார்டனில் இருந்து உத்தரவு வரவில்லையோ, என்னவோ!


Friday, December 23, 2011

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத்தளங்களுக்கு நோட்டீசு

இணையத் தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் அதிக அளவில் இணையத் தளங்களை பார்க்கிறார்கள்.

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் கூறியதாவது:- 

பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் ஆட்சேபத்துக்குரிய பல பதிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி விளக்கம் அளிக்க 21 இணையத்தள நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்.

மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மேலும் 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும்.

இவ்வாறு டெல்லி மாஜிஸ்திரேட் கூறினார்.

மகளைக் கொன்ற தந்தை! குற்றம் காதல் !!

காதல் செய்த தனது 17 வயது மகளை அடித்து, உதைத்து, கண்டித்து கொன்ற தந்தை!

பாடசாலை செல்லும் வயதில் காதல் புரிந்தார் என்பதற்காக தனது சொந்த மகளை பாசமிகு தந்தை அடித்து, உதைத்து கொலை செய்த சம்பவமொன்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை - தல்அரம்மல 2ம் பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகள் ஒரு ஆணை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தந்தை கொதித்து எழுந்து வீட்டுக்கு வந்து தனது மகளை கண்டித்துள்ளார்.

மகள் மீது வைத்துள்ள அதிக பாசத்தால் என்னவோ தெரியவில்லை பரம எதிரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதுபோல் மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படியான அடி, உதைகளை வாங்கிய 17 வயதுடைய முத்து மொஹம்மது ஜமாசா என்ற யுவதி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடன் விரைந்த பொலிஸார் சந்தேகநபரான தந்தையை கைது செய்தனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு!


பேஸ்புக்கில் விருப்பம் தெரிவிக்க!