நெம்பர் ஒன் பதிவர் ஆக சில குறுக்கு வழிகள்.
1.பைக்,ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் செய்யும் கடைக்கு
போகவும்,அங்கே நெம்பர் ஒன் பதிவர் எனும் நேம் பிளேட் ஆர்டர் செய்யவும்.
அதைக்கொண்டு வந்து வீட்டு வாசலிலோ ஆஃபீஸ் வாசலிலோ மாட்டிக்கொள்ளவும். பார்க்கறவங்க நீங்கதான் நெம்பர் ஒன் பதிவர் னு நம்பிடுவாங்க.
2. மிட்நைட் 1 மணிக்கு அல்லது மதியம் 1 மணிக்கு பதிவு போடும்
பழக்கத்தை வைத்துக்கொள்ளவும்.அட,இவரு (எவரு?) ரெகுலரா
ஒன் ஒ க்ளாக்கிற்கு பதிவு போட்றாரே,என சிலாகித்துப்பேசி,காலப்போக்கில்
3. டாக்டர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் மனித உடலுக்கு
நல்லது என அட்வைஸ் பண்றாங்க.நீங்கள் இனிமேல் தினமும் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.இதுல 2 மாங்கா அடிக்கலாம். 1.உடல்ல கிட்னில கல் வராது 2,அடிக்கடி நெம்பர் ஒன் போக பாத்ரூம் போவீங்க..அப்போ நீங்க
நெம்பர் ஒன் பதிவர் என ஆட்டோமேட்டிக்கா,டாக்ஸிமேட்டிக்கா ஆகிடுவீங்க.
4. நீஙக எந்த வேலைல இருந்தாலும் சரி,உடனே அதை ரிசைன் பண்ணிடுங்க..
சொந்தத்தொழில் பண்றவரா இருந்தா அதை இழுத்து மூடிடுங்க.நமக்கு
ஏதாவது ஒன்னுலதான் முழு கவத்தையும் வைக்க முடியும்.
முழு மூச்சா பதிவு போடறதைப்பற்றியே சிந்திக்கனும்.
5. நீங்க கல்யாணம் ஆனவரா?உடனே உங்க மனைவியை டைவர்ஸ்
பண்ணிடுங்க.ஏன்னா அவங்க நச்சரிச்சுட்டே இருப்பாங்க.எப்ப பாரு கம்ப்யூட்டர், நெட்தானா?குடும்பத்தை கவனிக்க மாட்டீங்களா? என டார்ச்சர் பண்ணீட்டே இருப்பாங்க.கல்யாணம் ஆகாதவரா?அப்போ கண்டிப்பா ஒரு லவ்வர் அல்லது பல லவ்வர் இருக்கும்.தமிழ்ப்படத்துல வர்ற மாதிரி (லேட்டஸ்ட் உதாரணம் சிக்குபுக்கு) உங்க காதலியை யாருக்காவது தாரை வார்த்து குடுத்துடுங்க.எந்தத்தொந்தரவும் இல்லாம இனி பதிவு போடலாம்.மனைவியை டைவர்ஸ் பண்ணிட்ட்டா சாப்பாட்டுக்கு?
நமக்கு சோறா முக்கியம் ? பேருதான் முக்கியம்.
6. யாரையாவது வம்புச்சணடைக்கு இழுக்கவும்.பிரபலமான பதிவர் தளத்துக்கு போகவும். அவங்க பதிவு எவ்வளவு சூப்பரா போட்டிருந்தாலும் அதைப்பற்றி எதுவும் சொல்லாம அவங்க பர்சனல் லைஃப் பற்றி ஏதாவது வம்பு இழுக்கவும்.பார்ட்டி கோபம் ஆகி உங்களைத்திட்டி ஒரு பதிவு போடுவார்.உங்க பிளாக்கிற்கு லிங்க்கும் கொடுப்பார்.இப்போ அவர் பிளாக் வர்ற ரெகுலர் ஆளுங்க நம்ம பிளாக்கும் வர ஆரம்பிப்பார்.
7.யாராவது உங்க பிளாக்கில் பதிவுக்கு கமெண்ட் போட்டா பொத்தாம் பொதுவாக கமெண்ட் போட்ட 12 பேருக்கும் நன்றி என பின்னூட்டம் போட வேணாம்.தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றி என கமெண்ட் போடவும்.இதனால் நிறைய கமெண்ட் சேர்ந்து விடும்.அது உங்களை நெம்பர் ஒன் பிளாக்கர் ஆக்கி விடும்.
8.உங்கள் பர்சனல் சேட்டிங்கை பின்னூட்டத்திலேயே நடத்தலாம்.யாராவது கமெண்ட் போட்டா அப்புறம் மாப்பு சாப்பிட்டியா?படத்துக்கு போலாமா என மொக்கை போடவும். அதைக்கண்டித்து யாராவது கமெண்ட் போட்டா மாட்டிக்கிச்சு பட்சி,அவரை திட்டி ஒரு பதிவு போடுங்கள்.பிரபலம் ஆகிடலாம்.
9.ஏதாவது ஒரு தமிழ் சினிமாவை வாய் கூசாமல் புகழவும்.அதில் நடித்த+
பங்கு பெற்றவர்கள் அனைவரும் உங்க பிளாக்கிர்கு வருவாங்க.ஹிட்ஸ் ஏறும்.
10. வே டூ ஃப்ரீ எஸ் எம் எஸ் . காம் போய் பதிவுலகில் உள்ள 1456 பதிவர்கள்
செல் நெம்பரையும் ஸ்டோர் பண்ணிக்கொள்ளவும்.பிறகு குரூப் மெசேஜ்
அனுப்பவும்.மாப்ளை நான் வெளில இருக்கேன்,என் பிளாக் ஸ்டேட்டஸ் சொல்லுங்க என் மெசேஜ் அனுப்பவும்.அதில் 10% பேராவது உங்க பிளாக் போவாங்க 145 விசிட்டர்ஸ் எக்ஸ்ட்ராவா கிடைப்பாங்க.ஹிட்ஸ் அதிகம் ஆகும்.
11. சினிமா ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி பெண்களின் கவனத்தை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.உங்கள் பிளாக்கிற்கு பெண்களே வருவதில்லையா? (எப்படி வருவாங்க?பிட்டுபட விமர்சனம் போட்டா?) அவங்களை வர வைக்க ஒரு ஐடியா. உங்க பிளாக்கில் எஸ் கே அல்லது வந்தே மாதரம் சசி உதவியுடன் ஒரு கண்ணாடியை ஃபிக்ஸ் செய்யவும்.மேக்கப் போடவாவது வருவாங்க.
12. தமிழனோட நாடித்துடிப்பே சாப்பாட்லதான் இருக்கு,வாரம் ஒரு சாப்பாடு பதிவு போடவும். அழையா விருந்தாளியாய் கல்யாண மண்டபத்துக்குபோய் ஓ சி சாப்பாடு சாப்பிட்ட அனுபவம் ஏதாவது எழுதவும்,பதிவு செம ஹிட் அகிடும்.
13. கிசு கிசுவை ரசிக்காத ஆட்களே இங்கே கிடையாது.சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சுருந்தாங்க?அந்த காரை வெச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்காங்க என்ற கரகாட்டக்காரன் காமெடி ஹிட் ஆனதை மனதில் நிறுத்திக்கொண்டு கோடம்பாக்கத்தில் யரு யாரை வெச்சிருகாங்க என புலனாய்வு செய்து ஒரு பதிவு போடவும்.
அடித்துப்பிடித்துக்கொண்டு ஆட்கள் வருவாங்க.சூப்பர் ஹிட் ஆகிடும் பதிவு
14.நாம் எல்லாத்தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் போட்டால்தான் அவர்கள் பதில் மொய் வைக்க நம்ம பிளாக்கிற்கு வருவாங்க,ஆனா நமக்கு நேரம் கிடைக்காது,அதனால் ஒரு லேடியை 1000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு (மட்டும்) வைத்துக்கொள்ளவும்.உங்க யூசர் நேம், பாஸ்வோர்டு குடுத்து விடவும். 5 டெம்ப்ளேட் கமெண்ட் ரெடி பண்ணிக்கொள்ளவும்.
1.உங்க பதிவு சூப்பர் 2.ஆஹா அருமை. 3,சூப்பர் பதிவு தல 4.எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது? 5 ப்ளீஸ் விசிட் மை பிளாக்
மேலே சொன்ன கமெண்ட்ஸை போட்டு ஓட்டும் போட்டு வரவும்.ஒரு நாளில் 350 பின்னூட்டம்
போடலாம்.10 % திரும்பி வந்தாலே நமக்கு லாபம் தான்.
டிஸ்கி - மேலே சொன்னவை அனைத்தும் கேனத்தனமான ஐடியாக்களே.கண்ட நாய் பேச்சை எல்லாம் கேக்காம எப்பவும் போல் பதிவு போடவும்,ஹிட் ஆனா ஆவுது,இல்லைன்னா போவுது.
நம்ம நிம்மதியான வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்.
|
No comments:
Post a Comment