Showing posts with label ஜிமெயில். Show all posts
Showing posts with label ஜிமெயில். Show all posts

Sunday, April 24, 2011

உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா ..?


உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (Password)  உங்களை அறியாமலேயே நீங்கள் தவறுதலாக வேறு எங்கேயாவது தொலைத்திருக்க வாய்ப்பு உள்ளது, எதாவது வெளில் கம்ப்யூட்டர் சென்டர்களில் ப்ரவுசிங் செய்யும் போதோ அல்லது உங்களுடைய நண்பர்களின் கணினியிலோ தவறுதலாக உங்களின் முகவரி மற்றும் கடவுச்சொல்லை விட்டு சென்றீர்கள் ஆனால் உங்களுடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உங்களுடைய ஈ-மெயிலை தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது, அது போன்ற நிலையில் நீங்கள் உங்களுடைய பழைய கடவுச்சொல்லை (Password)  மாற்றிக்கொள்ள வேண்டும். பின் செக்கியூரிட்டி பதிலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.


நான் சொல்லவந்தது என்னவென்றால் உங்களுடைய ஜிமெயில் முகவரியை வேறு யாராவது பயன்படுத்தினால் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதுதான், நீங்கள் முதலில் உங்களுடைய ஜிமெயில் முகவரியில் நுழைந்து கொண்டு கடைசியாக அடிபகுதியில் உள்ள Details என்பதை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கடைசியாக எப்போதெல்லாம் ஜிமெயில் அக்கவுண்டை ஒப்பன் செய்தீர்களோ அந்த நேரம் மற்றும் முகவரிகள் அனைத்தும் பட்டியலிடப்படும் அதில் நீங்கள் ஒப்பன் செய்யாத முகவரி இருந்தால் உடனே அதற்கு மேல பாருங்கள் உங்கள் ஈ-மெயிலாது தற்போது வேறு எங்காவது ஒப்பன் செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரத்தை காட்டும்.


உடனே Sign out all other sessions என்பதை கிளிக் செய்து மற்ற இடத்தில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த உங்களுடைய ஈ-மெயிலை Sign out  செய்ய முடியும். முன்பே சொன்னதுபோல உடனே உங்களுடைய கடவுச்சொல்லை (Password)   மாற்றிக்கொள்ளவும்.

ஜிமெயிலில் இலவசமாக பேசலாம் (நிபந்தனைக்குட்பட்டது)


 ஜிமெயிலில்(GMail) இருந்து எவ்வாறு கனடா போன்ற சில நாடுகளுக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக அநேகமானோருக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக இப்பதிவை பகிர்கின்றேன்.

முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போ உங்களுக்கு தோன்றும் கணக்கின் முகப்பு பக்கத்தின் இடப்பக்கத்தில் சட்(CHAT)என்பதற்கு கீழே “Call Phone” எனும் பகுதி உள்ளது. விளக்கத்துக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.




அதனை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறான பகுதியானது ஜிமெயிலின் வலதுபக்க கீழ் மூலையில் தோன்றியிருக்கும்.


இதிலே சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்டத்தில் எந்நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தப் போறீர்களோ அந்த நாட்டை தெரிவு செய்யவும். (முக்கியமாக கவனிக்கவேண்டியது: பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட பணத்தின் பெறுமதியானது பூச்சியமாக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். மற்றைய நாடுகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலி கேட்குமே தவிர அழைப்பை மேற்கொள்ள முடியாது.) பின்னர் அருகேயுள்ள இடைவெளியில் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கத்தை அழுத்தி “Call” என்பதைக் கொடுக்கவேண்டியதுதான்.




முதன்முதலில் இதனைப் பயன்படுத்தும்போது கீழ் உள்ளவாறான செய்தியொன்று தோன்றும். இதற்கு நீங்கள் “Accept” என்பதை கிளிக் பண்ணினால் போதும்.



கடிகாரம் போலுள்ளதை கிளிக் பண்ணி நாம் ஏற்கனவே அழைத்த தகவல்களை (Call History) அறிந்துகொள்ளலாம்.




நாம் அழைக்கும் இலக்கங்களை விரும்பிய பெயரில் சேமித்து வைக்கவேண்டுமானால் மேலுள்ள படத்தில் “Save” என்பதை கிளிக் பண்ணியதும் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும். அதில் விரும்பிய பெயர்களை கொடுத்து “Create New Contact” என்பதை அழுத்தினால் போதும்.



இனியென்ன கனடாவில் உறவினர்கள் இருந்தால் ஜாலிதான். மனம்விட்டு ஆறஅமர்ந்து பேசிக்கொள்ளலாம்...