யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வருவது வழமை. ஆனால் இச் சிறுவன் ஒரு வயலினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து தற்போது மாயமாகி விட்டான். இவனைத் தேடி பி.பி.சியின் நிருபர் ஒருவர் யாழ்ப்பாணம் வரை வந்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா? அந்த வயலின் அவனிடம் இருக்கின்றதா? இசையில்லாமல் அவன் வாழமாட்டான். உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும், இந்த செய்தியை அனுப்புவீர்களா? யேசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள்! இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல.
BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள். இராணுவத்திடம் சரண்டையச் சென்ற மக்கள் தம்மிடம் உள்ள பணத்தை நகைகளை மற்றும் பெறுமதியான பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றனர்! ஆனால் இச் சிறுவனைப் பாருங்கள் அவன் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் கூட இல்லை. ஆனால் அவன் கைகளில் இருப்பது ஒரு வயலின்! இசை இல்லாமல் இவன் இருக்கமாட்டான் போலும்.
இவன் தற்போது எங்கே? இருக்கிறானா இல்லை இறந்துவிட்டானா? இராணுவத்தின் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பானா? இல்லை இவனை சிலர் பிடித்து வெளிநாட்டில் வேலை பார்க்க ஒரு வேலைக்காரனாக அனுப்பிவிட்டார்களா? என்னவென்று நினைப்பது? இதோ இவனைத் தேடி BBC நிருபர் ஒரு யாழ்ப்பாணம் வரை சென்றுள்ளார்.
அதன் காணொளியை நாம் இணைத்துள்ளோம். இச் சிறுவனுக்காக வேற்றின மக்கள் காட்டும் அக்கறையை எமது சொந்த மக்கள் ஏன் காட்டவில்லை? இவவைத் தேடும் பயணத்தை BBC ஆரம்பித்துள்ளது. ஆனால் எமது உலகத் தமிழ் உறவுகளே இவனை நீங்கள் இன்னும் எளிதாகக் கண்டுபிடிப்பீர்கள் என நாம் எண்ணுகிறோம். இவனை உங்களுக்கு அடையாளம் தெரிந்தால் BBC இணையத்தோடு தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்!
|
No comments:
Post a Comment