தாய்லாந்து நாட்டின் தலைநகராக பாங்காக் தேர்ந்தெடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்நாட்டின் தலைநகராக இருந்தது, அயுத்தயா என்ற அழகிய நகரம். கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம், சுற்றுலா தலமும் கூட. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இயற்கை பேரழிவுகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. அதுவும், சமீப காலமாக, மழை அங்கு கொட்டோ கொட்டு என கொட்டித் தீர்க்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள், வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த வெள்ள நீர், நிரந்தரமாக தேங்கிக் கிடக்கிறது. அயுத்தயா நகரில் உள்ள மிருககாட்சி சாலை, பண்ணை ஆகியவற்றில் இருந்த ஏராளமான முதலைகள், கரைபுரண்டோடும் வெள்ளத்தை பயன்படுத்தி, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டன.
அந்த முதலைகள், நகரின் பல பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தண்ணீரில் இஷ்டத்துக்கு சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் வருவோரை, முதலைகள் பதம் பார்த்து விடுகின்றன. முதலை பீதி காரணமாக, அயுத்தயா நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே, தாய்லாந்து அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயிருடன் சுற்றித் திரியும் முதலைகளைப் பிடிக்க உதவி செய்யும் பொது மக்களுக்கு, 2,000 ரூபாய் பரிசு தரப்படும் என, அறிவித்துள்ளது.
|
No comments:
Post a Comment