Friday, November 11, 2011

போதி தர்மர் பற்றி சீனத் திரைப்படம்! (வீடியோ)

"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர்.

அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்கள் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

நேற்று டெல்லியில் மட்டும் 20 ஆயிரம் திருமணங்கள்

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தினம் என 11.11.11 ஆம் தேதியைக் கருதியதாலும், பெரும்பாலான ஜோதிடர்களும் இன்றைய தினத்தை மிகவும் சாதகமான நாள் என்று கூறியதாலும், டெல்லியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் ஒரே நாளில் நடந்தன.



இந்தத் திருமணங்களுக்கு டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வந்ததால், டெல்லி நகரமே இன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது.

பெரும்பாலான மக்கள் முன்னமேயே புரோகிதர்களை ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் பற்றாக்குறை காரணமாக, ஹரித்வார், ரிஷிகேஷ், குருக்ஷேத்ரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டனர்.
திருமணம்தான் என்றில்லை. இந்த தினத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் கூட நிறையப் பேர் ஆர்வம் காட்டினர்.

தில்லியின் ஒரு தனியார் மருத்துவமனை அதிகாரி கூறும்போது, இன்று ஒரே நாளில் எங்கள் மருத்துவமனையில் 50 குழந்தைகள் பிறந்திருக்கும் என்றார்.

ஆனால், தில்லியைச் சேர்ந்த ஒரு ஜோதிடர் விவேக் சோப்ரா இதை சுத்த முட்டாள்தனம் என்று கூறியிருக்கிறார். இன்றைய தினத்தில் கோள்களில் இயக்கத்தில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது ஒரு சாதகமான நாள் என்றெல்லாம் கூறி இவ்வாறு முட்டாள்தனமான செயல்களில் மக்கள் ஈடுபட்டுள்ளது மிகத் தவறு.

இந்த தேதி, கூறுவதற்கு கவர்ச்சிகரமாக இருப்பதால் வேண்டுமானால் இவ்வாறு மக்கள் திருமணம், குழந்தைப் பேறு உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டினர் என்று சொல்லுங்கள். ஆனால், ஜோதிடப்படி சாதகமான நாள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று வாதிட்டார்.

பேஸ்புக் இணையதளத்தில் சி.பி.ஐ புகுந்துள்ளது

பிரசித்தி பெற்ற சமூக வலைப்பின்னலான பேஸ்புக் இணையதளத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) போபால் அலுவலகம் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு தொடங்கியதன் மூலம் வழக்குகள் சம்பந்தமாக பொதுமக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள அது திட்டமிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறையின் போபால் அலுவலகம் பேஸ்புக்கில் கணக்கைத் தொடங்கியுள்ளது.

போபாலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெறும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். வழக்குகள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை மக்கள் இதன் மூலம் நேரடியாக தெரிவிக்கலாம். அண்மையில் போபாலில் ஷெஹ்லா மசூத் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மக்கள் பல பயனுள்ள தகவல்களை அளித்ததாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Thursday, November 10, 2011

பெண்ணின் அங்கங்களை வெட்டி உண்ட வங்கி ஊழியர்கள்

சில மனிதர்களின் எண்ணங்கள் ஆசைகள் வியப்பூட்டுபவையாகவோ அல்லது அதிர்ச்சி தருபவையாகவோ இருக்கும் என்பது நான் கற்ற உளவியல் எனக்கு சொல்லித்தந்த பாடம்.மற்றவர்களின் கவனத்தை தன் மீது ஈர்க்க சிறு பிள்ளைகள் சக பிள்ளையை அடிப்பது அல்லது அழுவது போன்ற செயல்களும் இதற்குள் அடங்கும்.



ஆனால் பெரியவர்கள் அதுவும் பொதுத்துறையில் உள்ள ஒருவர் மற்றவர்களை கவர்வதற்காக தன் வங்கி அலுவலகத்தில் வைத்து பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டி உண்பதென்பதை உங்களால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?


இந்த முகஞ்சுழிக்கும் செயல் குறித்த வங்கி ஊழியரின் பிறந்த நாளில் நடந்திருப்பது வேறு. இந்த பிறந்த நாள் விழாவில் குறித்த வங்கியின் பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்ததை நாம் எவ்வாறு பார்ப்பது?

சரி இதெல்லாம் எங்கேயோ மேற்கத்தைய நாட்டில் அரங்கேறியிருக்கும் என தப்புக் கணக்கை மட்டும் போட்டு விடாதீர்கள்.எல்லாம் இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பில் அரங்கேறியுள்ளது.

குறித்த ஊழியர் பெண்'கள் தொடர்பாக கொண்டிருக்கும் வக்கிர மனநிலையை நாம் இதன் ஊடாக அறியலாமல்லவா? நமக்கு புரியும் இந்த விசயம் ஏன் சக பெண்பணியாளர்களுக்கு புரியவில்லை? இவ்வாறான வக்கிர மனநிலை உள்ள ஊழியரை குறித்த தனியார் வங்கி ஏன் இன்னும் வேலையில் வைத்துள்ளது?

இவ்வாறான பெண்களை அவமதிக்கும் செயல்களை பெண்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் ஏன் எதிர்க்கவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

இலங்கையில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் பேணப்பட்டு வந்த இலங்கைக்கே உரித்தான பெண்களை மதிக்கும் கலாச்சாரம் போரின் பின்னர் விற்கப்பட்டு விட்டதா? இதை இலங்கை மக்கள் எவ்வாறு ஜீரணிக்கிறார்கள்? இவ்வாறானவர்களால் வங்கிகளில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு ஆபத்தாக உள்ளதா?

என்று பல கேள்விகளை நம்முன் எழுப்பியுள்ள இந்த சம்பவத்தில் வெட்டப்பட்டது பெண்ணின் அந்தரங்க உறுப்பு வடிவிலான் கேக். பிறந்த நாளுக்கு கேக் செய்ய வேறு டிசைன்கள் எவ்வளவோ இருந்தும் ஆபாசமான வடிவில் செய்யப்பட்ட கேக் வெட்டப்பட்டதை சாதாரண விசயமாக நாம் பார்த்து விட முடியாது.

மேலே உள்ள படத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட குழுப்படத்தில் அவர்களின் கைகள் எங்குள்ளது என்பதை அம்புக்குறியால் காட்டியுள்ளேன்.அதை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். குறித்த கேக்கின் படங்கள் கீழே தரப்படுகிறது.







படங்கள்: தமிழ் சி.என்.என்

உப்பு போட்டா போதும்.. கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் 6 மடங்கு அதிகரிக்கும்


கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.

ஐஸ்வர்யாராய்க்கு பிரசவம்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது. இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.
பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, November 9, 2011

தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா

தமிழ் மொழி வரலாறு – தமிழன்

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.