Thursday, November 10, 2011

உப்பு போட்டா போதும்.. கம்ப்யூட்டர் டிஸ்க் சைஸ் 6 மடங்கு அதிகரிக்கும்


கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.





இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.

No comments:

Post a Comment