Tuesday, December 28, 2010

ஆண்களை வீழ்த்த... (மகளிர் மட்டும்)

 காதல் என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் திருத்தமாக மெயின்டெய்ன் செய்வதுதான் மிகப் பெரிய வேலை.



காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் உள்ளாடைகள். பெண்களின் உள்ளாடைகளை நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் உணர்வும் பொங்கி விடுகிறது. ஆண்களும்தான் உள்ளாடைகள் அணிகிறார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு 'சக்தி' என்பது புரியவில்லை. ஆனாலும் பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் இந்த உள்ளாடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. ஒரு வேளை, கிழிந்து நைந்து போன, கரித் துணியாக பயன்படுத்தும் அளவுக்கு பாழாகிப் போன பனியன், துவைக்காமலேயே பல நாட்களுக்கு போடும் ஜட்டிகள் என ஆண்களின் உள்ளாடைகளில் கவர்ச்சியை விட 'கப்பு' ஜாஸ்தி இருப்பதாலோ என்னவோ...

சரி, மேட்டருக்கு வருவோம். பெண்களுக்கு இன்று ஏகப்பட்ட வெரைட்டிகளில், வடிவங்களில் உள்ளாடைகள் வந்து விட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் உள்ளாடைகள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கின்றன. உள்ளாடைகளை மட்டுமல்லாமல் கவர்ச்சி ஆடைகளாகவும் மாறிப் போயுள்ளன.

இந்த உள்ளாடைகளுக்குள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம்...

- பெண்களுக்கு கருப்பு நிறத்திலான உள்ளாடைகள் மிகவும் கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான உள்ளாடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கருப்பு நிற உள்ளாடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். கருப்பு மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் கூட கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்ட உதவுகிறதாம். சிவப்பு நிறம் காம உணர்வுகளைத் தூண்ட உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமும் கூட.

- மென்மையான பருத்தி, சில்க் போன்றவற்றினால் ஆன உள்ளாடைகளை அணிவதே பெண்களின் கவர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது அடுத்த அம்சம். அதிலும், 'லேஸ்' உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் கிட்டத்தட்ட அடிமை போல அடங்கிப் போய் விடுவார்களாம்.

- பெண்கள் தங்களது வசீகரத்தை வஞ்சமில்லாமல் எடுத்துக் காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணியும்போது ஆண்கள் சட்டென்று அவர்களிடம் மயங்கிப் போய் விடுகிறார்கள். சிம்பிளாகவும் அதேசமயம், ஸ்டைலிஷானதுமான உள்ளாடைகளுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. அழகிய உள்ளாடைகளும், காற்றில் புரளும் நறுமணம் கமழும் தலை முடியும் கொண்ட பெண்கள் நிச்சயம் ஆண்களை வீழ்த்த அனைத்துத் தகுதியும் பெற்றவர்களாகிறார்கள்.

- பேன்டீஸ்களை அணியும் முன்பு அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களை சுத்தமாக ஷேவ் செய்து விடுவது அவசியமாகும். ஷேவ் செய்த பின்னர் பேபி எண்ணையை சற்று தடவி அந்தப் பகுதியை ஸ்மூத்தாக்கிக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். அக்குள் போன்ற இடங்களிலும் கூட உரோமங்கள் இல்லாமல் நீட்டாக இருந்தால் ஆண்களை அடக்குவது மிக மிக எளிதான வேலையாக இருக்கும்.

- உங்களது சருமத்திற்கேற்ற நிறத்திலான பேன்டீஸ்களை அணிவது இன்னும் உத்தமம். இது உங்களது அந்தரங்க அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்ட உதவும். காதல் கலையில் நறுமணத்தைக் கூட்ட உதவும்.

- எல்லாம் செய்த பின்னர் நறுமணம் இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும். எனவே உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்தமான வாசனை கொண்ட பர்ப்யூம்களை பயன்படுத்துவது அவசியம். மூக்கைத் துளைக்காத வாசனையுடன் கூடிய பர்ப்யூம்களை பயன்படுத்துங்கள். அதிகமாக வேண்டாம், ஜஸ்ட் ஜம்மென்று இருக்கும் வகையில் இருந்தால் போதும்.

இது ஒரு யோசனைதான். காதல் கலையில் கரை கண்டவர்களுக்கு இதை விட அதிக ஐடியாக்கள், அனுபவங்கள் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய இரவை இனியதாக்க இந்த ஐடியாக்கள் உதவினால் பெரும் சந்தோஷம்தான்.

No comments:

Post a Comment