Tuesday, December 28, 2010

செல்போன் வைப்ரேஷனால் உணர்வு தூண்டப்பட்டு அவதிப்படும் பெண்

செல்போன்களிலிருந்து வரும் வைப்ரேஷன் மூலம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

செல்போன் என்றில்லாமல் எதில் எல்லாம் வைப்ரேஷன் வருமோ, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
அவரது பெயர் அமன்டா பிளவர்ஸ். உடற்பயிற்சி செய்யும் சாதனத்தை பயன்படுத்தும்போது அதிலிருந்து ஏற்படும் வைப்ரேஷன் தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதாக கூறுகிறார் அமன்டா. அதுவும் எப்படி என்றால் ஒரு நாளைக்கு பத்த முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு.

உடற்பயிற்சி சாதனம் என்றில்லாமல், செல்போன்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வைப்ரேஷன்களும் கூட தனக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதாக கூறுகிறார் அமன்டா.

அமன்டாவுக்கு இயல்பாகவே செக்ஸ் உணர்வு அதிகமாம். அதற்கு காரணம், அவரது நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஒரு கோளாறே காரணம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

24 வயதாகும் அமன்டா இதுகுறித்துக் கூறுகையில், ஏதாவது வைப்ரேஷனை எனது உடல் சந்தித்து விட்டால் உடனே செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு விடுகிறது. உடனடியாக செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அது வேகமாக இருக்கிறது. 

செல்போனிலிருந்து வரும் வைப்ரேஷன் கூட என்னை விட்டு வைப்பதில்லை. இதனால் மிகவும் அவதிப்படுகிறேன். இதைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. ஆனாலும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முயலுகிறேன் என்றார்.

தனது பிரச்சினையை சரி செய்ய தொடர் சிகிச்சைக்கும் உட்பட்டுள்ளாராம் அமன்டா.

No comments:

Post a Comment