Tuesday, July 5, 2011

கூகுள் இந்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்தது

கூகுள் இணையத்தளம் கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில் இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது.
 

இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில் இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல்துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது.

அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகுள் கூறியுள்ளது.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறித்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூடியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை(blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.

அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகுள் கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில் 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்த வரை தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே போல் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நாடுகளில் இருந்தும் கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் வெளியிட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

நான் 24 வயது இளம்பெண்.இப்போது அப்படி இல்லை

எனக்கு வயது 24. தபாலில் இளங்கலை நிர்வாகவியல் படித்து வருகிறேன். சமீபத்தில், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் தாயை தவிக்கவிட்டு, வீட்டை விட்டு ஓடிவந்து நடந்ததுதான் என் திருமணம். இரண்டு வருடக் காதல். ஒரே ஆபீசில் ஒன்றாக வேலை பார்த்ததில் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியது. காதல் வீட்டுக்கு தெரியவர, என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர்.

கொஞ்ச நாளிலேயே, என் திருமண வாழ்வு கசந்தது. கோவிலுக்கு செல்லும் போது, எனக்கு ஒரு, "ராங் கால்' வந்தது; அன்றிலிருந்து எனக்கு பிடித்தது சனி. அதன்பின், எதற்கெடுத்தாலும் சந்தேகம். பொம்பளைகளிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் பேசக்கூடாது என்பான் என் கணவன். ஆபாசமாக திட்டியவன், கை நீட்டவும் ஆரம்பித்தான்.

அவனும் வேலைக்கு செல்லவில்லை; என்னையும் அனுப்பவில்லை. என் மாமியாரையும் அடித்து விரட்டி விட்டான். என் நகைகளை அடகு வைத்து, குடும்ப செலவை சமாளித்தான். அவனுக்கு, சாமி நம்பிக்கை அதிகம். நள்ளிரவில் கொட்ட, கொட்ட விழித்திருந்து, நான் நடத்தை கெட்டவளா, இல்லையா என்று திருவுளச்சீட்டு போட்டு பார்ப்பான். ஒரு தடவை எலி விஷம் சாப்பிட்டு மிரட்டினான். அவனை கண்டித்து வைக்க என் மாமாவை வரவழைத்தேன். எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்; தேடி பிடித்து, வீடு சேர்த்தார் மாமா.
கர்ப்பமானேன். என் கர்ப்பத்துக்கு யார் காரணம் என, திருவுளச்சீட்டு போட்டு பார்த் தான். "குழந்தையை கலைச்சிடு...' என்றான். கலைத்து விடும் யோசனையை அவனுக்கு தந்தது அவனது நண்பன். நானும் குழந்தையை கலைக்க முயற்சித்தேன்; தலை பிள்ளையை கலைக்கக் கூடாது எனக் கூறி, என்னை அமைதி படுத்தினாள் மச்சான் பொண்டாட்டி. மாமியார், குறி கேட்டு வந்து, வீடு சரியில்லை என சொல்ல, என் நகைகளை அடகு வைத்து, புது வாடகை வீடு மாறினோம்.

ஒரே நாளில், நாலு வித மனிதனாய் இருப்பான்; சந்தேகப்படாத தருணங்களில் அன்பை அள்ளி கொட்டுவான். ஒரு தடவை என்னை வீட்டை விட்டு விரட்டினான்; மாமியார் வீட்டில் தஞ்சம் புகுந்தேன். அவனுக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதால், மீதியிருந்த நகைகளை அடகு வைத்து, பேயை விரட்டினோம்.
இவ்வளவு நடந்தும் கணவனின் துர் நடத்தையை என் வீட்டிற்கு தெரியபடுத்த வில்லை. என் அம்மா அவ்வப்போது சமைத்து வந்து கொடுத்தும், கை செலவுக்கு பணம் கொடுத்தும் போனார். சில வாரங்களுக்குப் பின், மீண்டும் அவன் மண்ணென்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தான்.

அவன் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார் என் அம்மா. இளஞ்ஜோடியை பிரிக்க வேண்டாம் என்று அவர்கள் விட்டு விட்டனர்.

கொஞ்ச நாள் நன்றாக இருந்தான். ஆனால், என்னிடம் குடும்பம் நடத்துவது எப்படி என்பதை, நண்பனை போனில் கேட்டுதான் செய்வான். என்னுடைய பெயரை சொல்வதை விட, அவன் பெயரைத்தான் அதிகம் சொல்வான்.
சிறு இடைவெளிக்கு பின், மீண்டும் ஏச்சு பேச்சு, அடி உதை ஆரம்பித்தது. அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். "வீட்டுக்கு வா...' என்றான்; "நீ திருந்து, நான் வர்றேன்...' என்றேன். அன்று இரவே என்னை மிரட்டுவதற்காக விஷம் குடித்து விட்டான். அவன் நண்பன் தான் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளான். போலீஸ் கேஸ் ஆகிவிடும் என நண்பன் ஓட, கணவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறான்; வலிப்பு வந்திருக்கிறது. கடைசியில் உயிர் பிரிந்து விட்டது. உடலை கையெழுத்திட்டு வாங்கி, நல்லடக்கம் செய்தேன்.

என்னால் அவனை மறக்க முடியவில்லை. தாயின் வற்புறுத்தலால் கருவை கலைத்து விட்டேன். மூணு மாதம் தான் என் காதல் திருமண வாழ்க்கை. கடவுள் எனக்கு மட்டும் ஏன் நல்ல கணவன், குழந்தை கொடுக்கவில்லை.

பாதியில் நிறுத்திய படிப்பை படிக்க ஆரம்பித்துள்ளேன்; படிக்க பிடிக்கவில்லை. அவன் இல்லாத உலகத்தில் எனக்கென்ன வேலை? அம்மா... நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள்.

— இப்படிக்கு,சாவின் விளிம்பில் நின்றிருக்கும்,அன்பு மகள்.

உன் கடிதத்தைப் படித்த போது, உன் அறியா மையை நினைத்து வருத்தப்படத்தான் முடிந்தது.
நீ ஒரு பைத்தியக்காரப் பெண். எது நன்மை, எது தீமை என, பகுத்தறியும் அறிவு உன்னிடம் இல்லை. கணவன் என்ற சைக்கோவுடன், மூன்று மாதம் தான் வாழ்ந்திருக்கிறாய்; மூன்று மாதங்களில், முன்னூறு வருடங்களுக்கு போது மான வேதனைகள், இழிவுகள், அவமானங்கள், வலிகள், காயங்கள் பட்டிருக்கிறாய். சினிமா பார்த்து, பார்த்து குட்டிச்சுவராகி நிற்கிறாய். எதற்கு படைக்கப் பட்டோம் என்பதை உணராமல் இருக்கிறாய். உயர்கல்வி படித்து, நல்ல வேலைக்குக் போய், நல்ல ஆணை மணந்து, ஐம்பது வருட தாம்பத்யம் நடத்த வேண்டும். வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒவ்வொரு வரும் அவரவர் அளவில், ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி விட்டு போக வேண்டும் என தெரியாதவள் நீ.

உன் கணவன் போன்றோர், காதலியை சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் துர்குணம் உடையவர்கள். உன் கணவனின் நண்பன்தான், உன்னை அடைய வேண்டும் என்ற வெறியில், உன் கணவனைத் தற்கொலை செய்ய வைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது.

உன் காதல் கணவன், வேறு யாரையும் காதலித்து மணந்திருந்தாலும், அப்பெண்ணுக்கும் இதே கதிதான். மனைவியை வன்கொலை செய்து விட்டு, தற்கொலை செய்திருப்பான் உன் கணவன். உன் கணவனுடைய மரணத்திற்கு, நீ எந்த விதத்திலும் காரணமாக மாட்டாய்; குற்ற உணர்ச்சி கொள்ளாதே!

திருவுளச்சீட்டு போட்டு பார்த்தல், பேய் பிடித்த மாதிரி நடித்தல், தற்கொலை முயற்சிகள் தொடர்ந்து அரங்கேற்றுதல் போன்ற பல கோணங்கித்தனங்களும் உன் கணவனிடம் உண்டு.

சந்தேகப் பேய் பிடித்த கணவன் தொலைந்தான்; சந்தேகப் பேயின் வாரிசும் தொலைந்தது என, நிம்மதி பெறு.

உன் தற்கொலை எண்ணம், உன் கணவனிட மிருந்து தொற்றிக் கொண்டதோ?
கணவன் சம்பந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும், கடிதங்கள் இருந்தால் கடிதங்களையும் எரி. தினம், "இறந்து போன கணவன், தன் தீய குணத்தால் இருவர் வாழ்க்கையையும் சீரழித்து விட்டான்; இனி, அவனை கனவிலும் எண்ணாதிருப்போமாக...' என, சுயவசியம் மேற்கொள்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகளே...

தொலைதூர கல்வி மூலம் படித்து முடி. நல்ல வேலைக்கு போ. உன் தாயாரை உடன் வைத்து, அவர்களை மகிழ்ச்சிப் படுத்து. அம்மா சுட்டிக் காட்டும் ஆணை மறுமணம் செய்து, உன் வாழக்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொள்.

USB 3.0 க்கு இவ்வளவு வேகமா? நம்ப முடியவில்லை

கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி. சாதனங்களே. கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன

 

 தற்போது யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனைப் பயன்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் சில இங்கு தரப்படுகின்றன.

Universal Serial Bus என அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம் 1996 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2000ல், யு.எஸ்.பி.2 அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது யு.எஸ்.பி. 3 அறிமுகப்படுத்தப் பட்டு அதிக வேகத்திலும் எளிமையான வழியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரப்பட்டுள்ளது.

யு.எஸ்.பி.3, அதன் முன்னோடியான யு.எஸ்.பி.2க் காட்டிலும் பத்து மடங்கு வேகமாக இயங்குகிறது. இந்த வேக அதிகரிப்பு சில சாதனங்களில் நாம் உணரா முடியாத அளவிற்கு படு வேகமாக உள்ளது. போர்ட்டபிள் மற்றும் எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க்குகள் செயல்பாட்டில் இவற்றை நாம் உணரலாம். மிகப் பெரிய அளவிலான மியூசிக் மற்றும் வீடீயோ பைல்களை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிப் பார்க்கையில், இந்த இரண்டு தொழில் நுட்ப இயக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டினை உணரலாம்.

யு.எஸ்.பி. 3, ஒரு நொடியில் 5 கிகா பிட்ஸ் தகவல்களை மாற்றுகிறது. யு.எஸ்.பி.2, ஒரு நொடியில் 480 மெகா பிட்ஸ் தகவல்களையே கடத்துகிறது. இதனால் யு.எஸ்.பி.2 மூலம் 15 நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தினை, யு.எஸ்.பி.3 மூலம் ஒரே நிமிடத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த இரு வகை சாதனங்களில் பயன்படுத்தப்படும் கேபிள் வயரிங் அமைப்பு வேறுபட்டிருந்தாலும், யு.எஸ்.பி. சாதனத்தை மற்ற சாதனங் களுடன் இணைக்கும் வழி இரண்டிலும் ஒரே மாதிரியாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன. இதனால், செயல்பாட்டிலும், வடிவமைப்பிலும் இரண்டையும் ஒன்றின் இடத்தில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் செயல்பாட்டினைப் பொறுத்த வரை, இரு சாதனங்களுக் கிடையே டேட்டா பரிமாற்றம் ஏற்படுகையில், ஒன்று மட்டும் வேகமாகச் செயலாற்றினால் போதாது. இரண்டு சாதனங்களும், ஒன்றின் வேகத்திற்கு இன்னொன்றும் இணைந்து செயலாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, பழைய கம்ப்யூட்டரில், யு.எஸ்.பி. 3 சாதனம் இணைக்கப்படுகையில், கம்ப்யூட்டரின் செயல் திறன் மெதுவாக இருந்தால், யு.எஸ்.பி.2 வேகத்திலேயே புதிய யு.எஸ்.பி.3 இயங்கும்.

இந்த இரண்டு தொழில் நுட்பங்களுக் கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு, டேட்டா செல்லும் பாதை தான். யு.எஸ்.பி.3 டேட்டாவை அனுப்பும் அதே நேரத்தில், டேட்டாவினைப் பெறவும் முடியும். ஆனால் யு.எஸ்.பி.2 ஏதேனும் ஒரு திசையில் தான் ஒரு நேரத்தில் டேட்டாவை அனுப்ப முடியும். இதனை ஆங்கிலத்தில் polling mechanismUSB2 என்றும் asynchronous mechanism USB3 என்றும் கூறுவார்கள். இந்த முன்னேறிய தொழில் நுட்பம் ஹார்ட் டிஸ்க்குகளுக்கிடையே டேட்டாவினைப் பரிமாறிக் கொள்கையில் மிக உதவியாக இருக்கும்.

யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் ஒரே நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் யு.எஸ்.பி. சாதனங்களை இயக்கும் திறன் கொண்டது. இதனால், அதிக எண்ணிக்கையில் யு.எஸ்.பி. போர்ட் கொண்ட யு.எஸ்.பி. ஹப்களைப் பயன்படுத்தலாம்.

கூகுள் ப்ளஸ் - க்கு பேஸ்புக் போட்டியா?.

இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக “கூகுள் பிளஸ்” என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளஸ்… குவியும் ஆதரவு… திணறும் சர்வர்!

பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள கூகுள் ப்ளஸ் சேவையின் சோதனை ஓட்டமே பெரும் வெற்றியாக அமைந்துள்ளது.இந்த சமூக தளத்தில் இணைய லட்சக்கணக்கான மெயில்கள் குவிந்துவிட்டன. இதன் விளைவு, கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு திணறிவிட்டது.


எனவே, ‘மன்னிக்கவும், அழைப்பு அனுப்ப முடியாத அளவுக்கு வாடிக்கையர் மெயில்கள் குவிந்துவிட்டன. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளஸ் செயல்படும்’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் சமூகத் தள பொறுப்பாளர் குண்டோத்ரா.

பல கோடி பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், தாங்கும் அளவுக்கு இந்த கூகுள் ப்ளஸை பலமான தளமாக உருவாக்கி வருகிறது கூகுள்.பேஸ்புக்கில் வருவதுபோன்ற ஸ்பேம் செய்தி தொல்லைகள் இந்த கூகுள் ப்ளஸில் இல்லாத அளவுக்கு கோடிங் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் இயங்கு தளத்தில் செயல்படும் ஐபோன்களுக்காகவே மொபைல் கூகுள் ப்ளஸ் என்ற மென்பொருளையும் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.முழுமையாக கூகுள் ப்ளஸ் பயன்பாட்டுக்கு வரும் தருணத்தில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் இரண்டுமே பெரும் சரிவைச் சந்திக்கும் என்று இப்போது கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன சைபர் உலக ஜாம்பவான் நிறுவனங்கள்.

விஷால் கின்னஸ் சாதனைக்கு முயற்சி

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், “அவன் இவன்” மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பாலா இயக்கத்தில் நானும், ஆர்யாவும் இணைந்து நடித்த “அவன் இவன்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.அந்த படத்தில் நான் 200 நாட்கள் நடித்தேன். அதுவும் ஒன்றரை கண் ஆசாமியாக. அப்படி நடித்தபோது எனக்கு ஏற்பட்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் கண் வலி மற்றும் தலை வலி தாங்க முடியாமல் அழுது இருக்கிறேன்.
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன். இதுதான் என் கடைசி படம் என நினைத்து நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் நடித்தபோது, உயிர் போய் விட்டதாகவே நினைத்தேன். எவ்வளவு சிரமமான காட்சியில் நடித்தாலும், பாலா யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். அவன் இவன் படத்தில், 70 அடி உயர மரத்தில் நான் எந்த பிடிமானமும் இல்லாமல் நடப்பது போல் ஒரு காட்சி. அதுவும், ஒன்றரை கண் உள்ளவனாக நடித்தேன். படத்தில் அது 400 அடி நீளம் வரும்.


அந்த காட்சியை டப்பிங்கில் பார்த்துவிட்டு பாலா அழுது விட்டார். தியேட்டருக்கு வெளியே வந்து, எப்படிடா நடிச்சே? என்று கேட்டு என் முதுகில் பலமாக அடித்துவிட்டு, சூப்பர்டா என்று பாராட்டினார். ஒன்றரை கண் உள்ள மனிதனாக இதுவரை யாரும் நடிக்கவில்லை என்பதால், கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அதற்கான முயற்சி நடக்கிறது.

அவன் இவன் படத்தில் நான் நடிப்பதற்கு ஆர்யா தான் காரணம். 16 வருடங்களாக நாங்கள் இருவரும் நண்பர்கள். அவன் ஒரு அதிசயப்பிறவி. அவனுக்கு கர்வம், தாழ்வு மனப்பான்மை இரண்டும் கிடையாது. சில காட்சிகளில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் பொறாமைப்படவில்லை. இந்த படத்தில் நடித்த பிறகு, இனிமேல் எப்படிப்பட்ட படங்களில் நடிப்பது? என்று தோன்றாமல் கதை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.

ஒரு மாறுதலுக்காக, பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறேன். இது, “சவுர்யம்” என்ற தெலுங்கு படத்தின் தழுவல். இப்போதைக்கு “பிரபாகரன்” என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்துக்காக, நான் அவசரப்படவில்லை. இன்னும் 2 வருடங்கள் போகட்டும் என்று விட்டுவிட்டேன் என்றார்.

நேரத்தை நினைவு படுத்த மென்பொருள்

வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை ஞாபமாக மறந்துவிடுவோம்.தண்ணீர் மோட்டர் போட்டால் ஆப் செய்ய மறந்துவிடுவோம். பாலை அடுப்பில் வைத்து


மறந்துவிடுவோம்.அரைமணிநேரம் கழித்து எனக்கு போன் செய் என்று யாராவது சொன்னால் அதனையும் மறந்துவிடுவோம்.இந்த எல்லா வேலைகளையும் இணையத்தில் - கம்யூட்டரில் பணிசெய்கையில் அடிக்கடி நடக்கும்.நேரம்காலம் போவது தெரியாமல் கம்யூட்டரிலே மூழ்கிவிடுவோம். இனி அந்த கவலைவேண்டாம். நமக்கு நமக்கு தேவையான நேரத்தை நினைவுபடுத்த இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும்.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும்.இதை ரன் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ வரும்.

இதில் தேவையான நேரத்தை செட் செய்து கடிகாரத்தை ஓட விடுங்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியதும் உங்களுக்கு அலாரத்துடன் இந்த செய்திகிடைக்கும்.
 
நேரத்திற்கு டீ சாப்பிட என்று இந்த சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்கள். நாம் தண்ணீர் மோட்டர் ஆப் செய்ய - பாலை அடுப்பில் இருந்து இறக்க - போன்செய்ய- என எதற்கு வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும்
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.