நிலையங்களில் பயணிகளை முழு அளவில் ஸ்கேனிங் செய்யும்போது அவர்களது அந்தரங்கப் பகுதிகள் படப் பிடிப்புக்கு ஆளாகி விடாமல் தடுப்பதற்காக சிறப்பு உள்ளாடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதை கொலராடோவைச் சேர்ந்த ஜெப் பஸ்க் தயாரித்துள்ளார். இந்த உள்ளாடையை அணிந்து கொள்வதன் மூலம் நமது அந்தரங்க உறுப்புகள் ஸ்கேனிங்கின்போது தெரியாதாம். நமது உடலை ஸ்கேனிங் செய்வோருக்கு அந்தரங்க உறுப்புகளை பார்க்கவும் முடியாது.
இதுகுறித்து ஜெப் கூறுகையில், இந்த உள்ளாடைகளில் சிறப்பு மெட்டல் பவுடர் உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் நமது அந்தரங்கப் பகுதியை ஸ்கேனிங்கின்போது யாரும் பார்க்க இயலாத நிலை ஏற்படுகிறது. விமான நிலைய ஸ்கிரீனிங்கின்போது மட்டுமல்லாமல், மருத்துவ ரீதியிலான ஸ்கேனிங்கின்போதும் கூட இதை அணிந்து கொள்ளலாம்.
மெட்டல் பவுடர் உபயோகிக்கப்பட்டாலும் கூட உள்ளாடையின் உட் பகுதியில், மென்மையான துணிகள் வைக்கப்பட்டிருப்பதால் உடல்உறுப்புக்கு பாதிப்பும் வராதாம்.
ஆண்களுக்கான உள்ளாடையின் முன் பகுதியில் இலை போன்ற வடிவமும், பெண்களுக்கான உள்ளாடையின் முன் பகுதியில், விரல்களை விரித்து வைத்திருப்பது போன்ற கை டிசைனும் இடம் பெற்றுள்ளதாம்.
இருப்பினும் இந்த உள்ளாடைக்கு இன்னும் அமெரிக்க அதிகாரிகள் அனுமதி தரவில்லையாம்.
|
No comments:
Post a Comment