நயன்தாராவின் சினிமா வாழ்க்கைக்கும், குடும்பத்துக்கும் நெருக்கமான சிலரிடம் இதுபற்றி நாம் துருவியபோது, புலம்பலின் பூர்வீகத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்கள். ''கேரளாவில் உள்ள திருவல்லாதான் நயன்தாராவின் சொந்த ஊர். அவரது வீட்டில் மூன்று காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது. அப்படியிருந்தும், சமீபத்தில் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை நயன்தாரா வாங்கினார். அதையும் தவணை முறையில் பணம் கட்டுவதாகச் சொல்லித்தான் வாங்கினார். என்ன காரணமோ... அந்தத் தவணைத் தொகையை நயன்தாரா சரிவரக் கட்டவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டையே முற்றுகையிட்டார்கள்...'' எனச் சொன்னார்கள்.
பொம்பளை சகவாசத்தால் சம்பாதிச்ச சொத்தை எல்லாம் இழந்துட்டானே...' என்று பொதுவாக ஆண்களைத்தான் சொல்வார்கள். ஆனால், 'ஆம்பளை சகவாசத்தாலே ஆடிப்பாடி, சம்பாதிச்ச காசை எல்லாம் இழந்துட்டு அம்போன்னு நிக்கிறாளே...' என்று நயன்தாரா பெற்றோர் புலம்புவதாக வரும் தகவல்கள்தான் புதுக்கதை!
''ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் சராசரிகளே மாதத் தவணையை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் பணத்தைக் குவிக்கும் நயன்தாரா,
தவணை கட்ட முடியாமல் தடுமாறுவதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லையே..?'' என நாம் கேட்க... ''நயன்தாரா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே பிரபுதேவாதான்!'' எனச் சொல்லி அதிர வைத்தவர்கள், மேற்கொண்டும் தொடர்ந்தார்கள்.
''சினிமாவில் நடிகர்கள் 10 வருஷங்களுக்கு மேலகூட உச்சத்தில் இருப்பாங்க. ஆனால், நடிகைகள் ஹீரோயினாக பிரகாசிப்பது சொற்ப காலம்தான். இதை நல்லா உணர்ந்தவர் நயன்தாரா. அதனால்தான் சிம்புவின் காதல் வலையில் சிக்காமல் தப்பி கிளாமர் இமேஜைக் காத்துக்கொண்டார். முன்பு இருந்ததைவிட தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தார். எப்போது பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் ஒப்பந்தம் ஆனாரோ... அப்போதே சரிய ஆரம்பித்துவிட்டார்.
நயன்தாராவோட ஒரிஜினல் பெயர் டயானா. அப்பா மிலிட்டரி ஆபீஸர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். நயனோட சகோதரர் துபாயில் வேலை செய்கிறார். கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு ரொம்ப தாராள மனசு. சிம்புவை காதலிச்ச நேரத்தில அடிக்கடி வெளிநாடு ஷூட்டிங் போவாங்க. அப்போ, திடீர்னு சிம்பு ஞாபகம் நயன்தாராவை படுத்தி எடுக்கும். உடனே, சென்னையில் இருந்த அவருக்கு போன் பண்ணி தன்னோட சொந்த காசுல போக, வர ஃப்ளைட் டிக்கெட் போட்டு, காஸ்ட்லியான ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே தங்க வெச்சுக்குவார். அப்போதான், அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அந்யோன்யமா இருக்கிற படங்கள் யார் மூலமாகவோ அத்தனை பத்திரிகைகளுக்கும் போயிடிச்சு. அதனால, ஏற்பட்ட வம்பாலேயே சிம்புவுடனான லவ் முறிஞ்சு போனது.
அதுக்கப்புறம்தான் பிரபுதேவாவோட நெருக்கம் உண்டானது. வழக்கமா பொண்ணுங்களை வசியம் பண்றதுக்கு ஆம்பளைங்கதான் நெக்லஸ், தங்க நகைன்னு பரிசா கொடுப்பாங்க. ஆனா, சமீபத்துல பிரபுதேவாவுக்கு வைரம் பொதித்த காஸ்ட்லியான செயினை வாங்கி கொடுத்திருக்கார். அதுமட்டுமில்லை... தமிழ், மலையாளம், தெலுங்குன்னு சவுத் இந்தியாவுல புகழ்பெற்ற நடிகையா வலம்வந்த நயன்தாரா... பிரபுதேவா சகவாசத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்து வருகிறார். அதுக்குக் காரணமே நயன்தாரா நடிக்கிற படங்களோட கதைகளை, அதிலும் கிளாமர் காட்சிகள் இல்லாத கதைகளை, மட்டுமே பிரபுதேவா செலக்ட் செய்கிறார். சம்பளத்தையும் அவர்தான் நிர்ணயம் செய்கிறார். அதோடு, 'நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நானும் வருவேன்' என்று கண்டிஷன் போடுகிறார். இது நயன்தாராவுடன் நடிக்கும் ஹீரோக்களை நெளிய வைக்கிறது.
தமிழில் தற்போது 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். கொஞ்ச நாளைக்கு முன்பு அந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. அங்கே நயன்தாராவோடு பிரபுதேவாவும் போனார். அங்குள்ள ஹோட்டலில் தாராவுடன் தங்கினார். டைரக்டர் மறுநாள் எடுக்கும் காட்சியைப்பற்றி விளக்கிச் சொல்வதற்கு எத்தனையோ முறை முயன்றும் ஹீரோயினை நெருங்க முடியவில்லை. அதோட ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வந்து பிரபுதேவா அங்குள்ள கேரவனில் உட்கார்ந்துகொண்டார். எடுக்கப் போற ஸீன் பற்றி டைரக்டர் ஒரு தடவை சொன்னாலே... கற்பூரமாகப் பிடித்துக் கொள்ளும் நயன்தாரா கும்பகோணம் ஷூட்டிங்க்ல டேக் மேல டேக்கா வாங்கினாங்க. அடுத்த காட்சி பற்றி டைரக்டர் சொல்ல வர... இவரோ கேரவனுக்குள் போய்விட்டார். இந்த மாதிரி தொல்லைகளாலே நயன்தாராவை ஒப்பந்தம் பண்ண பலரும் பயப்படுறாங்க!'' என்றவர்கள், க்ளைமாக்ஸ் விஷயத்துக்கு வந்தார்கள்.
''கடந்த ஏழாம் தேதி இயக்குநர் சித்திக் மகளுக்கு கொச்சினில் கல்யாணம் நடந்தது. அதுக்கு பிரபுதேவாவோட ஜோடியா போனார் நயன்தாரா. 'நயன்தாரா'ங்கிற பேர்ல இன்டர்நேஷனல் டான்ஸ் ஸ்கூல் ஒன்றை பிரபுதேவா ஆரம்பிக்கப் போறார். மிகப் பெரிய அளவில திட்டமிடப்பட்டிருக்கிற அந்த ஸ்கூலுக்கு முழு ஒத்துழைப்பையும் தர நயன் ஓகே சொல்லிட்டாங்க. நல்லபடி சம்பாதிச்சாலும் நயனோட பணமெல்லாம் இந்த மாதிரி திசை தெரியாம செலவாகிட்டு இருக்கு. பி.எம்.டபிள்யூ கார் வாங்க நயனுக்கு ஆசையே இல்லை. மனசுக்குப் பிடிச்சவங்களை சந்தோஷப்படுத்துறதுக்காகத்தான் அந்த காஸ்ட்லியான காரை வாங்கினாங்க. அதுக்கான தவணையை அவங்க கட்டாததால், கடன் கொடுத்தவங்க வீடு வரைக்கும் தேடி வந்தது, நயனோட பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திடிச்சு. இதுக்கிடையில் 'இச்' பட ஷூட்டிங்குக்காக வருகிற 20-ம் தேதி ஃபிரான்ஸ் போக இருக்கிறார் பிரபுதேவா. அவருடன் நயன்தாராவும் சைலண்டாக கிளம்பப் போவதாக தகவல் இருக்கிறது. நயன்தாராவை நம்பி புக் பண்ணியவர்கள் என்ன கதியாகப் போகிறார்களோ?'' என்றார்கள் பெருமூச்சுடன்.
நயன்தாரா - பிரபுதேவா ஜோடிக்கு நெருக்கமானவர் களிடம் இதுகுறித்துக் கேட்டால்... ''அப்படியெல்லாம் எதுவுமே இல்லை! மேலும் மேலும் இந்த விவகாரத்தை ஊதிவிடும் சிலருக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது!'' என்று பலமாக மறுக்கிறார்கள்!
|
No comments:
Post a Comment