Saturday, November 26, 2011

சன் டிவியின் GRP , TRP தகிடுதத்தம்

சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.

பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?

ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.

இது எப்படி எனில்,

சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.
சேனல் A, 

10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல் 

டீஆர்பி = 8*10=80%

இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.

உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1

GRP =8*1*10=80 % என்றே வரும்.

சேனல் B :

10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,

டீஆர்பி= 4*10=40%

துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2

GRP =4*2*10=80% என வரும்.

8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!

அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.

TRP= TARGET (TELEVISION) RATING POINT,

GRP= GROSS RATING POINT

இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.

பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.

வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.

இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.

கமல் அசத்திய 10 படங்கள் - கமல் பைத்தியங்களுக்கு சமர்ப்பணம்

களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர், 1973 முதல் (அரங்கேற்றம்) - இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமமான காரியம் தான்.


இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite. இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க, உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக். 

2. நாயகன்

கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 

படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார். நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது. 

3. அபூர்வ சகோதரர்கள்

ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி. கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.

4. தேவர் மகன் 

இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல் எந்த காட்சியும் இருக்காது. சிவாஜி, ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.

5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 

கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!

ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 

7. மகா நதி 

நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது. இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 

இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 

" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)

8. பேசும் படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 

அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்). நீங்கள் இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும். 

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்! டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல் மதன காமராஜன் 
மூன்றாம் பிறை 

சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்! நன்றி !!

ரஜினி நடிக்கும் ராணா - காமெடி கும்மி

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்


.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?

ரஜினியோட புதுப்படம் ராணா ஷூட்டிங்க் ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.
--------------------------------------------------------------------------------------

2. ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.

அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)

--------------------------------------------------

3. ரஜினி ரசிகர்களிலேயே நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?

ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,
-----------------------------------------------------

4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும் ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?

-------------------------------------------------------------

5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.
--------------------------------------------------


6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.

அப்படியா? என்ன பஞ்ச்?

என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...
------------------------------------

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?


அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன் கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.
---------------------------------------------------

8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?

அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்தராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.

-------------------------------------------------------

9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?

அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...

----------------------------------------------

10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?


தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.

பஸ் கட்டண உயர்வும் பதிவு செய்யப்பட வேண்டிய உணர்வுகளும்!

சம்பவம் 1:


சென்னை - ராயப்பேட்டை மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.. எண் 13 பஸ்சில் ஏறினார், ஒரு நடுத்தர வயதுப் பெண். ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, தாம் இறங்கும் நிறுத்ததைச் சொல்லி டிக்கெட் கேட்டார். '9 ரூபா குடும்மா' என்றார் கண்டக்டர். 'பஸ்சை நிறுத்துங்க.. உங்ககிட்ட 9 ரூபா குடுக்குறதுக்கு நடந்தே போய்க்கிறேன்,' என்றார் சத்தமாக. அடுத்த நிறுத்தமான உட்லண்ஸ் தியேட்டரில் பஸ் நின்றது. விறுவிறுவென இறங்கிச் சென்ற அந்தப் பெண்ணைக் கண்ட சக பயணிகளிடையே நிசப்தம். முணு முணுப்புகள் தொடங்க சில நொடிகள் ஆனது.

சம்பவம் 2:
கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்த தினம். மாலை 6 மணியளவில் 27டி-யில் ஒரு துப்புறவு தொழிலாளி ஏறினார். காசை நீட்டி, ஸ்டாப் பெயர் சொல்லி டிக்கெட் கேட்டார். டிக்கெட்டை கொடுத்த கண்டக்டர், '11 ரூபாய் கொடுப்பா' என்றார். அதிர்ச்சியுற்ற அந்தத் தொழிலாளி 'இன்னாப்பா இவ்ளோ கேட்குற?' என்று கேட்டபோது, கண்டக்டர் நிதானமாக விளக்கினார். "இன்னாப்பா அநியாயமா இருக்கு. இந்தா இதப்புடி. நாளைக்கு மீதி தர்றேன்," என்று தனக்கு நன்கு தெரிந்த ரூட் கண்டக்டரிடம் உரிமையுடன் கடன் சொன்னார், அந்தத் தொழிலாளி. 

அண்மைக்காலமாக இதுபோன்ற நிகழ்வுகளை பேருந்தில் பயணிக்கும் பலரும் தினம் தினம் கடந்து வருகிறோம். 

கட்டையாகப் பிறப்பதற்கு என்ன காரணம் ?

ஒருவரது கட்டைத் தன்மைக்குக் காரணம் அவரது மரபணுக்களின் போதாமை தான் என ஓர் ஆய்வு கூறுகின்றது. உயரமென்பது குடும்பங்களில் வழிவழியாகத் தோன்றும் ஒரு மரபணு விடயம். ஒருவரின் உயரத்தில் வேறுபாடு இருப்பதற்கு 10 வீதமான குறிப்பிட்ட மரபணுவின் அம்சங்களையே இதுவரை விஞ்ஞானிகள் காரணங்காட்டி வந்தனர்.

ஆனால் மரபணுக்களின் அல்லது DNA இன் வேறு பிரிவுகளின் தவறவிடப்பட்ட விடயங்கள்தான் ஒருவரது உயரத்தில் அரைவாசியளவு தாக்கம் விளைவிக்கின்றன என ஆய்வாளர்கள் தற்போது நம்புகின்றனர்.

மரபணு அசாதாரண நிலைகளே இவ்வாறான மாற்றங்களைக் குறோமோசோம்களிற்கிடையில் செய்கின்றன.

இந்த குறோமோசோம்களில் தான் எங்களது மரபு இணைப்பைக் கொண்டுள்ள அமிலமான DNA இன் ஒன்று அல்லது பல பிரதிகள் காணப்படும்.

சில இடங்களில் இது குறோமோசோம்களிற்கு இடையிலேயே ஒரு தொடர்பினை ஏற்படுத்திவிடும்.

ஆனால் சிலவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மரபணுப் பிரதிகளின் ஒரு பகுதி அல்லது அதன் முழுப்பிரதியுமே தவறப்பட்டுவிடலாம் அல்லது அதனைப் போன்ற இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிடலாம்.

சில மரபணு அசாதாரண நிலைகள் பொதுவானவையாக இருந்தாலும் ஏனையவவை குறிப்பிட்டளவு பேரில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.

இவ்வாறான வழமைக்குமாறான அசாதாரண மரபணு மாற்றங்கள் அழிந்த நிலையிலுள்ளவர்களில் மரபணுவின் ஒரு பாகமும் தவறுப்பட்டுவிடும். இவர்கள் தான் உருவத்தில் கட்டையாக வருகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அனைவரிலும் இவ்வாறான சில நூற்றுக்கணக்கான தனித்தனியான மரபணுக்கள் அழிந்த நிலை இருந்தாலும் கட்டையானவர்களில் பல மில்லியன் கணக்கானவை காணப்படுமென்றனர்.

ஒவ்வொரு மில்லியன் அழிவுகளும் ஒருவரின் உயரத்தில் 1/8 அங்குலத்தைக் குறைக்கின்றதென 12,000 பேரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளைக் கொண்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

மரங்களுக்கு மரணதண்டனை கொடுக்கும் மாநகராட்சி...!



இந்த இரண்டு புகைப்படங்களையும் பாருங்கள்... முதல் படம், 2008-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அடுத்தப் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டுமே கோயம்புத்தூரிலிருக்கும் அவினாசி சாலைதான். 'எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்' என்று சொல்வது போல் இருக்கிறதல்லவா!

ஆம்... மேடை ஏறினால்... 'மரம் வளர்ப்போம்...' என்று வாய்கிழிய கதறும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும், கீழே இறங்கியதுமே கோடரியைத்தான் கையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். 'நான்கு வழிச் சாலை', 'ஆறு வழிச் சாலை', 'சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்றெல்லாம் ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொண்டு... மரங்களைக் கபளீகரம் செய்வது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
இதோ... 'பட்டுப்போன மரங்கள்’ என்று காரணம் காட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல நூறு மரங்களை சமீபத்தில் வெட்டிச் சாய்த்திருகிறார்கள். இந்த விஷயம் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொதிக்க வைக்கவே... வீதியில் இறங்கி போர்க்குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பசுமை இயக்க அமைப்பாளர் 'கோவை’ மோகன்ராஜ், ''பத்து வருஷத்துக்கு முன்ன கோயம்புத்தூர் மாநகரத்துல பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், அரசாங்க அலுவலகங்கள், சாலைகள்னு எல்லா இடத்துலயும் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்துது. வேம்பு, புளி, வாகை, வேங்கை, அரசு, ஆல், பூவரசுனு குளுமை தர்ற மரங்கள்தான் அத்தனையும். அதுல 70% மரங்கள் இப்போ இல்ல. கொஞ்சம் கொஞ்சமா வெட்டி சாய்ச்சுக்கிட்டே இருக்காங்க.

கொஞ்சநாளைக்கு முன்னதான் அவினாசி ரோட்டை அகலப்படுத்துறதுக்காக ஏகப்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறைக்காரங்க வெட்டினாங்க. மின்சார வாரியத்துக்காரங்களும் தங்களோட பங்குக்கு ஏகப்பட்ட மரங்களைக் காலி பண்ணியிருக்காங்க. கிளைகளை மட்டும் வெட்டத்தான் மின்வாரியத்துக்கு அனுமதி இருக்கு. ஆனா, மரத்தையே காலி பண்ணிடறாங்க.

இப்படி ஆளாளுக்கு வெட்டி... மொத்த ஊரையும் மொட்டையடிச்சுட்டாங்க. இந்த நிலையில மாநகராட்சிக்காரங்களும், 'பட்டுப்போன மரத்தை வெட்டுறோம்’னு சொல்லிக்கிட்டு கோடரியோட வலம் வர்றாங்க. நல்லா இருக்குற மரங்களையும்கூட வெட்டி எடுத்துக்கிட்டுப் போறாங்க'' என்று ஆதங்கப்பட்டார்.

கோவை நீர் நிலைகள் பாதுகாப்பு அமைப்பின் செயலர் சிவகுமார், ''பொது இடங்கள்ல இருக்குற மரத்தை வெட்டணும்னா... கோட்டாட்சியர்கிட்ட அனுமதி வாங்கணும். ஆனா, கோயம்புத்தூர்ல யாருமே அதைக் கடைபிடிக்கிறதே கிடையாது. கலெக்டர் ஆபீஸுக்குள்ள இருந்த ஏகப்பட்ட மரங்களை காரணமே இல்லாம வெட்டியிருக்காங்க. அதுல 100 வயசான பழைய மரமெல்லாம் காலியாகிடுச்சு. அதேமாதிரி பிருந்தாவன் பூங்காவில் இருந்த மரங்களையும் அவசியமே இல்லாம மாநகராட்சிக்காரங்க வெட்டிட்டாங்க. இதுபத்தியெல்லாம் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கலை.

பெங்களூரு, புனே மாதிரியான பெரிய நகரங்கள்ல 'மர பொறுப்பு உரிமைக் குழு’ (ட்ரீ அத்தாரிட்டி கமிட்டி) அமைச்சிருக்காங்க. அதுல வனத்துறை, காவல்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களெல்லாம் உறுப்பினரா இருக்காங்க. யார் மரத்தை வெட்டினாலும் சரி, இந்தக் குழுகிட்ட அனுமதி வாங்கித்தான் வெட்ட முடியும். தகுந்த காரணத்தைச் சொன்னாத்தான் அனுமதி கிடைக்கும். அதுமாதிரி கோயம்புத்தூர்ல மட்டுமில்ல... தமிழ்நாட்டுல இருக்கற எல்லா நகரங்கள்லயும் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும். அப்போதான்... இருக்குற மரங்களையாவது காப்பாத்த முடியும்'' என்ற அருமையான யோசனையை முன் வைத்தார்.

இதைப் பற்றியெல்லாம் மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ''பட்டுப்போன மரங்கள் மட்டும்தான் வெட்டப்படுகின்றன. நன்றாக இருக்கும் மரங்களை வெட்டுவது கிடையாது. தேவையில்லாமல் இதுபோல பிரச்னைகளைக் கிளப்புகிறார்கள். அவர்களைவிட இந்த ஊர் மீதும்... இங்குள்ள மரங்கள் மீதும் நூறு மடங்கு அக்கறை எங்களுக்கும் இருக்கிறது'' என்றார்.

ஆனால், செயலில்தான் அந்த அக்கறை வெளிப்படுவதே இல்லை!

DAM 999 டவுன்லோட் செய்ய

DAM 999 டவுன்லோட்  செய்ய கீழே

லிங்க் தரப்பட்டுள்ளது.