Tuesday, December 21, 2010

வெங்காய விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி


புதுதில்லி, டிச.21- வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்."வெங்காய விலை கடுமையாக உயர்ந்திருப்பது மிகவும் துரதிஷ்டமானது. மண்டியில் இருந்து நுகர்வோருக்கு செல்வதற்கு இடையில் சில குளறுபடிகள் நடைபெறுகின்றன. அவை விரைவில் சரி செய்யப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசுகிறேன். வெங்காய ஏற்றுமதி ஏற்கெனவே தடை செய்யப்பட்டுவிட்டது." என்று பிரணாப் கூறினார்

No comments:

Post a Comment