Monday, December 12, 2011

கொலைவெறி இப்படி பிச்சுகிட்டு போகும்னு கனவிலும் நினைக்கலை..! : தனுஷ்

"இந்த கொலவெறி என்னோட முதல் கொலவெறி இல்ல" தனது கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் லட்சக்கண‌க்கான‌ ஹிட்டுகளை அள்ளிக்குவிக்கும் நேரத்தில் அதைப்பற்றிய பரபரப்பான, விறுவிறுப்பான ஸீக்ரெட் முடிச்சை அவிழ்த்துள்ளார் நடிகர் தனுஷ்.

"முதல்ல நாங்க டம்மியா கம்போஸ் செஞ்சு வச்சிருந்த கொலவெறி பாட்டை யாரோ என்னோட கம்யூட்டர்ல இருந்து எடுத்து இன்டர்நெட்ல விட்டுட்டாங்க. அப்ப நான் மும்பையில ஒரு மீட்டிங்ல இருந்தேன். என்னோட நண்பன் எனக்கு போன் பண்ணி " மச்சி நீ பாடுன பாட்டு சூப்பர்டா.. இப்பதான் யூடியூப்ல பாத்தேன்.. இதுவரைக்கும் மொத்தம் 22 பேர் பாத்திருக்காங்கடான்னு" சொன்னான். எனக்கு பதட்டமாபோச்சு. ஏன்னா, இந்த பாட்டு முறைப்படி வெளிவரணும். 

இதுல இசையமைப்பாளரா அறிமுகமாகப்போற அநிருத்தோட வாழ்க்கை, பாட்டெழுதின என்னோட வாழ்க்கை, முதல் படம் மூலமா இயக்குனரா அறிமுகமாகுற மனைவி ஐஸ்வர்யாவின் வாழ்க்கை உட்பட‌ எல்லாமே அடங்கியிருக்கு. அதோட, இது எதார்த்தமா கம்போஸ் பண்ணியிருந்தாலும் எழுதியிருந்தாலும், இதோட ஹிட் ரேஞ்ச் நிச்சயம் பிச்சிகிட்டு போகும்னு கேல்குலேட் பண்ணி வச்சிருந்தோம். 

இப்படியான சூழ்நிலையில தான் சோனி நிறுவனத்துக்கு போன் பண்ணி உடனே அந்த பாட்டை தடுத்து நிறுத்துங்க.. இன்னும் மூணே நாள்ல ரிலீஸ் பண்ணாலாம்னு கேட்டுகிட்டேன். உடனே அவங்களும் நடவடிக்கை எடுத்து யூடியூப்ல பாட்டை நிறுத்திட்டாங்க. பிறகு தான் இப்ப நீங்க பாக்குற 'லைம் லைட்' விஷுவல் எடுத்து வெளியிட்டோம்.

பாடல் வெளியிட்ட போது, இசையமைப்பாளரான‌ அநிருத் என்கிட்ட சொன்னான் 'நீ வேணா பாரு தனுஷ்.. கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் பேராச்சும் இதை பாப்பாங்க'ன்னு. ஆனா முதல் நாளே 83 ஆயிரம் பேர் பாத்திருக்காங்க. அடுத்த ஐந்து நாளுக்குப் பிறகு கிட்டத்தட்ட நாப்பத்தேழு லட்சம் பேர் பாத்திருக்காங்க. நான் ஹிட்டாகும்னு எதிர்பார்த்தனே ஒழிய இப்படி பிச்சுகிட்டு போகும்னு நினைக்கல. இது ஒரு 'ஆக்சிடென்ட்', ஆனா சந்தோஷமான ஆக்சிடென்ட்" என தன்மையான குரலில் பேசினார் தனுஷ்.

இந்தியா டுடே நடத்தும் 'யூத் சம்மிட் 2011' நிகழ்ச்சியில் வி.ஐ.டி. பல்கலைகழக மாணவர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு தனுஷிடம் கொலைவெறி கேள்விகளைக் கேட்டனர். அனைவருக்கும் பொறுமையாக பதிலளித்தார். 

இந்த பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும் இளைஞர்களை சீர்குலைக்கும் நோக்கோடும் எழுதப்பட்டுள்ளதே என்பதாக சில கேள்விகள் தொடர்ந்து வந்தன. அதற்கு பதிலளித்த தனுஷ், " பாஸ்.. முதல்ல ஒண்ணை தெளிவா புரிஞ்சுக்குங்க.. இது ஆல்பம் இல்ல.. ' 3' ங்கற படத்தோட ஒரு பாட்டு. அந்த படத்து ஹீரோயின் ஹீரோவ காயப்படுத்தற மாதிரி ஒரு சீன் வரும். அதுக்கான சிச்சுவேஷனுக்கு எழுதப்பட்டது இந்த பாட்டு. ஸோ நீங்க நினைக்கிற மாதிரி எந்த உள்குத்தும் இதுல இல்ல. 

அதே போல. வேணும்னா இந்த பாட்ட கேளுங்க.. வேணாம்னா விட்டுடுங்க. சொல்லப்போனா பசங்களை விட பொண்ணுங்கதான் இந்த பாட்டை அதிகம் ரசிக்கிறாங்க தெரியுமா.. 

சமீபத்துல‌ வட இந்தியாவுக்கு போயிருந்த போது, திடீர்னு ஒரு பொண்ணு வந்து 'ஏய் நீதான அந்த கொலவெறி பையன்னு கேட்டு, என்னோட சேர்ந்து போட்டோ எடுத்துகிட்டு ஆட்டோகிராப் வாங்கிட்டு போனாங்க. இது எனக்கு பர்ஸ்ட் டைம் பாஸ். அதுவும் நார்த் இந்தியன் பொண்ணு.. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்...!

நிறைய பேர் உங்க அடுத்த பாட்டும் இதேபோல இருக்குமா? எப்ப வரும்? இப்படியெல்லாம் கேக்குறாங்க. அவங்களுக்கு என்னோட பதில் இதுதான்.. எங்கிட்ட இது போல நிறைய இருக்கு. ஆனா இதேபோல வரும்னு எதிர்பாக்காதீங்க. ஏன்னா மத்ததையும் நீங்க பாக்கணும் இல்லையா..! 

சிலர் என்கிட்ட சொன்னதுண்டு, 'பேசாம நடிக்கிறதவிட‌ பாட்டு பாட போயிரலாமே'ன்னு. டெக்னாலஜி தான் என்னோட கேவலமான வாய்ஸை இப்படி கேக்கிற மாதிரி மாத்தியிருக்கு. எனவே மக்களே, ஒரு தமிழன் படைத்த உலக இசை அப்படி இப்படின்னு யாரும் சொன்னாகூட முழுக்க முழுக்க இந்த கொலவெறியை தமிழ் மட்டும் பேசதெரிந்த என்போன்ற இளைஞர்களுக்கு சமர்பிக்கிறேன்...!" 

'சூப்'பரா பேசறீங்க, போங்க !

ரஜினிகாந்த் பைத்தியங்களுக்கு அர்ப்பணம்


தமிழ் திரையுலகமே சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரஜினிக்கு இன்று வயது 62. தமிழக மக்களை மயக்கியதில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், ஸ்டைலில் சூப்பர் மேன் என சொல்லி கொண்டே போகலாம்.

அவரை பற்றிய சில தகவல் துளிகள் :

* 'எவன் ஒருவனும் ஒன்றை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

* உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

* தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

* ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

* 25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு, தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

* 'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?' -1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

* இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

* மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

* திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

* 'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

* ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர்களின் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

* கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி, பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

* ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone, whereas my problem is stomach'

* ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

* 'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

* ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

* ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

* ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

* ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏ.வி.எம். தயாரிப்பு!

* பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

* இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

* ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

* ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

* ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

* பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

* அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

* தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

* யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

* 'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

* ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம் கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

* ரஜினி ஷூ போடுவதை விரும்புவது இல்லை. ஷூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே ஷூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

* தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

* ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

* எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

* டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

* பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

* கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

* முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

* ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

* 'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

* சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!

* எனது ரோல் மாடல் அமிதாப் மட்டுமே என்பார் ரஜினி

பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்ய டில்லி மாணவர் தேர்வு – சம்பளம் ரூ.65 லட்சம்..!

சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் டில்லி ஐ.ஐ.டி.யில் நடத்திய வளாகத் தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஒருவரைத் தேர்வு செய்துள்ளது.
இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளம் தரப்படும் என அந் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக் தங்களின் நிறுவனத்துக்கு திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை வளாகத் தேர்வு மூலம் இந் நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர் சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.

இந் நிலையில் இந்த ஆண்டும் டில்லி ஐ.ஐ.டி.,யில் பேஸ்புக் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் அன்கூர் தாகியா என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படும் என அந் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. தாகியா, படிப்பு முடிந்தவுடன், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் புரோகிராமராக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

இது குறித்து அன்கூர் தாகியா கூறியதாவது…..

“பேஸ்புக் வலைதளத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறியுள்ளது. மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சீன் நல்லா வரலன்னா கிஸ் பண்ண சொல்லுவேன். – ஐஸ்வர்யா தனுஷ்

இணையதளம் முழுக்கவே இதயம் வெடிக்க அலறி பாடிக் கொண்டிருக்கிறது தனுஷ் பாடிய பாடலை.ஐஸ்வர்யா இயக்கும் ’3′ படத்தில் வரும் ‘வொய் திஸ் கொலை வெறிடி’ என்ற பாடல்தான் இப்படி இளைஞர் பட்டாளத்தை அலற வைத்துக் கொண்டிருக்கிறது. “தத்து பித்துன்னு பாடுன பாட்டை தத்துவப் பாடல் மாதிரி எல்லாரும் கொண்டாடுறது கொஞ்சம் ஓவராதான் இருக்கு பாஸ்” என்று சிரிக்கிறார் தனுஷ். பக்கத்திலிருந்த ஐஸ்வர்யாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்படி தொடக்கமே ஜாலியான ஒரு சந்திப்பாக அமைந்து விட்டது. தொடர்ந்து பேசினார் ஐஸ்வர்யா.

நெட்ல ஹிட் ஆயிடுச்சுங்கறது நீங்களே கிளப்பிவிட்டது தானே..?

ப்ராமிஸ். இத நாங்களே எதிர்பார்க்கல. காரணம். நாங்க பாடலை நெட்ல போடவே இல்லை. பாட்டு முழுசா ஃபினிஷ் பண்ணாத நிலையிலேயே பாட்டை எடுத்து யாரோ நெட்ல விட்டிருக்காங்க. அதைக் கேட்டுட்டு நாமே முழுசா ரெக்கார்டிங் முடித்த பாட்டை நெட்ல போடலாமோன்னு ஐடியா பண்ணி போட்டோம். யாரோ தெரியாமல் செய்த விஷயம் எங்கள் பாடலை ஹிட் பண்ணிக் கொடுத்திருச்சு.

ஸ்ருதி – தனுஷ் கெமிஸ்ட்ரி எப்படி பொருந்தியிருக்கு?

தனுஷ் புது நடிகர் கிடையாது. ஸ்ருதிக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. அதோட ரெண்டு பேருக்கும் கதை ரொம்பவே பிடிச்சிருந்தது. ஸ்ருதி நடிப்புல இந்த படம் முக்கியமான படமா இருக்கும். தனுஷ் சின்னச் சின்ன ஆக்ஷன்ல அசத்தியிருக்கார்.

மழைப் பாடல் காட்சியில் தனுஷ் -ஸ்ருதி நெருக்கம் காட்டியிருக்காங்களே. ஷூட்டிங்கின்போது ஒரு மனைவியா இதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?

ரெண்டு பேரு தனியா இருந்தால் முத்தம் கொடுத்துக்கறது ஈஸி. சுற்றிலும் யூனிட்டே வேடிக்கை பார்க்குது. பக்கத்துலயே பொண்டாட்டி வேற உட்கார்ந்திருக்கேன். இந்த சூழல்ல தனுஷ், ஸ்ருதியோட காதல் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் பாருங்க. எனக்கு அதெல்லாம் எதுவும் தோணாது. சீன் நல்லா வரலன்னா மறுபடியும் கிஸ் பண்ணதான் சொல்லுவேன். நான் திருப்தியாகும் வரை விடமாட்டேன். தட்ஸ் ஆல்.

மியூசிக் டைரக்டர் அனிருத்திற்கு இந்த வருட ஹிட் கிடைச்சாச்சு போலிருக்கே?

படம் பண்ணும் போதே நாம ஒரு புது யூத் டீம் அமைக்கலாம்னு ப்ளான் பண்ணிதான் அனிருத்தை செலக்ட் பண்ணினேன். அது பலிச்சிடுச்சு. நானே மியூசிக் டைரக்டர்கிட்ட உட்கார்ந்து பாட்டு வாங்க நினைச்சேன். அப்படியே பண்ணினேன். சரியான திட்டமிடலுக்கு பலனா இப்பவே சக்ஸஸ் தெரிய ஆரம்பிச்சிருக்கு.

அமலா பால் நடிப்பை ஸ்ருதிகிட்ட வாங்கிட்டீங்களா?

இந்த கேரக்டருக்கு ஸ்ருதியை நினைச்சுதான் ஸ்கிரிப்ட்டே எழுதினேன். டேட் குழப்பங்கள்னால அமலாவை பண்ண வைக்கலாம்னு நினைச்சோம். ஸ்ருதி தேதியை அட்ஜஸ்ட் பண்ணி தந்ததால அவங்களே பண்ணட்டுமேனு ஆசைப்பட்டேன். எது யாருக்கு கிடைக்கணும்னு முடிவாகியிருக்கோ அதுதான் அவங்களுக்குக் கிடைக்கும். மற்றபடி அமலா நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது.

அப்பாவின் ‘கோச்சடையான்’ படத்தில் உங்க பங்களிப்பு இருக்குமோ?

நிச்சயமா இல்லை. என் படத்திற்கே எனக்கு நேரம் பத்தலை. ஓடிக்கிட்டே இருக்கேன்.

நன்றி : கூ்டல்

ராஜபாட்டையில் 17 கெட்டப் ! படங்கள்


விக்ரம், தீக்ஷா சேத், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்து வெளிவர இருக்கும் படம் 'ராஜபாட்டை'. சுசீந்திரன் இயக்க, யுவன் இசையமைத்து இருக்கிறார். PVP சினிமாஸ் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று ( டிசம்பர் 09 ) நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இருந்து சில தகவல் துளிகள்:

* அம்மு, பாலாஜி தொகுத்து வழங்க, சற்று லேட்டாகவே துவங்கியது இசை வெளியீட்டு விழா.

* ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கு இடையே விக்ரம் அரங்கினுள் வந்தார்.

* 'ராஜபாட்டை' படக்குழுவினர் அனைவரையும் மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார்கள். அவற்றை தொடர்ந்து விக்ரம் - சுசீந்திரன் இருவரைப் பற்றியும் வீடியோ பதிவு திரையிடப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது பாதியில் நிறுத்தப்பட்டது. 

* விக்ரம் : " சுசீந்திரன் இயக்கிய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'நான் மகான் அல்ல' எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் பிறகு வந்த 'அழகர்சாமியின் குதிரை' படமும் எனக்கு பிடித்தது தான். அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது 'ராஜபாட்டை' படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. 'தில்', 'தூள்', 'சாமி' படங்களின் வரிசையில் எனது ரசிகர்களுக்காக நடித்த படம் தான் 'ராஜபாட்டை' ".

* சுசீந்திரன் : " விக்ரம் சாரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். 'தெய்வத்திருமகள்' படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்தேன். 'ராஜபாட்டை' படம் ஜாலியான படம். ஆனால் இதிலும் விக்ரம் சாரின் பெரும் உழைப்பு அடங்கி இருக்கிறது. 17 கெட்டப்களில் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

* தீக்ஷா சேத் : " நான் விக்ரமின் தீவிர ரசிகை. எனது முதல் தமிழ்ப்படமே விக்ரம் சாருடன் நடிக்க, வெளிவருவதில் மகிழ்ச்சி. ஒருவேளை நான் இப்படத்தில் நடிக்காமல் இருந்திருந்தாலும், விக்ரம் ரசிகையாக இவ்விழாவில் பங்கேற்று இருப்பேன்."

* ரீமா சென் : " நான் ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து 'தூள்' படத்தில் நடித்து இருக்கிறேன். 'தூள்' படத்தை விட ராஜபாட்டை படத்தில் விக்ரம் இன்னும் இளமையாக இருக்கிறார் "

* இயக்குனர் விஜய் : " நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகன். 'தெய்வத்திருமகள்' படத்தினை தொடர்ந்து, எனது அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. விக்ரம் ஒரு அற்புதமான மனிதர். வாழ்க்கையில் விக்ரமை FOLLOW பண்ண விரும்புகிறேன் " என்றார்.


* யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை மேடைக்கு அழைத்து, அவர்களைக் கொண்டு ஒரு பாடலை வெளியிட்டனர். 

* தீக்ஷா சேத், ரீமா சென் இணைந்து ஒரு பாடலையும், சுசித்ரா, மாலதி இணைந்து ஒரு பாடலையும் வெளியிட்டார்கள். அப்பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடினார்கள்.

* 'பொடி பையன் போலவே', 'வில்லாதி வில்லன்' ஆகிய பாடல்கள் திரையிடப்பட்டது.' 'வில்லாதி வில்லன்' பாடலில் விக்ரம் பல்வேறு கெட்டப்களில் சலோனியுடன் இணைந்து ஆடி இருந்தார். 

*ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் விக்ரம். அப்போது எப்போது இயக்குனர் ஆவிர்கள் என்ற கேள்விக்கு விக்ரம் " தமிழ் திரையுலகில் மணிரத்னம், பாலா, சுசீந்திரன், ஹரி, விஜய் என பல நல்ல இயக்குனர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். கண்டிப்பாக வரும் காலத்தில் இயக்குனர் ஆவேன் " என்றார்.

* இறுதியாக படக்குழுவினர் அனைவரும் மேடையேறி படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்கள். படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக மீண்டும் ஒருமுறை டிரெய்லரை திரையிட்டார்கள். அதற்குப் பிறகும் ரசிகர்கள் ONCE MORE கேட்டார்கள்.

* இயக்குனர் சுசீந்திரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

குழந்தை வரம் வேண்டி கோயிலில் பள்ளிகொள்ளும் பெண்கள்.

வேலூர் அருகேயுள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் குழந்தை வரம் வேண்டி நள்ளிரவில் சிம்மக்குளத்தில் பெண்கள் நீராடி ஈரத் துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை & சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை கடைசி ஞாயிறு அன்று இங்குள்ள சிம்மக்குளம் திறக்கப்படும்.

குளத்தில் நீராடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் இரவு தூங்க வேண்டும். அப்போது அவர்களது கனவில் சுவாமி தோன்றி பழம், பூ, பாலாடை கொடுப்பதும், அடுத்த ஆண்டே அவர்கள் குழந்தைபேறு அடைவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயிலுக்கு வந்து தொட்டில் கட்டிச் செல்வார்கள். அதன்படி, இந்தாண்டு கடைசி ஞாயிறு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிம்மக்குளத்தை திறந்து வைத்தனர்.

அப்போது ஏராளமான பெண்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தை வரம் வேண்டி சிம்மக்குளத்தில் நீராடினர். பின்னர் ஈரச் சேலையுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்கினர்.

நேற்று காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், பாலகனான பிரம்மாவுக்கு உபநயன சிவதீட்சையும், சுவாமி வீதி உலாவும், பகலில் அபிஷேகமும் நடந்தது.

மாலையில் அபிஷேகம், மகா தீபாராதனை, இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர்.

'அபூர்வ ராகங்கள்' முதல் 'கோச்சடையான்' வரை...ரஜினி!

'சார் இவரோட பேர் கலைஞானம். இவர்தான் என்னை முழுசா நம்பி முதன்முதலா 'பைரவி' படத்துல ஹீரோ சான்ஸ் கொடுத்தார்...' இப்படித்தான் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் வி.வி.ஐ.பி-க்களிடம் கலைஞானத்தை அறிமுகபடுத்துவார், சூப்பர் ஸ்டார் ரஜினி. இரண்டு நபரைக் கண்டால் மட்டும் சட்டென்று எழுந்து நிற்பார். வாசல்வரை வந்து வழியனுப்புவது ரஜினியின் வழக்கம். ஒருவர் கே.பாலசந்தர்... இன்னொருவர் கலைஞானம். 

குடும்ப விஷ்யங்கள் முதல் 'கோச்சடையான்' படம்வரை அனைத்தையும் கலைஞானத்துடன் கலந்து ஆலோசிப்பார், ரஜினி. 'பைரவி'முதல் 'கோச்சடையான்'வரை ரஜினிபற்றி நமக்கு தெரியாத இன்னொரு பக்கத்தை நம்முடன் பகர்கிறார், கலைஞானம்.

'பைரவி' முதல் 'கோச்சடையன்' வரை...
-ரஜினியின் கலை பயணம் குறித்து கதாசிரியர், இயக்குனர் கலைஞானம்

தேவர், சிவாஜி, ரஜினி...

'முதன்முதலா 'பைரவி' படத்தை தயாரிச்சேன், அதுக்கு படத்துக்கு பைனான்ஸ் உதவி செஞ்சவர், தேவர். ஒருநாள் 'ஏண்டா நீ தயாரிக்குற படத்துக்கு ஹீரோ யாருடா..?' என்று தேவர் கேட்டார்.

'ரஜினிகாந்த்...' என்றேன்.

' வில்லனா நடிக்கிற ஆளை ஹீரோவா போடுறியே. தப்பான முடிவா தெரியுது...' 
' ரஜினியை 'ஆறு புஷ்பங்கள்' படத்துல பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்.. நீங்க வேணா பாருங்க, அவர் நிச்சயமா பெரிய நடிகரா ஜெயிப்பார்'னு அவர்கிட்டே சொன்னடோட நிற்கலை.. என்னோட முடிவுல இருந்தும் நான் மாறலை. 1978 ஜனவரி மாசம் 'பைரவி' படத்துக்கு பூஜை போட்டேன். தேவர் தலைமை தாங்க, சிவாஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஒருவழியா 'பைரவி' படம் ரிலீஸாச்சு.

ரஜினியும்... பாம்பும்...

முதல்நாள் மேட்னி ஷோ ராஜகுமாரி தியேட்டர்ல 'பைரவி'யை நானும் தேவரும் பார்த்தோம். வெள்ளித்திரையில ரஜினி காட்டுன விதவிதமான ஸ்டைலுக்கு, ஜனங்ககிட்டே இருந்து பயங்கர கைத்தட்டல். முக்கியமா ரஜினியும், பாம்பும் சேர்ந்து நடிக்கிற சீனுக்கு ஏகோபித்த வரவேற்பு. 

அதன்பின், ரஜினியும் பாம்பும் சேர்ந்து நடிச்சா சென்டிமென்ட்டா படம் சக்ஸஸ். அப்புறமா வெளிவந்த 'தம்பிக்கு எந்த ஊரு' 'அண்ணாமலை' 'படையப்பா' இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கு. 

'பைரவி' படத்தை பார்த்த தேவர் ஆச்சர்யத்துல அசந்து போனார். 'கலைஞானம்... நான் ரஜினி நடிப்பை பத்தி தப்பா எடை போட்டுட்டேன்... உடனே ரஜினிய கிளம்பி வீட்டுக்கு வரச்சொல்...' என்றார். அடுத்த சில நிமிஷத்தில் ரஜினி, தேவர் வீட்டில் ஆஜர். 

எவ்வளவோ வற்புறுத்தியும் சோபாவில் உட்காராமல் தேவர் முன்பு நின்று கொண்டே இருந்தார், ரஜினி! 'கலைஞானம் 'பைரவி' படத்துக்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தே..?' என்னைப் பார்த்து தேவர் கேட்டார். 'ஐம்பதாயிரம் ரூபாய்...' என்றேன்.

தேவர் தனது உதவியாளரை அழைத்து காதில் கிசுகிசுத்தார். அடுத்த சில நோடிகளில் சூட்கேஸில் கட்டுக்கட்டாய் கரன்சியை நிரப்பி தூக்க முடியாமல் எடுத்து வந்தார், உதவி. ' அடுத்து நான் தயாரிக்க போற ரெண்டு படத்துலயும் நீதான் ஹீரோ... இந்தாப்பா ரஜினி, அதுக்கான சம்பளம் இது! பத்தலைன்னா இன்னும் வாங்கிக்கோ... சொந்தமா வீடு இருக்கா? நான் வேணா வாங்கி தரட்டுமா...' தேவர் சொல்லச் சொல்ல திகைச்சு போயிட்டார், ரஜினி. அந்தக் காலத்துல நிறைய ஹீரோக்களுக்கு தேவர் வீடு வாங்கி கொடுத்து இருப்பது தனிக்கதை. 

ரஜினியின் கோபம்...

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 'தாய்மீது சத்தியம்' 'அன்னை ஒர் ஆலயம்' படங்கள் வெளிவந்துச்சு. தேவரின் செல்லமான ஹீரோவாயிட்டார், ரஜினி. அந்த நேரத்துல தேவர் பிலிம்ஸ்ல கமல் நடிக்கிற 'தாயில்லா குழந்தை' படம் தயாராச்சு. 'என்னை ஏன் நடிக்க கூப்பிடல...' என்று ரஜினி தேவர்கிட்டே செல்லமா கோபிச்சுக்கிட்ட்டார். அதன்பிறகு தானே வலியபோய் உரிமையா கேட்டு கமலோட 'தாயில்லாமல் நானில்லை' படத்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சார், ரஜினி. அந்தளவுக்கு தேவர் பிலிம்ஸோட நெருக்கமா இருந்தார். அதன்பின் ரஜினி உச்சத்துல ஒளிர்கிற சூப்பர் ஸ்டார் ஆயிட்டார். 

மனோரமாவை திட்டாதீங்க... 

அன்று முதல் இன்று வரை ரஜினி நடித்த நிறைய திரைப்படங்களின், கதை, திரைக்கதை, டிஸ்கஷனில் கலந்து வந்திருக்கேன். ஒரு தடவை நடிகை மனோரமா ரஜினியை பத்தி தாறுமாறா திட்டி மேடையில பேசினாங்க. அதைக்கேட்டு எனக்கு கோபம் வந்துடுச்சு. மனோரமாவைத் திட்டி டிவி மீடியாவுல பேட்டிக் கொடுக்க தயாரானேன். 

அப்போ பி.வாசுவோட வீட்டுல, அவர் படத்தோட விவாதத்துல இருந்தேன். அதனால மீடியாவை வாசு வீட்டுக்கு வரச்சொன்னேன். இந்த விஷயம் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஷூட்டிங்குல இருந்து ரஜினிக்கு தெரிஞ்சு போச்சு. உடனே வாசு வீட்டுக்கு போன் போட்டார் ரஜினி. வாசு போனை என்னிடம் தந்தார். 'மனோரமா மேடம் எவ்ளோ பெரிய ஆர்டிஸ்ட். அவங்க என்னை எப்படி வேணா திட்டி பேசட்டும்.. அதுக்கு அவங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. கலைஞானம் சார், தயவுசெய்து நீங்க எனக்காக ஆச்சியை எதிர்த்து மீடியாவுல எதுவுமே பேசாதீங்க ப்ளீஸ்...'னு மன்றாடினார். அதுதான் ரஜினி. 

ரஜினி வார்த்தை...

ரஜினியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசுவேன். பொதுவா தன்னைச் சந்தித்து பேசுகிறவர்களிடம், ரஜினி 'அப்புறம்..?' என்று ஆரம்பித்தால் கிளம்புங்கனு அர்த்தம். பலமுறை பார்த்து இருக்கிறேன். அதனால் நான் பார்த்து பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் என்னைப் பார்த்து 'அப்புறம்...? கேட்கும் முன்பே நான் அவரைப் பார்த்து 'அப்புறம்...' போட்டுவிட்டு கிளம்பி வந்துவிடுவேன்.

வி.ஐ.பி வேலி...

ஒருநாள் ஏவி.எம்ல 'வீரா' படப்பிடிப்புல ரஜினிய சந்திச்சேன். அப்போ தனிமையில இருந்தார். என்னை பார்த்ததும் சேர்ல இருந்து எழுந்து நின்று உதவியாளர் ஜெயராமை ஒரு பார்வை பார்த்தார். அடுத்த நிமிஷமே கையில் சேர் எடுத்து வந்தார். நான் உட்கார்ந்தவுடன் தன்னுடைய நெற்றில் பொட்டில் ஆட்காட்டி விரலை வைத்து என்னையே பார்த்தார். 'கலைஞானம் சார்... என்னைச்சுற்றி இப்போ வி.ஐ.பி தயாரிப்பளருங்க வேலி போட்டு இருக்காங்க... அதைத்தாண்டி வெளியில என்னால வரமுடியலை... அதனால கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரியான நேரத்துல உங்களை கூப்பிடுவேன்...' என்று ஃப்ராமிஸ் செய்தார். 

காலம் வேகமா போயிக்கிட்டே இருந்துச்சு. அப்பல்லாம் பெரியவர் வி.கே.ராமசாமி ரஜினிய பாக்குறப்போ 'ஏம்ப்பா ரஜினி எனக்கு ஒரேஒரு படம் நடிச்சுக் கொடுப்பா... என்னாட எல்லா கடனையும் அடைச்சுட்டு நான் நிம்மதியா கண்ண மூடுவேன்...' என்று அடிக்கடி சொல்வார். 

திடீர்னு ஒருநாள் ரஜினி வீட்டுல இருந்து போன். 'சார் உடனே கிளம்பி வீட்டுக்கு வர்றீங்களா..?' ரஜினி கூப்பிட்டார். வீட்டுக்குள் போனதும் அங்கே பக்கவாதத்தால் பாதிச்ச வி.கே.ராமசாமி... ஆக்ஸிடென்ல கையுடைஞ்ச பண்டரிபாய்... 'காளி' பட தீ விபத்தால ஏகப்பட்ட பணத்தை இழந்த தயாரிப்பாளர் ஹேம்நாக்... 'எஜமான்'ல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்த நாகராஜராவ்... 'அபூர்வ ராகங்கள்' தயாரிப்பாளர் இறந்துட்டார், அதனால அவரோட வாரிசுகள்... இவங்க எல்லாம் ஒண்ணா இருந்தாங்க.

எம்.ஜி.ஆர் பாடிகார்ட்...

முக்கியமான ஒருத்தரை சொல்லியே ஆகணும் அவர்தான் எம்.ஜி.ஆரோட பாடிகார்டா இருந்த, பத்மநாபன். சரியான எம்.ஜி.ஆர் வெறியர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் எப்போதும் அவர் கூடவே இருப்பார். சி.எம் ஆனபிறகு பத்மநாபனை சத்யா ஸ்டுடியோ மேனேஜராக்கிவிட்டு போனார். 

எம்.ஜி.ஆர். அமெரிக்க சிகிச்சைக்கு அப்புறம் 1987-ல தன்னோட கடைசி காலத்துல பத்மனாபனை தன்னோட ராமவரம் தோட்டத்துக்கு வரச்சொன்னார், எம்.ஜி.ஆர். பத்மாவோட குடும்ப நிலைமைய புரிஞ்சு, 'உனக்கு 30-லட்சம் ரூம்ல மூட்டைக்கட்டி வச்சிருக்கேன் போய் எடுத்துக்கோ...'னு சொன்னார், எம்ஜி.ஆர். 'தலைவரே நீங்க உயிரோட இருந்தா அதுவே போதும்'னு எம்.ஜி.ஆர் காலை பிடிச்சு கரகரனு கதறி அழுதார். எம்.ஜி.ஆர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், வற்புறுத்தியும் கடைசிவரை பணத்தை வாங்க மறுத்துட்டார், பத்மநாபன். 

ஆறு பெண் குழந்தைகளை பெத்து வச்சுக்கிட்டு கஷ்ட ஜீவனம் நடித்திக்கிட்டு இருந்த பத்மநாபன், திடீர்னு ஒருநாள் இறந்துட்டார். அப்பாவை இழந்த அவரோட குடும்பம் நிலைகுலைஞ்சு போயிடுச்சு.

உதவிய ஊர்காவலன்... 

'ராணுவவீரன்' 'ஊர்க்காவலன்' ஷூட்டிங் நடந்தப்போ ரஜினிகூடவே இருந்து ஹெல்ப் பண்ணினார், பத்மநாபன். அதனால ரஜினி மனசுல பத்மநாபன் இடம்பிடிச்சார். 

பத்மநாபன் மறைவுக்கு அப்புறம், அவரோட குடும்பம் கஷ்டப்படுற நிலைமையை கேள்விப்பட்டு அவரோட ஆறுபெண்களை போயஸ்கார்டன் வீட்டுக்கு வரவழைச்சு இருந்தார், ரஜினி. என்னை தனியே அழைத்தார் ' கலைஞானம் சார், இங்கே இருக்குற ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா தயாரிப்பாளராக்கி நான் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. ஆனா இப்போ இருக்குற நிலையில சாத்தியமில்லே. அதனால நான் நடிக்கப்போற 'அருணாச்சலம்' படத்துல கிடைக்குற லாபத்துல இவங்க எல்லாருக்கும் ஒரு தொகைய பங்கு தர நினைக்கறேன். அதனால உங்களோட இவங்களையும் தயாரிப்பாளரா ஒண்ணா சேர்த்துக்குங்க...' என்று சொன்னார்.

ட்ரங்க் பெட்டியில் பணம்...

நானே பார்த்து பார்த்து ஸ்டோரி, டயலாக் எழுதுற வசனகர்த்தா. அப்படிப்பட்ட நான் அவரது அர்த்தம் பொதிந்த வார்த்தை கூர்மையை பார்த்து நெகிழ்ந்து போனேன் 'அருணாச்சலம்' படம் ஏப்ரல் மாசம் ரிலீஸ்னு அறிவிப்பு வந்துச்சு. அதுக்கு ரெண்டுநாள் முன்னாடி எங்க எல்லாரையும் முன்னாடி கூப்பிட்ட மாதிரியே ஒரே நேரத்துல போயஸ் கார்டன் வீட்டுக்கு கார் எடுத்துட்டு வரச்சொன்னார். 

வீட்டுக்குள் இருந்த அறையில வரிசையா ட்ரங்க் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். பெட்டிமேல் ஒவ்வொருத்தர் பெயரையும் பளிச்னு எழுதியிருந்தார். வி.கே.ராமசாமி, பண்டரிபாய், என்னை இப்படி எல்லோரையும் ஒவ்வொருத்தரா அழைச்சார் ' நான் உங்ககிட்ட குறிப்பிட்டுச் சொன்ன தொகையவிட டபுள் மடங்கு பணம் இதுல இருக்கு... ஹேப்பியா...'னு அவரோட பாணியில கேட்டார், ரஜினி. 

நாங்க எல்லாரும் கண்கலங்கி ரஜினியோட பெரிய மனசைப் பார்த்து ஆடிப்போயிட்டோம்.

ரஜினி டிக் பண்ணிய லிஸ்ட்... 

இந்த வருஷம் கடந்த மார்ச் மாசம் ஆரம்பத்துல இருந்தே அவருக்கு உடம்பு சரியில்லை. 'எப்பவும் சுறுசுறுப்பா ஃபாஸ்ட்டா இருக்கிறவர் திடீர்னு டல்லா இருக்காரே...'ன்னு ஃபீல் பண்ணியிருக்கார், லதா. 'மனசுக்குள்ளே ஏதோ கவலைய சுமந்துக்கிட்டு இருக்கார். மனம்விட்டு பேசக்கூடிய பழைய சினிமா ஆட்களை ஒண்ணா வீட்டுக்கு அழைச்சா கலகலன்னு குழந்தையா மாறி சிரிச்சுடுவார்னு நினைச்சிருக்காங்க.

ரஜினிக்கு நெருக்கமான பிடிச்சவங்க லிஸ்ட்டை பார்த்து... பார்த்து லதா தயார் செய்து இருக்காங்க. அந்த பட்டியல ஒருநாள் ரஜினிகிட்டே காட்டி இருக்காங்க. அந்த லிஸ்ட்ல ரஜினி டிக் பண்ணின ஆட்களை மட்டும் செலக்ட் செய்து இருக்காங்க.

போன் செய்த லதா...

மார்ச் மாசம் 18 அன்னிக்கு திடீர்னு லதாகிட்டே இருந்து போன் வந்துச்சு 'அப்பா.. அவர் உங்களை சந்திக்கணும்னு ஆசைப்படுறார். அதனால நாளைக்கு மறக்காம வீட்டுக்கு வாங்க'னு சொன்னார். நானும் மறுநாள் மறக்காம போயஸ் கார்டன் போனேன். 

ரஜினி மனசுக்கு பிடிச்ச... அவரோட நெருங்கி பழகின பழைய ஆட்களான பஞ்சு அருணாச்சலம், டி.எம்.சௌந்தர்ராஜன், வாலி, மகேந்திரன் எல்லாம் குழுமி இருந்தாங்க. எல்லாரிடமும் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பச்சைக்குழந்தை மாதிரி சிரிச்சுக்கிட்டே இருந்தார், ரஜினி. 

ஐஸ்வர்யா, சௌந்தர்யாகிட்டே எங்க எல்லாரையும் ஒவ்வொருத்தரா அறிமுகம் செஞ்சாங்க, லதா. மதியம் தடபுடலா நடந்த விருந்துல எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம். ஒவ்வொருத்தர் இலையையும் பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து பதார்த்தத்தை பரிமாறுனாங்க, லதா. 

'ராணா' பூஜை...

கடந்த மே மாசம் 5-ம்தேதி ராத்திரி திடீர்னு ரஜினிகிட்டே இருந்து போன், ' சார் நான் ரஜினி பேசுறேன்... எப்படி இருக்கீங்க. நாளைக்கு காலைல 'ராணா' படத்தோட பூஜை. நிறைய பேருக்கு சொல்லலை. கொஞ்சம் ஆளுங்களுக்கு மாத்திரம் சொல்லி இருக்கேன். அதுல நீங்க ஒருத்தர். அதனால மறக்காம வந்துடுங்க'னு சொன்னார்.

மறுநாள் 'ராணா' பூஜை நடந்த ஏ.வி.எம் ஸ்டுடியோ போனேன். வழக்கமா ரஜினிகிட்ட எப்பவும் ஒரு துறுதுறு துள்ளல் இயற்கையா இருக்கும். அது 'ராணா' பூஜையில மிஸ்ஸிங். ரொம்ப டயர்டா இருந்தார். முகத்துல எந்தவித எக்ஸ்பிரஷனும் காட்டாம போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரஜினிக்கு என்னாச்சு..? 

திடீரென்று பூஜையில் இருந்த யாரிடமும் எதுவும் சொல்லாமல், கொள்ளாமல் தன்னோட மேக்கப் ரூமுக்கு ஒடிப்போயிட்டார். 

ரஜினிக்கு என்னாச்சு? என்று யோசித்தபடி நானும் அவர் பின்னாடியே போனேன். அறையில் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். பாத்ரூம் போயிட்டு வெளியில வந்தவர், ரொம்ப டயர்டா இருந்தார். நான் ஒடிப்போய் குசலம் விசாரிச்சேன் 'ஒண்ணுமில்லே சரியாயிடும்'னு சிரிச்சார். அவர் மனசை மாற்றும் விதமா, நான் கையில் கொண்டு போயிருந்த மலர் கிரீடத்தை தலையில் பொருத்தினேன். 'இதெல்லாம் எதுக்கு வேணாமே'னு தயங்கினார். பின்னர் சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு நடந்தது நாட்டுக்கே தெரியும். நான் 'பைரவி'யில் பார்த்த ரஜினியை மறுபடியும் 'கோச்சடையன்' படத்துல பார்க்க ஆசையா காத்திருக்கேன்.

கலங்கிய ரஜினி...

ரஜினி ஒரு அபூர்வமான பிறவி. தன்னோட எதிரிக்குகூட எந்த துன்பமும் வரக்கூடது, அவங்க நல்லாயிருக்கனும்னு பிரார்த்தனை செய்கிற பெரிய மனசுக்காரர். ஒருதடவை காவிரி பிரச்னை தமிழ்நாட்டுல தலைவிரிச்சு ஆடுச்சு. அந்த சமயத்துல ரஜினியபத்தி ஆளாளுக்கு விமர்சனம் செஞ்சாங்க. அப்போ ' தமிழ்நாட்டுல இருக்குறவங்க என்னை கன்னடன்னு கோபமா திட்டுறீங்க... கர்நாடகம் போனா என்னை மராட்டியன்னு மோசமா ஏசுறாங்க... மகராஷ்ட்ரா போனா நீ ஒரு சவுத் இந்தியன்னு சபிக்குறாங்க... நான் எங்கேதான் போவேன்' என்று கதிகலங்கி கண்கலங்கி ரஜினி பேசுனது காட்சி அப்படியே என் கண்ணுல நிக்குது.'' என்று கலங்கினார், கலைஞானம்.