Monday, June 6, 2011

விண்டோஸ் 7ல் பூட்டிங் திரையை மாற்றம் செய்ய


விண்டோஸ்7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பூட் ஆகும் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இதற்கு இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறன அதில் ஒன்றுதான் இந்த Boot Updater மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் பூட்டிங் திரையை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மேலும் கணினி தொடங்கும் திரையையும், கணினிமூடும் திரையையும் வேறுபடுத்தி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன், பூட் ஆகும் திரையின் பின்புறத்தின் கலர், எழுத்து மற்றும் எழுத்தினுடைய அளவு போன்றவற்றை மாற்றியமைத்துக்கொள்ள  முடியும். மென்பொருளின் உதவியுடன் பின்புறத்தில் படத்தினையும் கொண்டுவர முடியும். வேண்டுமெனில் அனிமேஷன் பைலையும் திரையில் கொண்டுவர முடியும். படத்தை வேண்டிய இடத்தில் வைத்துக்கொள்ளவும் இந்த மென்பொருளில் வசதி உள்ளது.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த மென்பொருளின் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் வரிசையில் Run as administrator என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பபடி தேர்வுகளை தேர்வு செய்து கொள்ளவும். பின் Apply என்னும் பொத்தானை அழுத்தி சேமித்துக்கொள்ளவும். பின் உங்களுடைய கணினியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது தோன்றும் விண்டோவில் நீங்கள் செய்ய மாற்றங்களுடன் பூட்டிங் திரையானது தோன்றும்.


அவ்வளவு தான் இப்போது நீங்கள் விரும்பியவாறு பூட்டிங் திரையானது தோன்றும். ஒரு முக்கியான விஷயம் என்னவெனில் இந்த செயலை செய்யும் போது கவனமாக செய்யவும். இல்லையெனில் கணினி பூட் ஆகுவதிலேயே சிக்கலாகிவிடும். கவனமாக இந்த செயலை செய்யவும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32, 64) பிட்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். மேலும் விண்டோஸ்7 SP1(32,64) பிட்களிலும் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். 

பூட்டிங் திரையினுடைய கலர், எழுத்து, படம், அனிமேஷன் மற்றும் எழுத்தின் அளவு போன்றவற்றை மாற்றம் செய்ய இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகும். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் பதிலை கூறவும்.

பூட்டபிள் விண்டோஸ்7 ப்ளாஷ்ட்ரைவினை உருவாக்க

கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ பல்வேறு வழிகள் உள்ளன, கணிப்பொறியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை சீடி/டிவிடி, ப்ளாப்பி, ப்ளாஷ்ட்ரைவ், ஈத்தர்நெட் போன்ற வழிகளில் நிறுவிக்கொள்ள முடியும். இதில் பெரும்பாலும் சீடி/டிவிடிக்களை பயன்படுத்தியே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுகிறனர். ப்ளாப்பியானது காலபோக்கில் மறைந்து விட்டது, தற்போது ப்ளாப்பியினை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் ஈத்தர்நெட் மூலமாக ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவ முடியும். ப்ளாஷ் ட்ரைவினை பயன்படுத்தி எவ்வாறு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவுவது என்று கீழே பார்ப்போம். நம்முடைய நண்பர்களின் கணினியில் சீடி/டிவிடி ட்ரைவானது இருக்காது, இல்லை பழுதடைந்து இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் அந்த கணினியில் ப்ளாஷ் ட்ரைவ் மட்டுமே இயங்கும். அந்த நிலையில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டுமெனில் என்ன செய்வது, ஒரே வழிதான் ப்ளாஷ் ட்ரைவ் மூலமாக மட்டுமே கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ முடியும். இல்லையெனில் புதியதாக சீடி/டிவிடி ட்ரைவை கணினியில் இணைத்து ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவ வேண்டும். சில நாட்களுக்கு முன்பு வாசகர் ஒருவர் பெண்ட்ரைவினை பயன்படுத்தி கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களை நிறுவுவது என்று வினவினார். இதோ அதற்கான பதில்.

முதலில் Windows 7 USB/DVD Download tool என்ற மென்பொருளைஇணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

லைசன்ஸ் கீயுடன் அனைத்து சாப்ட்வேர்களும் இலவசம்

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும். ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே

இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.

சாப்ட்வேர் இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தொலைபேசி அழைப்பு எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய





தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.

அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.













இணையதள முகவரி செல்ல













Downloads:


மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற





இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.comஇதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும்

லேப்டாப் பேட்டரி doubler software





லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின்

திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு



எளிதானது




Sunday, June 5, 2011

இலவச “லேப்-டாப்” திட்டத்துக்கு ரூ.291 கோடி ஒதுக்கீடு



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளார்.

பதவி ஏற்பு அன்றே இலவச அரிசி, தாலிக்கு தங்கம் உள்பட 7 நலத்திட்டங்களுக்கு உத்தரவிட்டு ஜெயலலிதா கையெழுத்திட்டார். மீதம் உள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தந்த துறை சார்பில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து பிளஸ்-1, பிளஸ்-2, மாணவ -மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாணவ-மாணவிகளுக்கு இலவச “லேப்-டாப்” வழங்கும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

ஜூன் முதல் ஆகஸ்டு வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ -மாணவிகளின் முழுமையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர தரமான “லேப்-டாப்” வழங்குவது, இதற்காக தேவைப்படும் நிதி ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 14 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் அனைவருக்கும் லேப்-டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முழுமையான எண்ணிக்கை தெரிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும்.

இது தவிர 10-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியை மாணவர்கள் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் திருமண உதவி திட்டத்தில் இனி தாலிக்கு தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10-வது வகுப்பு வரை படித்த ஏழை பெண்களுக்கு திருமண உதவி நிதி ரூ.25 ஆயிரத்துடன் தாலி செய்ய 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தில் உதவி பெற முடியும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 69 ஆயிரத்து 832 பெண்கள் பண உதவி பெற்றனர். தற்போது தாலிக்கு தங்கமும் வழங்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு இதற்கு ரூ.291 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.