Seven Habits 3 - Stephen Covey
சமூகத்தில் பிறருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு முதலில் தன்னை சுதந்திர மனிதனாக, பிறரைச் சாராதவனாக உருவாக்கிக் கொள்வது அடிப்படைத் தேவை. சமூக வாழ்க்கை என்பது பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாக இல்லாமல், பிறருடன் சேர்ந்து செயலாற்றும் கூட்டு வாழ்க்கையாக அமைய வேண்டும்.
அதற்கு முதல் மூன்று படிகள் மூலம், நமது நோக்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு நேரத்தை சரியான வழியில் செலவளிக்கப் பழகிக் கொள்கிறோம்.
அடுத்த மூன்று படிகளில் உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவினருடன் எப்படி உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.
4. இரண்டு தரப்பும் வெற்றி பெறும் வழியைப் பார்க்க வேண்டும்.
5. முதலில் அடுத்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
6. 1+1 > 2
இரண்டு தரப்பினர் சேர்ந்து ஒன்றை செய்யும் போது இருவரும் அதில் தமக்கு நல்லது நடக்கிறது என்று நம்ப வேண்டும். win-win
எந்த சூழலிலும் இரண்டு தரப்புக்கும் நன்மை தரும் வழியைக் காண முயல வேண்டும். பேச ஆரம்பிக்கும் முன்னரே, 'இப்படி இரண்டு பக்கமும் நிறைவளிக்கும் வழி கிடைக்காவிட்டால், இந்த ஒப்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வோம்' என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது போல உறவுகளை ஏற்படுத்தும் முறைதான் நீண்ட கால நோக்கில் உதவும்.

- 'எதிராளி எப்படி வேண்டுமானாலும் போகட்டும், எனக்கு வேண்டியது கிடைத்தால் போதும்' win-lose
- 'என்னை எல்லோரும் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். என் தலைவிதி இவ்வளவுதான், அவனே எல்லாம் எடுத்துக்கட்டும், நான் இப்படியே இருக்கிறேன்' lose-win
- 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும். கோர்ட்டில் வழக்கு போட்டு அவனை ஒரு வழி பண்ணி விடுகிறேன்' lose-lose
இரண்டு தரப்பினர் சேர்ந்து ஒன்றை செய்யும் போது இருவரும் அதில் தமக்கு நல்லது நடக்கிறது என்று நம்ப வேண்டும். win-win
எந்த சூழலிலும் இரண்டு தரப்புக்கும் நன்மை தரும் வழியைக் காண முயல வேண்டும். பேச ஆரம்பிக்கும் முன்னரே, 'இப்படி இரண்டு பக்கமும் நிறைவளிக்கும் வழி கிடைக்காவிட்டால், இந்த ஒப்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வோம்' என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது போல உறவுகளை ஏற்படுத்தும் முறைதான் நீண்ட கால நோக்கில் உதவும்.
|
No comments:
Post a Comment