Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts

Monday, November 14, 2011

பார்வைக்கு இனி கண் வேண்டாம். நாக்கே போதும்.

கண்களால் பார்க்க முடியாதவர்களை நாக்கின் மூலமாகப் பார்க்க வைக்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.


அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஆய்வுக் குழு ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியின் மூலம் கண்பார்வையற்ற ஒருவர் பார்க்க முடியும்.



இந்தக் கருவி எப்படி இயங்குகிறது?

பார்வையற்றவர்கள் கறுப்புக் கண்ணாடி ஒன்றை அணிய வேண்டும் அந்தக் கறுப்புக் கண்ணாடியில் ஒரு மிகச் சிறிய வீடியோ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பார்வையற்றவர் பார்க்கும் திசையில் உள்ள காட்சிகள் வீடியோ கேமராவில் பதிகின்றன.

அந்தக் காட்சிகள் செல்போன் அளவே உள்ள கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுக் கருவிக்கு அனுப்பப்படுகின்றன.

வீடியோ கேமராவிலிருந்து அனுப்பப்பட்ட டிஜிட்டல் சிக்னல்கள் இந்தக் கருவியில் மின்னதிர்வுகளாக மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்பட்ட மின்னதிர்வுகள் லொலிபாப் மிட்டாய் வடிவில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கருவிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த லொலிபாப் வடிவ கருவியை வாயில் வைத்தால் அந்தக் கருவியிலிருந்து சிக்னல்கள் நாக்கில் பட்டு மூளைக்குச் செல்கின்றன. மூளை அந்தச் சிக்னல்களிலிருந்து காட்சிகளைப் பார்க்கிறது.

Thursday, November 10, 2011

உப்பு போட்டா போதும்.. கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் 6 மடங்கு அதிகரிக்கும்


கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.

Tuesday, November 1, 2011

பென் டிரைவ் மூலம் நம்முடைய கம்ப்யூட்டரை லாக் செய்யலாம்

நம்முடைய கம்ப்யூட்டரை லாக் செய்திட பல வகையான மென்பொருட்கள் இருந்தாலும், இப்படி ஓன்று இருப்பது அநேகமாக யாருக்கும் தெரியாது. 

யு எஸ் பி கணினியில் செருகியிருந்தால் மட்டுமே நம்முடைய கணினி வேலை செய்யும். அதை எடுத்து விட்டால் தானாகவே லாக் ஆகி விடும். அதுவும் எவ்வித ப்ரோக்ராம்களும் இழக்கமலேயே,

இது மிகவும் எளிதானதும், அனைத்து விண்டோஸ் களிலும் வேலை செய்யகூடியதுமாகும்.

இதற்கு தான் PREDATOR என்னும் மென்பொருள் இருக்கிறது. 

முதலில் இந்த சைட்டில் சென்று இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.  பின்னர் உங்கள் யு எஸ் பி யை கணினியில் செருகவும். இன்ஸ்டால் முடிந்த பின்னர் கீழே உள்ளது போல் ஒரு பெட்டி திறந்து கொள்ளும். அதை ஓகே கொடுக்கவும். 

இப்போது கீழே காணப்படுவது போல் மீண்டும் ஒரு பெட்டி திறக்கும்.அதில் உங்களுடைய புதிய பாஸ்வோர்ட் கொடுத்து க்ரியேட் கீ கொடுத்து ஓகே செய்யவும். 


இப்போது அந்த பெட்டி தானாகவே மூடிக்கொள்ளும். மீஎண்டும் சாப்த்வாரே ஐக்கனில் கிளிக் செய்தால், உங்கள் டாஸ்க் பாரில் கீழே காணப்படுவது போல் ஒரு சிறிய ஐக்கன் பச்சை நிறத்தில் உள்ளதை பார்க்கலாம். 


அதுக்கப்புறம்தான் எல்லாம் உங்களுக்கே தெரியுமே. 




Thursday, October 27, 2011

பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உபயோகமான டூல்

FaceBook இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும் போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன.

இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப்படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது.

இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக் கொண்டால் போதும். நீங்கள் பார்க்க விரும்பும் படங்களை பெரிதாக்கி பார்க்கலாம்.