Tuesday, April 12, 2011

இணைய தளத்தில் பிரபல்யம் பெற்று வரும் ‘ஜூம்லா’




ஜூம்லா என்பது இணைய தளங்கள் மற்றும் ஏனைய இணைய பயன் பாட்டு எப்லிகேசன்களை உருவாக்க்க் கூடியCMS எனும் ஒரு Content Management System ஆகும். (CMSஎன்றால் என்ன என கடந்த வார ஐடி வலம் பகுதியில்பார்த்தது நினைவில் இருக்கலாம்)
தற்போது ஜூம்லா, வர்ட் பிரஸ்,ட்ரூபேல் என மூன்று பிரதான CMS மென்பொருள்கள் பயன் பாட்டிலுள்ளன. இவை ஒவ்வொன்றும் சில வசதிகள், மற்றும் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் பொதுவாக இவை மூன்றும் இணைய தள உருவாக்கத்திற்கே பயன் படுத்தப்படுகின்றன.
WordPress என்பது ப்லோக் தளங்களை உருவாக்குவதில் முன்னணியில் நிற்கும் அதே வேளை ஜூம்லா மூலம்இயக்க நிலையிலுள்ள (dynamic sites) இணைய தளங்களை உருவாக்குவதில் பிரபல்யம் பெற்று விளஙகுகிறது.
இது 2005 ஆம் ஆண்டு ஒரு ஒபன் சோர்ஸ் குழுமத்தினால்உருவாக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளாகும்ஜூம்லா எனும் வார்த்தைக்கு ஸ்வாஹிலி எனும் ஆபிரிக்க மொழியில் முழுமையான / அனைத்தும் உள்ளடக்கிய என்ற பொருளைத் தருகிறது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள ஜூம்லா மூலம்sections, categories, content items, modules போன்ற பல்வேறு கூறுகளை ஒன்று சேர்த்து இணைய தளங்கள உருவாக்கப்படுகின்றன. இணைய தளவடிவமைப்பில் பயன் படுத்தப்படும் HTML, PHPபோன்ற ப்ரோக்ரமிங் மொழிகளில் தேர்ச்சி இல்லாமலேயே இலகுவாகவும் மிக சிறப்பாகவும் இணைய தளங்களை வடிவமைக்கலாம்.
இணைய தள வடிவாக்கத்தில் ஆர்வமுடையோர் இதனை இலவசமாக டவுன் லோட் செய்து பயன் படுத்தலாம். அத்தோடு நீட்சிகள் (extensions) மற்றும் படிமங்க்களையும்(templates) கூட ஜூம்லாவுக்கென உருவாக்கலாம்.

ஜூம்லவை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள ஒரு ஹோஸ்ட் கணினியிலேயே நிறுவ வேண்டும். அதனை நிறுவி விட்டால ஒரு இணைய தளத்தை எங்கிருந்தும் நிர்வகிக்கவோ புதுப்பிக்கவோ முடியும் அதே வேளை இணைய தளத்தைவடிவமைத்தல் பதிப்பித்ல் போன்ற அனைத்துகருமங்களும் பிரவுசர் மூலமாகவேமேற்கொள்ளப்படுவதும் இதன் சிறப்பம்சமாகும்.

ஜூம்லா PHP எனும் இணைய தள வடி வாக்க மொழியினையும் MY SQL எனும் தரவுததள மேலாண்மை மென்பொருளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஜூம்லாவில் நீங்கள் சேர்க்குகும் தகவல்கள இந்த தரவுத் தளத்திலேயே சேமிக்கப்படும். இத் தரவுத்தளம் கொண்டே ஜூம்லா இயக்கப்படுகிறது.
ஜூம்லா இயங்குவதில் தரவுத்தளம் முக்கிய பங்கு வகித்தாலும் தரவுத் தள நிர்வாகம் பற்றிய முழுமையான அறிவு உங்களிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் தரவுத்தளத்தின் பெயர், அத்னை அணுகுவதற்கான பயனர் பெயர் கடவுச் சொல் மற்றும் அதன் அமைவிடம்அமைவிடம் போன்ற விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்.
ஜூம்லா மென்பொருளை ஒரு வெப் சேர்வரிலேயே நிறுவ வேண்டும்.. எனினும் இணைய சேர்வர் இல்லாமலேயே உங்கள் கணினியை ஒரு வெப் சேர்வராக மாற்றி ஜூம்லாவை நிறுவிப் பரீட்சித்துப் பார்க்கலாம் அதனை லோக்கல் ஹோஸ்ட் (localhostஎனப்படும். இந்த லோக்கல் ஹோஸ்ட் வசதி விண்டோஸ் இயங்கு தளத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை Internet Information Services(IIS) எனப்படுகிறது.
..எனினும் ஜூம்லா இயங்க APACHE, மற்றும் PHP, MY SQLமுதலியன அவசியம் என்பதால் விண்டோஸில் வரும் IISபொருத்தமற்றது. எனவே இவை மூன்றும் இணைக்கப்பட்டWAMP / LAMP / MAMP / XAMPP போன்ற வேறு லோக்கல் ஹோஸ்ட் சேர்வர் மென்பொருள்கள் பயன் படுத்தப்படுகின்றன.
நான் இங்கு ஜூம்லாவை எவ்வாறு WAMP சேர்வரில் நிறுவுவது என விளக்கலாம் என நினைக்கிறேன்.ஜூம்லாவை உங்கள் கணினியில் இயங்க வைக்கும்Windows, Apache, MySQL, PHP என்பவற்றையே WAMP குறித்து நிற்கிறது. WAMP மென்பொருள் Windows இயங்கு தளத்திற்குஉருவாக்கப்பட்டதாகும்.
முதலில் வேம்ப் சேர்வர் மென்பொரு
ளை www wampserver.com எனும் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். அதனை நிறுவும் போது c:wamp எனும் போல்டரைத் தெரிவு செய்வதோடு php mail parameters எனுமிஇடத்தில் SMTP ஆகlocalhost என்பதையும் தெரிவு செய்யுங்கள்.
அதனை நிறுவியதும் டெஸ்க்டொப்பில் ஒரு ஐக்கன் தோன்றியிருக்கும். அதன் மூலம் வேம்ப் சேர்வரை இயக்குங்கள. அப்போது டாஸ்க் பாரின் வலப்புறம் சிஸ்டம் ட்ரே பகுதியில் வேம்ப் செர்வர் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைக் காட்ட ஒரு சிறிய ஐக்கன் தோன்றியிருக்கக் கணலாம். அதன் மீது மேல் க்ளிக் செய்யத் தோன்றும் மெனுவில்Start All Services தெரிவு செய்யுங்கள். .
அடுத்து www.joomla.org எனும் இணைய தளத்திலிருந்துஜூம்லாவின் அண்மைய பதிப்பைத் தர விறக்கம் செய்யுங்கள். இந்த பைல் ZIP வடிவிலேயே இருக்கும்.
ஜூம்லாவை நிறுவ முன்னர் மறுபடியும் வேம்ப் ஐக்கனில் க்ளிக் செய்து வரும் மெனுவில் PHP ஊடாக் PHP Settingsதெரிவு செய்யும்போது தோன்றும் மெனுவில் Display Errorsஎனும் கட்டளை தெரிவு நிலையில் இருந்தால் அதனை நீக்கி விடுங்கள்.
அடுத்து வேம்ப் சேர்வர் ஐக்கனில் மறுபடி க்ளிக் செய்துwww directory என்பதைத் தெரிவு செய்யுங்கள். அப்போதுC:\wamp\www எனும் முகவரியைக் கொண்ட விண்டோ தோன்றும். அந்த விண்டோவினுள் புதிதாக ஒரு போல்டரை உருவாக்குங்கள். அதற்கு விரும்பிய பெயரைக் கொடுக்கலாம. நான் இங்கு Joomlatest என வழங்கியுள்ளேன்.
அடுத்து ஏற்கனவே டவுன்லோட் செய்த ஜூம்லா ஷிப் பைலை Joomlatest போல்டருக்கு நகர்த்தி விட்டு அதனைExtract செய்து விரித்து விடுங்கள்மறுபடியும் WAMP ஐக்கனில் க்ளிக் செய்து phpMyAdmin எனபதைத் தெரிவு செய்யுங்கள். அப்போது உங்கள் வெப் பிரவுசர் திறந்து கொண்டு ஜூம்லா தரவுத்தளத்தை நிர்வகிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லும். அங்கு Create new database எனுமிடத்தில் தரவுத்தளத்திற்குப் பொருத்தமான் ஒரு பெயரை வழங்கி (உதாரணம்:joomlatest)Create தெரிவு செய்து புதிதாக ஒரு தரவுத் த்ளத்தை உருவாக்குங்கள்.
அடுத்து மறுபடியும் வேம்ப் சேர்வர் ஐக்கனில் க்ளிக் செய்து லோகல் ஹோஸ்ட் தெரிவு செய்யுங்கள். பிரவுசரில் Your Projects என்பதன் கீழ் joomlatest எனும் பெயர் இருப்பதைக் காணலாம். அதன் மீது க்ளிக் செய்ய ஜூம்லா நிறுவும் திரை தோன்றும. பிரவுசரில் http://localhost/joomlatest என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துவதன் மூலமும் இத்திரையைப் பெறலாம். .

அங்கு 
Next பட்டனில் க்லிக் செய்து முதலாம். இரண்டாம், மூன்றாம் நிலைகளைத் தாண்டி நான்காவது திரைக்கு வந்தது,ம் Basic Settings எனும் பகுதியில் ஹோஸ்ட் பெயராகLocalhost எனவும் பயனர் பெயராக: root எனவும் வழங்குங்கள். Password: அவசியமில்லை தரவுத்தளத்தின் பெயராக் : joomlatest என வழங்குங்கள்.

இங்கு ஜூம்லா இணைய சேர்வர் கணினியில் நிறுவப்படாததால் ஐந்தாவது திரையில் 
FTP Configurationதகவல்கள் அவசியமில்லை. ஆறாவதாகாத் தோன்றும் Main Configuration திரையில் தளத்திற்கான ஒரு பெயர், பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை வழங்குங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் நிறுவலில் பயன் படுத்திய
installation போல்டரை நீக்கும் படி அறிவுறுத்தும். அந்தத் திரையை மூடாமலேயே வேம்ப் ஐக்கனில் க்ளிக் செய்துwww directory. என்பதைத் தெரிவு செய்து installation எனும் போல்டரை நீக்கி விடுங்கள். அல்லது அந்த போல்டரின் பெயரை மாற்றி விடுங்கள்.
இறுதியாகத் தோன்றும் திரையில் Site பட்டனில் க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் தளத்தின் முதற் பக்கத்திற்குச் செல்லலாம். அதனை ஜூம்லாவில் Front End எனப்பகிறது.இறுதியாகத் தோன்றும் திரையில் Admin என்பதில் க்ளிக் செய்வதன் மூலம் இணைய தளத்தை நிர்வகிக்கும் Back Endஎனும் பக்கத்திற்குச் செல்லலாம் அல்லது பிரவுசரில்http://localhost/joomlatest /administrator/ என வழங்குவதன் மூலமும் அப்பக்கத்தை அடையலாம. அப்போது தோன்றும் திரையில் ஏற்கனவே வழங்கிய பயனர் பெயர், மற்றும் கடவுச் சொற்களை வழங்கி ஜூம்லாவில் பணியாற்ற ஆரம்பிக்கலாம்

தேர்தல் களத்தில்அதிகம் ரசிக்கப்பட்ட வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகள்:



நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார்.

41 சீட் வாங்கி எப்படி முதல்வராக முடியும், எங்கிட்டாவது அஞ்சு பத்து கோடி கொடுத்து சினிமா எடுத்து அதுல முதல்வர் ஆகலாம்.

ண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?

எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, விஜயகாந்த் கறுப்பு எம்ஜியார் சொல்லித்திரிவதை ஒத்துக்கொள்கிறதா?

விஜயகாந்த் ஒரு வேட்பாளரை மக்கள் முன் அடிப்பது சரிதானா? “ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா’ தன் கட்சி தலைவரை நினைத்துப் புலம்புகிறாராம் அந்த வேட்பாளர் இப்போது”.

ந்த நேரம் கிரிக்கெட் கேப்டன் தோனி ஜனாதிபதி கூட விருந்து சாப்பிட்டு இருப்பாரு; ஆனா இவுங்க கேப்டன் மருந்து சாப்பிட்டு இருப்பாரு..

28 வருசம் கழிச்சு உலககோப்பை வாங்கிக்கொடுத்த தோனி தான் உண்மையான கேப்டன்.. 

ஜெயலலிதா வெற்றி -ரிப்போர்ட்டர் கருத்து கணிப்பு

யார் முதல்வராக வர வேண்டும் என ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் தமிழ்கம் முழுவதும் மக்களிடம் சூறாவளி சுற்றுப்பயணம் நடத்தி...கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது...



தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 11 இடைத்தேர்தல்களை தமிழகம் சந்தித்து இருக்கிறது..ஓட்டுக்காக ஆளுங்கட்சி சார்பில் அதிக பனம் விளையாடியதும்,அனைவரும் அறிந்ததுதான்...இதே போல வரும் பொது தேர்தலிலும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என ஆளுங்கட்சி நினைக்கிறது...ஆனால் மக்களின் மனநிலை இதற்கு இதற்கு மாறாக இருப்பது ஆச்சர்யம்....



அதே போல விலைவாசி உயர்வும் கிராமம்,நகரம் வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது...
எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை காண முடிந்தது....

அவர்கள் கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என ரிசல்ட் சொல்கிறது...கடந்த தேர்தலில் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க விரும்பாத சிறுபான்மை மக்கள் இந்த தேர்தலில் கணிசமான அளவில் அ.தி.மு.க வுக்கு ஆதரவளிக்க முன் வந்திருக்கிறார்கள்....

கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்..

அதே நேரத்தில் தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்...என்று சொல்கின்றனர்...

சர்வேயில் அ.தி.மு.க வுக்கு 58 சதவீதம் பேரும்,தி.மு.க வுக்கு 33 சதவீதம் பேரும்,ஆதரவு தெரிவித்துள்ளனர்...எனவே அ.தி.மு.க அணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தீர்க்கமாக தெரிகிறது.

நன்றி-ரிப்போர்ட்டர்

இந்தியா டுடே இதழும் தனது கருத்து கணிப்பில் ஜெயலலிதாவே வெல்வார் என கூறியுள்ளது...

இந்தியா டுடே-ஓஆர்ஜி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 164 தொகுதிகளையும், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

சதவீத அடிப்படையில் பார்த்தால், அதிமுக கூட்டணிக்கு 50 சதவீதத்தினரும், திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவுட் லுக் பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பு;

அதே போல அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும்,

திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் பேரும், மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

may 13 அடுத்த தமிழக முதல்வர் யார்..?-புதிய தலைமுறை கருத்து கணிப்பு


நக்கீரன் -தி.மு.க வுக்கு அல்லக்கை னு சொல்லிட்டீங்க...,விகடன்,துக்ளக் -அ.தி.மு.க சொம்புன்னு சொல்லிட்டீங்க....சரி புதிய தலைமுறை இதழ் நம்ம மாலன் சார் ,மற்றும் தி.மு.க வின் டிவிட்டர் ,பஷ் கொள்கை பரப்பு செயலாளர் யுவகிருஷ்ணா பங்களிக்கும் பத்திரிக்கை இது...இவங்க சொல்றதை கூட நம்ப மாட்டீங்களா மக்களே...?

ஆமாங்க....தி.மு.க அதி.மு.க இரண்டு கட்சிகளும் தேர்தல் அறிவிக்கும் போது சமபலமாக இருந்தது..ஆனால் தொகுதி பங்கீடு காலகட்டத்த்தில் சில சதவீதம் அதிகம் பெற்று அ.தி.மு.க கூட்டணியே முன்னிலையில் இருப்பதாக இப்பத்திரிக்கை இன்று கருத்து கணிப்பு வெளியுட்டுள்ளது....

தி.மு.க மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்றும்,குடும்ப அங்கத்தினர்களை கட்சிக்குள் நுழைய விட்டதை மக்கள் வெறுப்பதாகவும் ,விலைவாசி உயர்வு 70 சதவீதம் அதிருப்தி நிலையை உருவாக்கி இருப்பதாக சொல்லியிருக்காங்க..

அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதில் கலைஞர் ,ஜெயலலிதா இருவரும் தலா 42 சதவீதம் என்னும் அளவில்..இருப்பதாக குறிப்பிட்டபின்..இதில் அடுத்த முதல்வர் என விஜயகாந்த் க்கு 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க..விஜயகாந்த் ஆதரவும் சேர்ந்தா ஜெயலலிதாதான் அடுத்த தமிழக முதல்வர் என உறுதியா தெரிவிச்சிருக்காங்க...புதிய தலைமுறை வார இதழ் மற்றும் ஏசிநீல்சன் நிறுவனம் இருவரும் இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பில்,80 சதவீத மக்கள்,பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதால் ஓட்டை மாற்றி போடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.....


ஹெட்லைன்ஸ் டுடே ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது அதில் அ.தி.மு.க கூட்டணிக்கு 144 தொகுதிகள் கிடைக்கும் என சொல்கிறது....இங்கு சென்று பாருங்கள்

நியூயார்க் டைம்ஸ் தனது இந்திய மாநில அரசியல் வரிசையில் தமிழக தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போது,,கலைஞர் என்னும் பேராசை மனிதர் தன் தவறுகளை, ஊழலை மறைக்க நிறைய இலவச திட்டங்களை அறிவித்து ஓட்டு போடும்படி மக்களை ஆசை காட்டுகிறார்..இவரது இலவச திட்டங்களை தொடர்ந்து எதிர்கட்சிகளும் இலவச திட்டங்களை அறிவிக்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன..என்கிறது.




ஹெட்லைன்ஸ் டுடே ,தமிழக தேர்தல் அறிவிப்புக்கு முன்பு.வரை இரு கட்சிகளும் சமபலத்துடன் இருந்தது..ஆனால் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தவுடன் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது....விஜயகாந்த்,ஜெயலலிதாவின் பரபரப்பான பிரச்சாரம் அவர்கள் கூட்டணிக்கு அதிக மக்கள் ஆதரவை பெற்று தந்துவிட்டது....என சொல்லி இருக்கிறது.



’’இவனுக தலையில மொளகா அரைக்கலாம்னு பார்த்தா நம்ம தலையில அரைச்சிருவானுக போலிருக்கே’’


என்னை மாதிரியே கொழு கொழுன்னு கொழந்தை வேணும்னா தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்க...(ஆகா என்ன ஒரு சமூக நீதி..கொள்கை விளக்க பிரச்சாரம்..?)






கலைஞர் தான் மறுபடி முதல்வரு..தைரியமா பேசுன்னு உசுப்பி விட்டானுக...அந்தம்மா முதல்வர் ஆயிரும்னு ஒரு பயலும் சொல்லலை


தி.மு.க வினர் வடிவேலுவையும் குஷ்பூவையும் இந்த தேர்தலில் மலைபோல நம்பி இருக்கின்றனர்....தி.மு.க வின் ஐவர் என புகழப்பெற்ற நாவலர் நெடுஞ்செழியன்,மதியழகன்,சம்பத்..போன்ற தலைவர்களின் பேச்சாற்றலை நம்பியிருந்த கழகம் இன்று குஷ்பூவை நம்பி இருப்பதும்,அரசியல் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து சிறை சென்று திரும்பிய பப்பூன் வடிவேலுவையும் நம்பி கலைஞர் களமிறங்கியிருக்கிறார்..என்பது காலம் தந்த கொடுவினை என தமிழக அரசியல் வார இதழ் குமுறி இருக்கிறது...


தாத்தா...இந்த வாட்டி என்ன முக்கினாலும்,அய்யோ கொல்றாங்களே னு சீன் போட்டாலும்,அறிவிக்காத எமெர்ஜென்ஸி...ஜனநாயகம் செத்ருச்சி னு ஒப்பாரி வெச்சாலும், ஒண்ணும் வேலைக்காவாது...ஆப்பு கன்ஃபார்ம்..மக்கள் முழிச்சிகிட்டாங்க....முக்கியமா தேர்தல் கமிஷன் முழிச்சிகிச்சு

எம்.ஜி.ஆரைக் காப்பாற்றச் செய்த தந்திரம் - தி.மு.க ஏமாற்றம்-


சினிமாவில் இருந்த முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை எல்லாம் அழைத்து அதில் உண்மையான ஆட்களை தன் மீது விசுவாசம் கொண்டவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து மெய்காவல்படை போல அமைத்துக்கொண்டார்..எம்.ஜி.ஆருக்கு அரண்போல இவர்கள் காவல் இருந்தனர்...ஸ்டண்ட் மாஸ்டர் ஜஸ்டீன் உட்பட பலர் இருந்தனர்...தளபதி நடராஜன்,சோடாக்கடை பெரியண்ணன் தலமையில் பறக்கும்படை அமைக்கப்பட்ட்து..இன்று ஒரு ஊருக்கு எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்ய வருகிறார் என அறிவித்தால் ,போலீசார்..பந்தோபஸ்து பலமடையும்..பலபோலிஸார் அவரது ரசிகர்கள் என்பதால் அவரது பாதுகாப்பு பணியை உற்சாகமாக செய்தனர்.அதே சமயம்.. அவரை தீர்த்துக்கட்ட தி.மு.க கும்பலும் ஆயுதங்களுடன் அந்த பாதையில் காத்திருப்பார்கள்..ஆனால் எம்.ஜி.ஆர்..சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பாதையில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்துகோண்டிருப்பார்..தி.மு.க வினரை ஏமாற்ற எம்.ஜி.ஆர் பல தந்திரங்கலை உபயோகிப்பார்..சுற்றுப்பயண விவரம் வெறும் ஏட்டளவில்தான் இருக்கும்..நொடிக்கு நொடி தன் பயண திட்ட்த்தை மாற்றிக்கொண்டே இருப்பார்..அந்தளவு தி.மு.கவினர் அச்சுறுத்தல் இருந்தது...





இரவில்..செல்லும்போது இன்னும் போராட்டமாக இருக்கும்..மீடியாக்கள் இல்லாத காலம் என்பதால் மக்கஊக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது..இதனால் பல வன்முரைகளை நட்த்த தி.மு.க வினருக்கு வசதியாக இருந்த்து..போலீஸாரும் இதை அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள்..மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டாலோ..அல்லது நகரத்தில் பலர் முன்னிலையில் நடக்கும் கொலைகளுக்கு மட்டும்தான் போலீஸ் கேச்..இந்த காலத்திலேயே கொலை செய்து ஆற்றில் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பித்தால் போலீஸ் திணறுகிறது. தற்கொலை என கேஸை மூடுகிறார்கள். மீடியாக்கள்.இல்லாத காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்ற லைட் வெளிச்சம் இல்லாத காடுகள் அதிகமுள்ள அக்காலத்தில் (இருபது வருடத்திற்கு முன்).யாரை கொன்றால் யாருக்கு தெரிய போகிறது..?
அப்போது எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த நேரம் மக்கள் எம்.ஜி.ஆர் வருகிறார் என தெரிந்தாலே வண்டி கட்டிக்கொண்டு முக்கிய நகர்களுக்கு சாரை சாரையாக வந்துவிடுவார்கள்..எங்க ஊரில் குருசாமி டீக்கடை இருக்கிறது..இந்த கடையில் இரண்டு நாட்களாக டீ,மிகசர் சாப்பிட்டுக்கொண்டு காத்திருந்து எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு போவார்கள்..அப்படி இரண்டு நாட்களாக காத்திருந்து எம்.ஜி.ஆர் பார்த்தவர்கள் கிராமத்தில் இன்றும் நிறைய இருக்கிறார்கள்..இந்த சக்தி உலக அளவில் எந்த தலைவருக்கும் கிடையாது...இரண்டு தின்ங்களாக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றால் இன்று வருகிறேன் என எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டால் அன்று வரும் வழியெல்லாம் மக்கள் எம்.ஜி.ஆர் வேனை மறித்துக்கொண்டு விடுவர்...100.200 மக்கள் ஒன்றாக சுற்றிக்கொண்டு எங்கள் கிராமத்தில் எம்.ஜி.ஆர் காலடி பட வேண்டும் என அடம்பிடித்தால் அவர் என்ன செய்வார்..?அங்கு இறங்கி அந்த மக்களுடன் சந்தோஷமாக பேசிவிட்டு போவார்..இது போல ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கத்தி கதறுவார்களாம்..உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிடுவாராம்..இதனால் பிரச்சாரத்திற்கு இந்த நாளில் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் வருவதாக சொன்னால் அங்கு வர இரண்டு நாட்கள் ஆகும்...இந்த அளவு எம்.ஜி.ஆர் மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்...

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர் முதன்முதலாக போட்டியிட்டபோது வரலாரு காணாத வெற்றி..அவர் கைகாட்டிய வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி..எம்.ஜி.ஆர் கைகாட்டினால் கழுதை கூட ஜெயிக்கும் என்பார்கள் கிராமத்தினர்...அந்தலவு எம்.ஜி.ஆரை மக்கள் கடவுளாக மதித்தனர்...

பல சூழ்நிலைகளிலும் எம்.ஜி.ஆரை சுற்றி மக்கள் எப்போதும் இருந்த்தால் தி.மு.க வினர் எம்.ஜி.,ஆரை கொல்லும் முயற்சி பலிக்கவில்லை...ஆனால் வேட்பாளர்கள்..?அவர்களையும் எம்.ஜி.ஆர் காப்பாற்ற வேண்டுமே..? அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் தன் சொந்த கைகாசைபோட்டுத்தான் அப்போது முதல் இன்றுவரை கட்சி பணியாற்றுவார்கள்..

ஆனால் கருணாநிதியோ...நிதி வசதி அதிகம் உள்ளோர் பொற்க்குவியல் தாரீர்..நிதிவசதி குறைந்தோர் காசுகள் தாரீர் என அண்ணா பிறந்த நாள்,தனது பிறந்தநாள்,தேர்தல்காலம் என எப்போது பார்த்தாலும் துண்டு ஏந்தி பிச்சை எடுப்பார்...வசதி மிக்கவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி தருகிறோம்..துண்டு ஏந்தாதீர்கள் என்றாலும் கேட்கமாட்டாராம்...

கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தார் என்கிறார்கள்..இந்த முறை மட்டுமே முழுதாக 5 வருசம் ஆட்சி செய்தார்..மீதி பதவியேற்ற காலங்களில் எல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்..இவர் முதல்வர் ஆனாலே கற்பழிப்பு,கொலை கொள்ளை தான்..சிறையில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் விடுதலை செய்வதுதான் இவர் முதல் பணியாக இருக்கும்..ஏனென்றால் ரவுடிகள் என்றாலே அவர்கள் தி.மு.க தானே....இப்போதுகூட..அண்ணா பிறந்த நாள் என பல கொடூரமான ரவுடிகளை திறந்துவிட்டார் தெரியுமா..?இரவில் 7 மணிக்கு மேல் தி.மு.க வின் கோட்டையான சென்னையில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தனியாக நடக்க முடியாது தெரியுமா..?

கலைஞர் அக்காலத்தில்,எத்தனையோ ஸ்டண்டுகள் அடித்தும்,எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை...

தன் தொண்டர்களையும் வேட்பாளர்களையும் தி.மு.க வினர் கொலைவெறியுடன் தாக்கௌகிறார்கள் என கேல்விப்பட்ட்தும் எம்.ஜி.ஆர் ஒரு உத்தரவு பிறப்பித்தார்..உங்கள் வீட்டு கூரையின் மீது நம் கட்சிக்கொடியை ஏற்றுங்கள்...ஒவ்வொருவரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்..உயிருக்கு ஆபத்து என்றால் தாக்குங்கள் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்..என்றார்..எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதும்..அ.தி.மு.கவினர் வெறி கொண்ட வேங்கை ஆகினர்...

தி.மு.க ரவுடிகளை தூக்கி போட்டு மிதித்தனர்...தேர்தல் காலத்தில் அப்போதெல்லாம் வெட்டுகுத்து சர்வ சாதரணம்...வீதிக்கு ஒரு பிணம் விழுமாம்..காரணம் தி.மு.க..காங்கிரஸ் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போக ஆட்சியை இழக்க,முதல் காரணம்,தி,மு,க வின் வன்முரைதான்..காங்கிரஸ்காரன் பெரும்பாலும் அய்யர்தான் என்பதால்.தி.மு.கவால் சுலபமாக அவர்களை உதைத்து துரத்த முடிந்தது...காங்கிரஸ் காரன் வீட்டுக்குள் புகுந்து பெண்களை தூக்கி சென்றுவிடுவார்களாம்...இதனால் வேட்பாளர் பஞ்சம்,பிரச்சாரம் செய்ய பயம் என காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது....மற்றபடி கொள்கை முழக்கமெல்லாம் மண்ணாங்கட்டி வாதம்...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கால் வளர்ந்தார்..தி.மு.க வன்முறையால் வளர்ந்தது....

எம்.ஜி.ஆரை கொல்வதற்கு தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!!


எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அரசியலை  அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அரசின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி..

 எம்.ஜி.ஆரையே இந்த கருணாநிதி நீக்கிட்டாருய்யா...என மக்கள் கடும் ஆத்திரத்துடன் கலைஞர் மீது இருந்தனர்... தாய்மார்கள், பெண்கள், முதியோர்கள் அனைவரும் கலைஞர் இருக்கும் திசை நோக்கி மண்ணை வாரி சாபம் விட்டனர்...எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் பெரும்படையுடன் ஆவேசமாக கிளம்பியது..முசிறி புத்தன் தான் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவர்... மிகவும் கொதிப்புடன் இருந்தார்..நீதி கேட்டு பயணம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்புடன் வருகிறார்கள்...எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடக்கிறார்..அமைதியாக செயல்படுங்கள் என்கிறார் அண்ணாசாலையில் நடக்கிறார்கள்..அப்போதுதான் முசிறி புத்தன் புரட்சித்தலைவர் வாழ்க..என்ற கோஷம் கிளம்பியது..தமிழகம் முழுவதும் கெட்டியாக ஒட்டிக்கொண்ட்து....

ராமவரம் தோட்ட்த்தில் எம்.ஜி.ஆருடன் முசிறிபுத்தன் வாக்குவாதம் செய்கிறார். தலைவரே நீங்கள் கட்சி ஆரம்பிங்க..இந்த கருணாநிதிக்கு நாம யாருன்னு சரியான பாடம் புகட்டுவோம் என்கிறார்..எம்.ஜி.ஆர் அது எல்லாம் வேண்டாம்..சினிமாவே எனக்கு போதும்..நாம கட்சி ஆரம்பிச்சா மக்கள் ஏத்துக்குவாங்களா..என்கிறார்,,

நீங்க சரின்னு சொல்லுங்க நாங்க பார்த்துக்குறோம் என்கிறார் புத்தன்
எம்.ஜி.ஆர்..சம்மதம் தெரிவிக்க,அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகிறது....

உலகில் முதன்முதலாக ஒரு நடிகர் ஒரு கட்சி தொடங்குகிறார்..கலைஞர் இதை வளர விடக்கூடாது என கட்சிக்கு அனுமதி கிடைக்க விடாமல் பல வழிகளில் தடை போடுகிறார்...மாநில கட்சிகள் தொடங்க அனுமதி இல்லை என கலைஞரின் சூழ்ச்சியால் சென்னை தேர்தல் கமிஷனில் சொல்கிறார்கள்....தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் டில்லி சென்று அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என இந்திய அளவில் உள்ள கட்சியாக பதிவு செய்து கலைஞருக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்களை சந்திக்க கூடாது எனவும் அவரை எப்படியும் போட்டுதள்ளிவிடும்படி தன் கட்சியினருக்கு மறைமுக அசைன்மெண்ட் கொடுத்திருந்தார் கலைஞர்...அக்காலத்தில் தி.மு.க என்றாலே ரவுடிகள்தான்..மக்கள் நடுங்குவார்கள்..அந்தளவு தி.மு.கவினர் அராஜகம் செய்வார்கள்..இந்திராகாந்தியையே மதுரையில் கொல்ல முயற்சித்தார்களே...அதுபோல எம்.ஜி.ஆருக்கும் பலவகையில் தொல்லை கொடுத்தார்கள்..அவரை கொல்ல பெரும் தி.மு.க படை தயாரானது...இவரை உயிரோடு விட்டால் நாம் ஆட்சியை இழக்க வேண்டிவரும்..என மொத்த தி.மு.க வும் களத்தில் இறங்கியது..


அக்காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தி.மு.க வை விமர்சனம் செய்தால்..உடனே சுற்றிவளைத்து அடிஉதை விழும்..மேடை ஏறி வெட்டுவார்கள்.. அல்லது கொலை செய்து ஆற்றில் வீசிவிடுவார்கள் தி.மு.க வினர்..அப்படிப்பட்டவர்கள் தனக்கே இன்று குறிவைக்கப்பட்ட்தை அறிந்த எம்.ஜி.ஆர் அதை எப்படி சமாளித்தார் தெரியுமா..?..

பஹ்ரைன் படும் பாடு


போராட்டம் நடத்துனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை கமுக்கமாக நடந்து வருகிறது. அதற்க்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்..


இங்கே பல மலையாளிகள் ஏன் தமிழர்களும் கள்ளத்தனமாக டேக்சி  ஓட்டுகிறார்கள் [[செம வருமானம் பாஸ்]] பஹ்ரைனி டாக்சிகாரன் வாங்கும் பணத்தை விட இவர்கள் குறைவாக காசு வாங்குவதால் நாங்கள் இந்த டேக்சிகளில் பயணிப்பது உண்டு.

  இவர்களை போலீசில் பிடித்து குடுத்தால் சன்மானம் உண்டு இருந்தாலும் நம்ம ஆளுங்க காட்டி கொடுப்பதில்லை. 


அப்பிடி ரெண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மலையாளி சேட்டன், ஒரு பிலிப்பைனி'யை ஏர்போர்ட்டில் விட சென்றபோது, இத கவனித்த பஹ்ரைனி டேக்சி'காரன் ஏர்போர்ட்டில் அந்த மலையாளியை பிடித்து ரத்தம் வர அடிக்க, போலீஸ் வந்து விசாரிக்க. பஹ்ரைனி [[போராட்ட பிரிவை சேர்ந்தவர்]] சொன்னான் இவன் கள்ள டேக்சி ஓட்டுகிறான் இதோ இவனை பிடித்து கொண்டு போ என்றிருக்கிறான். போலீஸ் மலையாளியிடம் விசாரிக்க, நான் கள்ள வண்டி ஒட்டவில்லை என் நண்பனைதான் விடவந்தேன் சரி அப்பிடியே நான் கள்ளவண்டி ஓட்டினாலும், இவன் என்னை போலீசில் ஒப்படைக்காமல் ரத்தம் வரும் படி எப்படி அடிக்கலாம் என கேட்க்க, போலீசுக்கு கோபம உச்சிக்கு ஏற பஹ்ரைனி வண்டிகாரனை துவைத்து [[போராட்ட கடுப்பு]] எடுத்திருக்கிறார்கள் [[நோட் பண்ணிக்கோங்க எமெர்ஜென்சி அமலில் இருக்கு]]

 பின்பு மலையாளியிடம் அவன் அடித்தால் ஏன் நீ திருப்பி அடிக்க வேண்டியதுதானே'ன்னு சொல்லி சரி நீ போ என சொல்லி அனுப்பி விட்டு, பஹ்ரைனியை அள்ளி வேனில் வீசி அவன் காரை லாக் செய்து மேரூல் போலீசுக்கு தகவல் சொல்லி போனார்களாம். கள்ளவண்டி பார்ட்டிங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காங்க....ஸோ என்ன சொல்ல வர்றேன்னா இப்போ போராட்டகாரங்களுக்கு உள்ள மரியாதையும் போச்சு. வேலையும் போச்சு. இவர்கள் உங்களை [[இந்தியர்கள், பங்காளிகள், பாகிஸ்தானி]] தாக்கவோ, கேவலமாக பேசவோ செய்தால் திருப்பி தாக்குங்கள் என்ற பேச்சு ரகசியமாக சொல்லபடுகிறது. 

சரி அடுத்து ஒரு செய்தி நம்ம 'உணவு உலகம்' சங்கரலிங்கம் ஆபீசருகிட்டே இது போல கேசுகள் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்.



நண்பன் ஒருவன் [[பஹ்ரைன்லதான்]] ஜூஸ் குடிக்க போன போது, ஜூஸை குடுத்து விட்டு ஸ்ட்ரா'வை டிஷுவில் பொதிந்து கொடுக்க, நண்பன் ஏற்கனவே எச்சரிக்கை முத்தண்ணா அவன் அந்த ஸ்ட்ரா'வை ஊதி பார்த்தானாம், அப்போ உள்ளே இருந்து புழுக்கள் குடும்பமாக வெளியே வந்துருக்கிறது...கோபமாக ஷாப்பில் கேட்டால் பதிலில்லை....!!! அன்றையில் இருந்து இன்று வரை ஜூஸ் என்றாலே அலறி ஓடுகிறான்......ம்ம்ம்ம் பார்த்து குடிங்க மக்கா...