Sunday, April 24, 2011

முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் ‘புதிய முகம்’


 உலகிலேயே முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக ஒரு நபருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெவ்வேறு நபர்களின் முக திசுக்கள், தோல், மூக்கு, உதடு, கன்னம் ஆகியவற்றை தானம் பெற்று, இந்த நபருக்கு பொருத்தி சாதனை படைத்துள் ளனர், ஸ்பெயின் டாக்டர்கள். பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நாம் அதிகமாகவே கேள்விப்பட்டுள் ளோம். குறிப்பாக, திரையுலகில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வோர் அதிகம். முகத்தில் உள்ள மூக்கு உள்ளிட்ட ஏதாவது உறுப்பின் அமைப்பு, தங்களுக்கு பிடிக்கவில்லை எனில், நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, அவற்றின் அமைப்பை சரிசெய்து கொள்வது வழக்கம். விபத்தில் அல்லது பேராபத் தில் சிக்கி, முகம் சிதைந்து போனால், முகமே விகாரமாகி விடும். விகாரத்தை மறைத்து, மீண்டும் முழுத் தோலுடன் முகத்தை மீட்பதற்கென, ‘முக மாற்று அறுவை சிகிச்சை’ செய்யப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான், இந்த முகமாற்று அறுவை சிகிச்சைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
கடந்த 2005ல் பிரான்சைச் சேர்ந்த இசபெல்லா (38) என்ற பெண், அவருடைய செல்ல நாய்க் குட்டியை அளவுக்கு அதிகமாக கொஞ்சியதாலோ என்னவோ, அந்த நாய் அவருடைய முகத்தை கடித்துக் குதறி ஒரு வழியாக்கி விட்டது. முகத்தின் ஒரு பக்கம், விகாரமாகி விட்டது. சிதைந்து போன பகுதியைச் சீராக்க, அவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பின், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நடந்தன.


தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, முழு முகத்தையும் மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர், மிகவும் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். அவரது முகத்தில் பலமாக அடிபட்டது. முகத்தின் அமைப்பு, முழுவதுமாக மாறி விட்டது. வாய் கோணலாகி, வித்தியாசமாக காட்சி அளித்தது. பற்களையும் காணவில்லை. மூக்கு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. அந்த இடத்தில் ஒரு சிறிய துளை மட்டுமே இருந்தது. அதன் பின், அவரால் மூச்சு விட முடியவில்லை; உணவு உண்ண முடியவில்லை; பேச முடியவில்லை. இதையடுத்து, டாக்டர் களை அணுகிய இந்த நபர், சிறிய அளவிலான முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற் கொண்டார். பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அங் குள்ள, வால் டி ஹெப்ரோன் என்ற மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் முகமாற்று அறுவை சிகிச்சை நடந்தது. 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், தொடர்ந்து 22 மணி நேரம் போராடி, அவரது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண் டனர். அடையாளம் காட்டப்படாத ஒரு நபரிடமிருந்து தானம் பெற்ற முகத் திசுக்கள், மூக்கு, தாடை, பற்கள், கன்னத்தில் உள்ள எலும்புகள், தோல் ஆகியவை இவருக்கு பொருத்தப் பட்டன. பற்கள், கன்ன எலும்புகள் ஆகியவற்றை தாங்கி நிற்பதற்காக சிறிய உலோகத் தகடுகளும் அவரது முகத்தில் பொருத்தப்பட்டன. அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டபோது, உறுப்புகளை தானம் கொடுத்தவரின் முகம் போல், இவருக்கு அமைந்து விடக் கூடாது என்பதில், டாக்டர்கள் கவனமாக இருந்தனர். அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரம் அவர் ஓய்வில் இருந்தார். பின், டாக்டர்கள், கண்ணாடியில் அவரது முகத்தை காட்டினர். அதில் தனது புதிய முகத்தை பார்த்த அந்த நபர், மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘அறுவை சிகிச்சைக்கு முன், அவரது நெற்றி, கழுத்து ஆகிய இடங் களில் பெரிய தழும்புகள் இருந்தன. தற்போது அதற்கான தடயமே இல்லை’ என்றார். ஸ்பெயினில் நடந்துள்ள இந்த முழுமையான முதல் முகமாற்று அறுவை சிகிச்சை, மருத்துவத் துறையில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா?வேண்டாம் விபரீதம்!

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? ஒரு நாளைக்கு சராசரியாக 100 முறைக்கு மேல், விரல்களால், ‘டைப்’ அடித்து எஸ்.எம்.எஸ்., அனுப்புபவரா?
அப்படியானால், முதலில் விழிச்சுக்குங்க… வேண்டாம் விபரீதம்! இதே எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ்., செய்த அமெரிக்க பள்ளிச் சிறுமி, ஆனீஸ் லெவிட்சுக்கு மணிக்கட்டு மரத்துப்போய், கடைசியில், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கையில் பிடிக்கவே முடியாமல் போய் விட்டது.
உங்களுக்கு மட்டுமல்ல, இப்படி 100, ‘கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவோருக்கும், எஸ்.எம்.எஸ்., பார்ப்போருக்கும் கோளாறு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
இந்த பாதிப்புக்கு, ‘கார்பல் டன்னல் சின்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டரில், கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி வேலை செய்வோருக்கும், அதிகமாக, ‘மவுஸ்’ பிடித்து வேலை செய்வோருக்கும் இந்த கோளாறு வரும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவராக இருந்தால், இந்த அனுபவம் புரியும். எப்போதும் கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி, ‘டைப்’ செய்தும், ‘மவுஸ்’ பிடித்தும் கொண்டிருந்தால், கை விரல்களில் உள்ள நரம்புகள் பாதிக்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
முழங்கையில் இருந்து கை விரல்களில் நடுப்பகுதியில் ஒரு நரம்பு போகும். அதாவது, சாலையின் நடுவே எப்படி தடுப்பு போடப்பட்டுள்ளதோ, அப்படி இந்த நரம்பு போகும்.


அடிக்கடி கம்ப்யூட்டர், ‘மவுஸ்’ பிடிப்பதால், மொபைல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால் இந்த நரம்பு பலவீனம் அடையும். ரத்த ஓட்டம் பாதித்து, திடீரென மரத்துப் போகும். இதனால், கை விரல்களில் உணர்ச்சியே இருக்காது; அப்புறம், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கை விரல்களால் பிடிக்கவே முடியாமல் போய் விடும்.
இதற்கு தீர்வு என்ன? அறுவை சிகிச்சை ஒன்று தான். அறுவை சிகிச்சை செய்த பின், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டால், இந்த பிரச்னைகள் எல்லாம் வராது. மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் வரம்பு மீறும் போது, கை விரல்களில் ஒரு வித நமைச்சல் ஏற்படும். உள்ளங்கை அரிக்கும்; போகப் போக ஒரு வித தடிப்பு உணர்வு ஏற்படும். கடைசியில் உணர்ச்சியே இல்லாமல் போய் விடும். கை விரல்கள் ஏதோ சம்பந்தம் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை போல, எதற்கும் பயன்படாமல் போய்விடும்.
எஸ்.எம்.எஸ்., மூலம் கைவிரல் மரத்துப் போய், அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆனீஸ் லெவிட்ஸ் தன் அனுபவத்தை கூறுகிறார்:
எனக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., தருவது என்றால் மிகவும் பிடிக்கும். என் தோழிகள் எல்லாரும் தகவல் பரிமாறுவதே அதில் தான். போனில் பேசாமல், இப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தோம்.
நான் ஒரு நாளைக்கு 100,’கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்ப, விரல்களால், ‘டைப்’ செய்வேன். அப்படி செய்த நான், ஒரு நாள், காலை எழுந்ததும் கைவிரல்களில் ஒருவித நமைச்சல் காணப்பட்டது. போகப் போக, விரல்களில் உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டபோது, விரல்களில் சூடு பட்டும், எதுவும் உணர்வே தெரியவில்லை. டாக்டரிடம் காட்டியதற்கு, உடனே அறுவை சிகிச்சை செய்து, கை விரல் நரம்பில் உணர்ச்சியூட்ட முடியும் என்று கூறினார்.
அறுவை சிகிச்சை செய்த பிறகு தான், என்னால், மொபைல் போனை கைவிரல்களால் பிடிக்க முடிகிறது.
— இவ்வாறு கூறிய ஆனீசிடம், ‘இப்போது எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடிகிறதா?’ என்று கேட்டது தான் தாமதம், ‘எஸ்.எம்.எஸ்.,சா… அதை மறந்து ரொம்ப நாளாச்சு; எதுவாக இருந்தாலும், தோழிகளிடம் போனில் சில நொடிகள் பேசுவேன்…’ என்று, ‘பளீச்’சென சொன்னார்.
என்ன… நீங்க எஸ்.எம்.எஸ்., விரும்பியா? அப்படீன்னா, எச்சரிக்கையாக இருங்க!

40 கிலோ மொபைல் போன்!

இன்று, அனைவரது கை களிலும், சில மில்லி கிராம் எடையில், தவழும் மொபைல் போன்கள், ஆரம்ப காலத்தில், தூக்க முடியாத அளவிற்கு, “வெயிட்’டாக இருந்தது என்றால், நம்ப முடிகிறதா?

ஆரம்ப காலத்தில் டாக்சிகள், போலீஸ் வாக னங்கள், ஆம்புலன்ஸ்களில் மட்டுமே, “மொபைல் போன்’களின் முன்னோடியாக கருதப்படும், “ரேடியோ போன்கள்’ பொருத்தப்பட்டன; ஆனால், அவற்றில் இருந்து, பிற போன்களை தொடர்பு கொள்ள முடியாது.

“லார்ஸ் மேக்னஸ் எரிக்சன்’ என்பவர், தன் காரில் டெலிபோனை 1910ல் பொறுத்தினார். ஆனால், இது, “ரேடியோ போன்’ அல்ல. காரில் எங்காவது செல்வார்; டெலிபோன் இணைப்பு ஒயர்கள் இருக்கும் இடத்தில், தன் காரை நிறுத்தி, “நேஷனல் டெலிபோன் நெட்வொர்க்’ உடன் தொடர்பு கொண்டு, தான் பேச வேண்டிய இடத்திற்கு பேசுவார்.

ஐரோப்பாவில், பெர்லின்-ஹம்பர்க் நகரங்களுக்கிடையில் இயங்கிய பாசஞ்சர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில், ரேடியோ போன் 1926ல் அமைக்கப்பட்டது; அதே ஆண்டில், ஆகாய விமானங்களிலும் பொருத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் டேங்க்குகளிலும், 1950ம் வாக்கில், “ரைன்’ என்ற கப்பலிலும், ரேடியோ டெலிபோன்கள் பொருத்தப்பட்டன.

காரில் இருந்தபடியே மற்ற போன்களுக்கு தொடர்பு கொள்ளக் கூடிய வகையில், முழுமையான, “ரேடியோ போன்கள்’ 1956ல் ரஷ்ய இன்ஜினியர்கள் ஷாப்ரோ, சகார்ஷென்கோ ஆகியோர் கண்டுபிடித்தனர். இவற்றிலிந்து 20 கி.மீ., சுற்றளவில் தொடர்பு கொள்ள முடியும்.
தற்போதைய மொபைல் போன்களின் முன்னோடி, 1947ல் கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் எச் ரிங், ரே யெங், பெல் லேப்ஸ் ஆகிய இன்ஜினியர்கள், அறுகோண மொபைல் போன்களை வாகனங்களில் பொருத்தினர். இதற்காக, தனி டவர்களை அமைத்து, “சிக்னலை’ வாகனங்களில் பெறும் வகையில் வடிவமைத்திருந்தனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஜினியராக, லியோனிட் குப்ரியானோவிச், மாஸ்கோவில், போர்டபிள் மொபைல் போனை 1957ல் அமைத்தார். பின்னர் இது, “எல்கே-1 ரேடியோ போன்’ என்றழைக் கப்பட்டது. முன்னர் வடிவமைத்ததை விட, கையடக்கமான மொபைல் போனாக இருந்ததுடன், பிற போன்களை தொடர்பு கொள்ளும் டயலிங் வசதியும் இருந்தது. இதன் மொத்த எடை மூன்று கிலோ; 20 முதல் 30 முதல் கி.மீ., வரை, இதிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். தொடர்ந்து 30 மணி நேரம் பேச முடியும். 1958ல், பாக்கெட் சைஸ் மொபைல் போன்களை தயாரித்தார்; இதன் எடை 500 கிராமாக இருந்தது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 1950ல் மொபைல் போன்கள் வந்தன. எரிக்சன் உருவாக்கிய, “எம்.டி.ஏ., மொபைல் போன், 1956ல் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டது; இதன் எடை 40 கிலோ. பின்னர், 1965ல் ஒன்பது கிலோ எடையாக குறைக்கப்பட்டது. கார்களில் மட்டுமே பொருத்தப்பட்டதால், எடை ஒரு பிரச்னை யாக இருந்ததில்லை.
ஐரோப்பாவில் முதன் முதலில் மொபைல் போன் உபயோகித்தவர் என்ற பெருமையை இங்கிலாந்து மன்னர் பிலிப் பெற்றார். 1957ல் தன் ஆஸ்டன் மார்டின் காரில் பொருத்தி, மகாராணி யுடன் பேசு வதற்காக பயன்படுத்தினார். அப்போதே காதலியுடன் பேச, மொபைல் போன் பயன்பட்டுள்ளது!

நவீன மொபைல் போன்களுக்கான தொழில்நுட்பம் 1970ல் அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை கார்களில் மட்டுமே பொருத்தப்பட்ட மொபைல் போன்களை, கைகளில் எடுத்துச் செல்லும் வகையில், மோட்டராலோ கம்பெனி ஆராய்ச்சியாளர் மார்ட்டின் ஹூப்பர் உருவாக்கினார். முதல் அழைப்பை, ஏப்ரல் 3, 1973ல், தன் சக போட்டியாளர் களான ஜோயல் ஏஞ்சல் மற்றும் பெல் லேப்ஸ் ஆகியோரிடம் பேசினார்.
பொதுமக்கள் பயன் பாட்டிற்கான முதல் ஜென ரேஷன் (1ஜி) மொபைல் போன் 1979ல் ஜப்பானில், என்.டி.டி., நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் பின், படிப்படியாக, மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பரவி, தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று கம்ப்யூட்டரையே கையில் கொண்டு சேர்க்கும் சாதனமாக, பிர மாண்ட வளர்ச்சி பெற்றுள் ளது.
இன்று, மொபைல் போனில் சினிமா பார்க் கலாம்; கேம்ஸ் ஆட லாம்; “மொபைல் பேங்கிங்’ வசதி உள்ளது. பிடித்தமானவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்; தலைமறைவு குற்றவாளி களையும் கண்டறியலாம்; இவ்வளவு ஏன்… காதலர்களுக்கு தூது செல்லும் நவீன, “புறா’வாகவும் மாறி விட்டதே!

நானோ டாட்ஸ் ஹார்டு டிஸ்க்



கம்ப்யூட்டர்களில் தகவல்களை சேமித்து வைக்க `ஹார்டு டிஸ்க்’ எனப்படும் நினைவுத்தகடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல செல்போன்கள், டிஜிட்டல் கேமிராக்கள் போன்றவற்றில் தகவல்களை பதிவு செய்ய `மெமரி கார்டு’ வசதி உள்ளது. கொள்திறனுக்கு ஏற்ப இந்த நினைவுத்தகடுகள் கிடைக்கின்றன.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நினைவுத்தகடுகள் அளவில் பெரிதாக இருந்தன. தொழில்நுட்பம் வளரவளர சிறிய ஸ்டாம்ப் அளவில் உள்ள மெமரி கார்டில் பலநூறு பக்கங்கள் உள்ள தகவல்களை சேமிக்கும் வசதி உருவானது. இப்போது நானோ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதைவிட பலமடங்கு சேமிப்பு வசதி, ஆனால் மிகச்சிறிய மெமரி கார்டு என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் `நானோ டாட்ஸ்’. அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நானோ டாட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மெமரி கார்டு என்பது ஒரு சதுர அங்குலம் அளவில் இருக்கும். இந்தச் சிறிய `சிப்’-ல் லட்சக்கணக்கான `நானோ டாட்’ கள் இடம்பெற்று இருக்கும். இவை காந்த தொழில்நுட்பத்தில் இயங்கும். அடுத்த கட்டமாக லேசர் தொழில்நுட்பத்தில் இதை இயக்கும் வகையில் ஆய்வுகள் நடக்கிறது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இதைவிட அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வகையில் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் மெமரி கார்டுகள் தயாரிக்கப்படும்.

அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.


சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்

சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.freenew.net

இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில்
ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா ..?


உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (Password)  உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, எதாவது வெளில் கம்ப்யூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை (Password)  மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.


நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல பாருங்கள் உங்கள் ஈ-மெயிலாது தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.


உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை (Password)   மாற்றிக்கொள்ளவும்.

டிராய் பெற்ற புகார்களில் ஏர்டெல் முதலிடம்...!


டிராய் [Telecom Regulatory Authority of India (TRAI)] இந்திய தொலை தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் விதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை, கட்டணம் தொடர்பாக புகார்களை பெற்று வருகிறது. 

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதில் முதலிடம் வகிக்கும் நிறுவனம் பாரதி ஏர்டெல். அதே போல் வாடிக்கையாளர்கள் டிராயிடம் அதிகம் புகார் அழிப்பது ஏர்டெல் குறைபாடுகளை பற்றித்தானாம். 

கடந்த மூன்றாண்டுகளில், டிராயிடம் அளிக்கப்பட புகார்களில் 3571 புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தை பற்றியவை. 2151 புகார்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை பற்றி.  1896 புகார்கள் வோடபோன் நிறுவனத்தை பற்றி. டாடா டோகோமா, ஐடியா நிறுவனங்கள் முறையே 1239,  925 புகார்களை பெற்றுள்ளன. 
இந்த விபரங்களை மக்களவையில் அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.  இந்த செய்தியை எகனாமிக் டைம்ஸில் படித்தேன். 

இவ்வளவு புகார்கள் பெற்று என்ன? இன்னும் இந்த நிறுவனங்கள் அப்பாவிகளிடம் மறைமுகமாக ஏமாற்றுவதை நிறுத்துவதாக தெரியவில்லை. வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமலேயே கிரிக்கெட் ஸ்கோர் அலெர்ட் க்கு ரூ. 30, மொபைல் ரேடியோவுக்கு ரூ. 25 என்று காசை பிடுங்குவது தொடர்கிறது. 

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் சில நாட்களுக்கொருமுறை "STOP" என்று 121 எண்ணுக்கு SMS அனுப்பி நீங்கள் ஏதும் கட்டண சேவைகளுக்கு சந்தாதாரராக உள்ளீர்களா என்று சோதித்து கொள்ளுங்கள். அப்படி ஏதும் இருந்தால் அதை நீக்க நீங்கள் பதில் SMS பெறுவீர்கள். அதன் வழிமுறைப்படி விலகி விடுங்கள். நீங்கள் அறியாமலேயே இது போன்ற கட்டண சேவைகள் உங்கள் மேல் திணிக்கப்பட்டு இருக்கலாம். 

இதைப் பற்றிய விபரங்கள் இங்கே உள்ளன.