D நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.
நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.
முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது.
இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.
மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.
இதில் சில மென்பொருள் தரவிறக்கி விண்ரார் எக்ஸ்ட்ராக்ட் செய்தால் வைரஸ் இருப்பதாக சொல்லும் அதிலும் குறிப்பாக NOD 32 உபயோகித்தால் இன்ஸ்டால் செய்யும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் இன்ஸ்டால் செய்து முடிந்ததும் மீண்டும் NOD 32 இயக்கத்திற்கு மாற்றவும். பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன்.
|
No comments:
Post a Comment