இங்கிலாந்து பெண்கள் தங்கள் கைப்பைகளில் செக்ஸ் பொம்மைகள் முதல் அழுகிய மீன் வரை வைத்திருக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பெண்களின் கைப்பையை திறந்து பார்ப்பது அநாகரீகம். அவர்கள் தங்கள் கைப்பையில் அப்படி என்ன தான் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஆண்களுக்கு அவ்வளவு ஆர்வம்.
இந்நிலையில் இங்கிலாந்து பெண்கள் தங்கள் கைப்பைகளில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
கணக்கெடுப்பில் கால்வாசிப் பெண்கள் தங்கள் கைப்பையில் மாற்று உடை வைத்துள்ளனர், 2 சதவீதம் பேர் ரகசியமாக பாலியல் பொம்மைகள் வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதில் விந்தை என்னவென்றால் பலருக்கு தங்கள் கைப்பையில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனென்றால் 68 சதவீத பெண்கள் தங்கள் கைப்பையை காலி செய்வதே இல்லை.
பெரும்பாலான பெண்களின் கைப்பைகளில் மேக் அப் ஐட்டங்கள், செல்போன் மற்றும் பர்ஸ் இருக்கிறது. 80 சதவீத பெண்கள் மேக் அப் ஐட்டங்களோடு சாவிகள், சீப்பு, டிஷு பேப்பர், வலிநிவாரணி மாத்திரைகள், கண்ணாடி மற்றும் குடை வைத்துள்ளனர்.
2 சதவீத பெண்கள் மீதமுள்ள உணவை கைப்பையில் வைக்கின்றனர். தனது கைப்பையில் அழுகிய மீன் கிடந்ததாக ஒரு பெண் தெரிவித்தார். 27 சதவீத பெண்கள் ஹேர் ஸ்ட்ரெய்ட்னரும், சிலர் செக்ஸ் பொம்மைகளும் வைத்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் 500 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 68 சதவீதம் பேர் தங்கள் கைப்பையை காலி செய்வதே இல்லை. சாவி, செல்போன் அல்லது பர்ஸ் காணவில்லை என்றால் மட்டும் கைப்பை கவிழ்த்துப் பார்ப்பார்களாம்.
|
No comments:
Post a Comment